"ஐயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

196 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
2409:4072:90F:E60C:0:0:199E:A8ADஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(Added content)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (2409:4072:90F:E60C:0:0:199E:A8ADஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[படிமம்:Ayyanar idols near Gobichettipalayam.jpg|thumb|right|300px|ஐயனார்]]
'''ஐயனார்''' அல்லது '''அய்யனார்''' ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். ஐயனார் [[ஆசீவகம்]] சமயத்தை தோற்றுவித்தவர் ஆவார். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு [[தமிழர்]] இடையே இருந்து வருகிறது. குறிப்பாக [[மதுரை]]யிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் [[சிறுதெய்வ வழிபாடு]] என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
 
ஐயனார் வழிபாடு பிராமணிய [[இந்து சமயம்|இந்து சமய]] வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.
 
[[சிவன்|சிவனுக்கும்]] மோகினி உருவத்தில் இருந்த [[விஷ்ணு]]வுக்கும் பிறந்தவர் ஐயனார்.{{cn}}
[[File:கீழ்ப்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வர அய்யனார் கோயில்.jpg|thumb|கீழ்ப்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வர அய்யனார் கோயில்]]
 
==தோற்றம்==
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் [[பிட்சாடனர்]] உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
==வடிவம்==
[[File:Ayyanar on elephant side view.jpg|thumb|யானை மீது அமர்ந்திருக்கும் ஐயனார்]]
ஐயனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் [[பூணூல்]] அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார்,
இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.
கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.
 
 
 
==தேவியர் இருவர்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2576765" இருந்து மீள்விக்கப்பட்டது