உரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
சட்டமெய்யியல், [[சட்டம்]] ஆகியவற்றில், '''உரிமை''' என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது [[ஒழுக்கநெறி]]ப்படி; செயல், பொருள், ஏற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில்; செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ஆகும். உரிமைகள் மக்களிடையேயான தொடர்பாடலுக்கான விதிகளாக அமைவதால், அவை தனிமனிதர் மீதும், குழுக்கள் மீதும் கடமைகளையும்[[கடமை]]களையும் கட்டுப்பாடுகளையும்[[கட்டுப்பாடு]]களையும் விதிக்கின்றன. எடுத்துக் காட்டாக ஒருவருக்கு [[வாழும் உரிமை]] உண்டெனில், மற்றவர்களுக்கு அவரைக் கொல்லும் சுதந்திரம் கிடையாது.
 
உரிமைகள் குறித்த மிகப் பிந்திய கருத்துருக்கள், எல்லாம்தழுவிய சமத்துவ நோக்கம் கொண்டவை. அதாவது, எல்லோருக்கும் [[சம உரிமை]] என்பவை. உரிமைகள் தொடர்பாக தற்காலத்தில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் நிலவுகின்றன. ஒன்று, [[இயல்புரிமை]] என்னும் கருத்துரு ஆகும். இது, சில உரிமைகள் இயற்கையாக அமைந்தவை அதில் எந்த மனித சக்தியும் முறையாக மாற்றம் செய்ய முடியாது என்கிறது. இரண்டாவது, [[சட்ட உரிமை]] என்னும் கருத்துரு. இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக்கப்படுவதும், அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படுவதும், மாற்றங்களுக்கு உட்படக்கூடியதுமான மனித உருவாக்கம் என்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/உரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது