தக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சிNo edit summary
சி (cat)
|children= [[அதிதி]], [[திதி]], [[தாட்சாயிணி|சதி]], [[சுவாகா]], [[சுவேதா]], [[ரோகிணி]], [[இரேவதி]]}}
 
'''தட்சன்''' [[பிரஜாபதி]]களில் ஒருவர். இவர் [[பிரம்மா]]வின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் [[பிரசூதி|பிரசுதி]]. இவர்களுக்கு மகள்களாக பல பேரை வேதங்கள் கூறுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் [[அதிதி]], [[திதி, புராணம்|திதி]], [[தனு, புராணம்|தனு]], [[கலா]], [[தனயு]], [[சின்ஹிகா]], [[குரோதா]], [[பிரதா]], [[விஸ்வா]], [[வினதா]], [[கபிலா]], [[முனி, புராணம்|முனி]], [[கத்ரு]], [[தாட்சாயினி]], [[ரோகிணி]], [[ரேவதி]] மற்றும் [[கார்த்திகை]] உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், ரதி இன்னும் பல பேர்.
 
இதில் [[தாட்சாயினி]] இவரின் விருப்பத்திற்கு மாறாக [[சிவன்|சிவனை]] திருமணம் செய்துகொண்டமையால், தட்சன் செய்த மகா வேள்விக்கு இவர்களை அழைக்காமல் அவமதித்தான். அது மட்டுமன்றி சிவனுக்கு கொடுக்கவேண்டிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான். இதன் விளைவாக சிவனால் ஏவப்பட்ட வீரபத்திரனும், தேவியால் அனுப்பப்பட்ட பத்ரகாளியும் யாகசாலையை அழித்து தட்சனையும் கொன்றனர். மற்ற மகள்களான 27 நட்சத்திரங்களும் [[சந்திரன் (நவக்கிரகம்)|சந்திரனை]] மணந்தனர். [[இரதி தேவி|ரதி]], [[காம தேவன்|மன்மதனை]] மணந்தார்.
 
==தட்சப் பிரசாபதி மகள்களின் வம்சாவளியினர்==
தக்கனுக்குப் பிறந்த அறுபது பெண்களில், [[தாட்சாயினி|தாட்சாயினியை]] [[சிவன்|சிவபெருமானுக்கும்]], பத்துப் பேரைத் [[எமன் (இந்து மதம்)|எமதருமனுக்கும்]], பதின்மூன்று பேரை [[காசிபர்|காசியப முனிவருக்கும்]], இருபத்தேழு பெண்களை சோமன் எனும் [[சந்திர தேவன்|சந்திரனுக்கும்]], [[இரதி தேவி|ரதியை]] [[காம தேவன்|மன்மதனுக்கும்]], மீதிப் பெண்களை அரிஷ்டநேமி, வாஹுபுத்திரர், ஆங்கீரஸர், கிரிசஷ்வர் ஆகிய முனிவர்களுக்கு மணம் செய்வித்தான்.
 
[[எமன் (இந்து மதம்)|எமதர்மனுக்கு]] மணம் செய்வித்த பத்து மகள்களில் [[அருந்ததி|அருந்ததியின்]] மக்கள் உலகில் சிறப்பு பெற்றவர்கள்.
 
வாசுவின் மக்கள் [[அஷ்ட வசுக்கள்|வசுக்கள்]] என்பர். அவர்களில் அனலனின் மகன் குமரன். கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குமரன் [[முருகன்|கார்த்திகேயன்]] எனப்பட்டான்.
 
பிரபசாவின் மகன் தேவலோக சிற்பி [[விசுவகர்மா]].
 
சாத்யாவின் மக்கள் சாத்திய தேவர்கள்.
 
விஸ்வாவின் மக்கள் விச்வதேவர்கள்.
 
சந்திரன் மனைவிகள் 27 பெண்கள், நக்ஷத்திரங்கள்.
 
[[அதிதி]]-[[காசிபர்]] தம்பதியரின் மக்கள் [[ஆதித்தர்கள்]] ஆவர்.
 
[[திதி, புராணம்|திதி]] -[[காசிபர்]] தம்பதியரின் மக்கள் [[இரணியன்]], [[இரணியகசிபு]] தைத்தியர்கள் போன்ற [[தைத்தியர்கள்]].
 
[[தனு, புராணம்|தனு]]வின் புத்திரர்கள் [[தானவர்கள்]].
 
அரிஷ்டாவின் புத்திரர்கள் [[கந்தர்வர்|கந்தர்வர்கள்]].
 
காசாவின் மக்கள் [[யட்சினி]]கள் மற்றும் [[யட்சர்|யட்சர்கள்]].
 
[[சுரசை, புராணம்|சுரசை]]யின் மக்கள் பசுக்கள், எருமைகள்
 
[[வினதா|வினிதாவின்]] மக்கள் [[அருணன்]] மற்றும் [[கருடன் (புராணம்)|கருடன்]].
 
தாம்ராவின் ஆறு பெண் மக்களிடமிருந்து ஆந்தைகள், கழுகுகள், ராஜாளிகள், காக்கைகள், நீர்ப்பறவைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள்.
 
குரோதவஷையின் ஆயிரக்கணக்கான மக்கள் பாம்புகள் தோன்றின.
 
இளைக்கு மரம், கொடி, புதர் போன்றவை தோன்றின.
 
[[கத்ரு|கத்ருவின்]] மக்களாகிய [[நாகர்|நாகர்களில்]] [[அனந்தன்]], [[வாசுகி]], [[தட்சகன்]], [[நஹுசன்]], [[ஆதிசேஷன்]], [[கார்க்கோடகன்]], [[குளிகன்]], [[சங்கபாலன்]], [[பத்மன்]] ஆகியோர் முக்கியமானவர்கள்.
 
[[முனி, புராணம்|முனி]]க்கு [[அரம்பையர்கள்]] பிறந்தனர்.
[[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:புராணக்இந்து கதைமாந்தர்தொன்மவியல் மாந்தர்]]
18,239

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2577377" இருந்து மீள்விக்கப்பட்டது