வே. தில்லைநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி cat
வரிசை 1:
 
{{Infobox Writer
| name = வே.தில்லைநாயகம் (வேதி)
வரி 30 ⟶ 29:
| portaldisp =
}}
''வேதி'' என்று அழைக்கப்படும் '''வே. தில்லைநாயகம்''' (சூன் 10, 1925 - மார்ச் 11, 2013) தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர். [[கன்னிமாரா பொது நூலகம் | கன்னிமாரா பொதுநூலகத்தின்]] முதல் தொழில்புரி (Professional) நூலகர்; தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்புரி நூலக இயக்குநர். <ref name = “two”"two"/>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[தேனி மாவட்டம்]] [[சின்னமனூர்|சின்னமனூரில்]] [[1925]] ஆம் ஆண்டு [[சூன் 10]] நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி - அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார்.<ref name = “one”"one"> நூலக வித்தகர் எழுபது, (பதி) கனக அரிகரவேலனும் பிறரும், 1995 </ref> சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார் (1931- 1938). உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் (1938 – 1943) பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை [[அமெரிக்கன் கல்லூரி]]யில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் பெற்றார். <ref name = “two”"two"> VETHIANA (Ed.) Arulvelan and Anbarasi, Gomathi Pathipagam, Cumbum, 2005 </ref> தமிழறிஞர் [[ஆ. கார்மேகக் கோனார்]], ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார்.
 
[[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] பயின்று நூலக அறிவியல் பட்டயமும் (1949-50), நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியலில் முதுவர் பட்டமும் (1953_55), மதுரை [[தியாகராசர் கலைக்கல்லூரி|தியாகராசர் கல்லூரி]]யில் கல்வி இளவர் பட்டமும் (1957-58) நிறைவு செய்தார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியலில் முதுவர் பட்டமும் (1961-62) பெற்றார். [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] பயின்று பிரான்சு (1955-56), ஜெர்மன் (1956 - 57) மொழிகளில் சான்றிதழ்களும் பெற்றார். [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] பயின்று சோதிடத்தில் சான்றிதழும் பெற்றார். <ref name = “two”"two"/>
 
==நூலகத் துறையில் ஈடுபாடு==
 
மாணவப் பருவத்திலேயே (1936 மே 20) நூலகத் தொடர்பு பெற்றவர்.. <ref name = “one”"one"/> [[1949]] ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்று பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் (1949 சூலை 18 - 1962 திசம்பர் 12 பிற்பகல்) ஆனார். [[1962]] திசம்பர் 12 பிற்பகலில் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். [[1972]] சூலை 31ஆம் நாள் பிற்பகலில் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து [[1982]] ஆகத்து 31 ஆம் நாள் ஓய்வு பெற்றார். <ref name = “three”"three"> வேதி:வாழ்வும் சிந்தனையும், கனக அரிஅரவேலனும் நிரஞ்சனா அருள்வேலனும், சபாபதி பதிப்பகம், சின்னமனூர், 2017 </ref> விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந்தவர் இவர் ஒருவரே ஆவார்.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/thillai-nayagam-dead/article4499297.ece</ref> தேசிய, மாநில பல்கலைக்கழக நூலக குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.
 
நூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற இவரது ஆட்சிக்காலம், தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். எனவேதான் இந்திய நூலகத்துறை முன்னோடி அரங்கநாதனின் ஏகலைவ மாணவரான இவரைத் தமிழக பொதுநூலக இயக்கத்தின் தந்தை எனப் புகழ்கின்றனர்.
வரி 124 ⟶ 123:
 
== பிற ==
வே. தில்லைநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை "வேதி: வாழ்வும் சிந்தனையும்" என்னும் தலைப்பில் கனக அரிஅரவேலன், நிரஞ்சனா அருள்வேலன் ஆகியோர் நூலக எழுதி 2017 ஆகத்து 6ஆம் நாள் சின்னமனூரில் வெளியிட்டனர். <ref name ="four"> தி இந்து, 08-08-2017 தேனி பக்.3 </ref>
 
தமிழ்நாட்டரசு பொதுநூலகத்துறையின் சின்னமனூர் கிளையில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் வே. தில்லைநாயகத்தின் படத்தை விருபா.காம் நிறுவுநர் து. குமரேசன் திறந்து வைத்தார். <ref name ="five"> தினமலர், 07-08-2017 தேனி பக்.2 </ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 139 ⟶ 138:
 
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
[[பகுப்பு: 2013 இறப்புகள்]]
[[பகுப்பு: எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
வரி 147 ⟶ 145:
[[பகுப்பு:தமிழ் நூலகவியலாளர்கள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு: தேனி மாவட்ட எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நூற்பட்டியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வே._தில்லைநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது