மனித வளர்ச்சி (பொருளியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
== அளவீடு ==
மனித வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ள அல்லது அளவீடு செய்வதற்கு ஐ.நா சபை ஏற்படுத்திய [[ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்]] மூலம் உருவாக்கப்பட்டது தான் [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|மனித வளர்ச்சி குறியீட்டு எண்]] Human Development Index (HDI). இந்த குறியீட்டெண், பிறக்கும்போது கணிக்கப்படும் [[ஆயுள் எதிர்பார்ப்பு]], கல்வி கற்றல் குறியீடு (கல்வி கற்ற ஆண்டுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் கல்வி கற்கும் ஆண்டுகள் ஆகியவற்றின் சராசரி ஆண்டுகள்) மற்றும் மொத்த தேசிய வருமானத்தின் மூலதன சராசரி ஆகியவற்றின் மூலம் HDI கணக்கிடப்படுகிறது. இந்த அளவீடானது, மனித திறமைகளின் பங்களிப்பு குறித்து முழுமையாக கணக்கிடவில்லையென்றாலும், உலக நாடுகள் அனைத்திலும் உள்ள பல்வேறு சமூதாயத்தில் மனித திறனை அளவிடுவதற்கான தரநிலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளை வளர்ப்பதற்காகும் செலவு அல்லது பண்டமாற்று பொருட்கள் / சேவைகள், அதே போல் தனிநபர்களின் சொந்த நல்வாழ்வு பற்றிய கருத்துக்கள் போன்றவைகள் மனித வளர்ச்சிக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாத வருவாயகள்.மனித வளர்ச்சியின் பிற நடவடிக்கைகளுக்கான அளவீடுகள் மனித வறுமை குறியீட்டெண் (HPI) மற்றும் பாலின அதிகாரமளிப்பு அளவையும் உள்ளடக்கியதாகும். இது வளர்ச்சிக்கு பல அம்சங்களை அளிக்கும்.
 
== மனித வளர்ச்சி குறியீட்டு எண் ==
"https://ta.wikipedia.org/wiki/மனித_வளர்ச்சி_(பொருளியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது