ஆதித்தர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி cat
வரிசை 1:
'''ஆதித்தர்கள்''' என்பது [[வேதகாலம்|வேதகாலத்தில்]] சிறப்பாக வணங்கப்பட்ட ஒரு கடவுளர் (தேவர்) குழுவைக் குறிக்கின்றது. இந்த [[அண்டம்|அண்டத்தையும்]], மனித சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகின்ற விதிகளுக்குக் கொடுக்கப்பட்ட உருவகங்களே ஆதித்தர்கள் என [[இந்து சமயம்|இந்துத்]] தத்துவவியலாளர்கள் கூறுகின்றனர். [[காசிபர்]] - [[அதிதி]] இணையர்களின் புதல்வர்கள் ஆதித்யர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
 
ஆதித்தர்களின் எண்ணிக்கை என்றும் ஒரேயளவாகவே இருந்ததாகத் தெரியவில்லை. வேதங்களில் இவர்களை பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்துக்களின் மிகப் பழைய வேதமான [[ரிக் வேதம்]] ஆறு ஆதித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. [[பிராமணங்கள்]] எட்டு வரையான ஆதித்தர்களைப் பற்றிக் கூறுகின்றன. இதற்குப் பின்வந்த நூல்களில் கூடிய அளவாகப் பன்னிரண்டு தேவர்கள் ஆதித்தர் குழுவில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இறுதியாக சதவாத பிராமனதின்படி மொத்தம் 33,000,000 ஆதித்யர்கள் உள்ளதாக கூறப்படுகிறது{{cn}}. விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், [[அம்சன்]], [[ஆர்யமான்]], [[பாகன்]], [[துத்தி]], [[மித்திரன்]], [[புஷன்]], [[சக்ரன்]], [[சாவித்திரன்]], [[துவச்த்திரன்]], [[வருணன்]], [[விஷ்ணு]], [[விவஸ்வத்]] ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வரிசை 10:
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
[[பகுப்பு:புராணக்இந்து கதைமாந்தர்தொன்மவியல் மாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்தர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது