"இரா. எட்வின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

86 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
cat
சி (cat)
 
|}}
 
'''இரா. எட்வின்''' மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், தொழிற்சங்கத் தலைவர், கலை இலக்கியச் சமூகச் செயற்பாட்டாளர், கல்வியாளர் என்னும் பன்முக ஆளுமைகொண்டவர்.
 
==பிறப்பு ==
இரா. எட்வின் 1963 ஆம் ஆண்டு சூன் 20 <ref name = "edwin"> https://www.facebook.com/eraaedwin/about </ref> ஆம் நாள் கணக்கு ஆசிரியர் பொன். இராசரத்தினம் - எலிசபெத் இணையருக்குத் தலைமகனாகப் பிறந்தார்.
 
== கல்வி ==
இரா. எட்வின் [[திருச்சிராப்பள்ளி|திருச்சிராப்பள்ளியில்]] உள்ள பிசப் கீபர் மேல்நிலைப்பள்ளியில் (Bishop Heber Higher Secondary School) பள்ளிப் படிப்பை [[1980]]ஆம் ஆண்டில் முடித்தார். பின்னர் திருச்சியில் உள்ள [[பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி|பிசப் கீபர் கல்லூரியில்]] (Bishop Heber College) பயின்று ஆங்கில இலக்கியத்தில் [[1983]]ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டமும் [[1985]] ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டமும் பெற்றார். <ref name = "edwin"/> [[புதுக்கோட்டை]] அரசு கல்வியியல் கல்லூரியில் பயின்று [[1986]] ஆம் ஆண்டில் கல்வி இளவர் பட்டமும் பெற்றார். அப்பொழுது மேன்மைமிகு மன்னர் கல்லூரியில் பணியாற்றிய புதுக்கவிஞரும் திறனாய்வாளருமான [[ஆர். பாலச்சந்திரன்|பாலாவிடம்]] இவர் இலக்கிய நுட்பங்களைப் பயின்றார்.
 
== பணி ==
[[பெரம்பலூர்|பெரம்பலூரில்]] உள்ள தந்தை ரோவர் கல்லூரியில் விரிவுரையாளராக தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய எட்வின், [[சமயபுரம்| சமயபுரத்தில்]] உள்ள அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றுகிறார்.
 
== அரசியல் தொடர்பு ==
சமுதாய மாற்றத்தில் ஆர்வமுடைய எட்வின், மாணவப் பருவத்திலேயே [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)| இந்தியப் பொதுடைமைக் கட்சி (மார்க்சியம்)யால்]] ஈர்க்கப்பட்டார். நீண்ட காலமாக அக்கட்சியில் உறுப்பினராக இருந்த அவர் கருத்துவேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
 
== தொழிற்சங்கத் தலைவர் ==
 
==எழுத்துப்பணி ==
ஆங்கில இலக்கியம் பயின்ற எட்வின் மாணவப் பருவத்திலே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய படைப்புகள் [[தீக்கதிர்]] இதழின் இலக்கியப் பிரிவான வண்ணக்கதிர் பகுதியில் தொடர்ந்து வெளிவரலாயின. இவர் எழுதிய ஐக்கூ ஒன்றினை [[மீரா (கவிஞர்)|கவிஞர் மீரா]] தனக்குப் பிடித்த நவஐக்கூ என்னும் ஒன்பது ஐக்கூகளில் இரண்டாவது ஐக்கூ கவிதை எனக் குறிப்பிட்டு உள்ளார்.
 
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுடு)யின் கலை இலக்கியப் பிரிவான [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் | தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில்]] இணைந்து செயலாற்றினார். பின்னர் அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
 
மின்னணு ஊடகத்தின் பெருக்கத்திற்குப் பின்னர் “நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை” என்னும் வலைப்பூவைத் தொடங்கி தனது படைப்புகளைத் தொடர்ந்து பதிவிடும் பதிவராக (Blogger) வினையாற்றுகிறார். அவ்வாறு அவ்வலைப்பூவில் எழுதப்பட்ட பதிவுகளைத் தொகுத்து பின்வரும் மூன்று நூல்களாக வெளியிட்டுள்ளார்.
 
== இதழ்ப்பணி==
[[2011]] [[அக்டோபர் 1]] ஆம் நாள் முதல் சென்னையில் இருந்து வெளிவரும் [[காக்கைச் சிறகினிலே (இதழ்)|காக்கைச் சிறகினிலே]] இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பொறுப்புவகிக்கிறார். <ref name = "a">காக்கைச் சிறகினிலே, இறக்கை:1 இறகு:1, அக்டோபர் 2011, பக்.01</ref>
 
==சான்றடைவு ==
<references/>
 
[[பகுப்பு: 1963 பிறப்புகள்]]
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்ட எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: பெரம்பலூர் மாவட்ட எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2578254" இருந்து மீள்விக்கப்பட்டது