"தாமசு ஆல்வா எடிசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
== முதல் ஒலிவரைவி கண்டுபிடிப்பு ==
[[படிமம்:Edison and phonograph edit1.jpg|thumb|250px|left|ஒலிவரைவியுடன் எடிசன்]]
1877 இல் எதிர்பாரதவாறுஎதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும். பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப் பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!
 
எடிசன் அடுத்து ஓர் உருளை மீது தகரத் தாளைச் சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் ஒலிவரைவி [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் இவரது ஒலிவரைவி ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர பத்தாண்டுகள் ஆயின.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2576793" இருந்து மீள்விக்கப்பட்டது