பராசர பட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
==பெயர் காரணம்==
 
சுபகிருத் என்ற தமிழ் ஆண்டில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில், இராமானுசரின் முதன்மை சீடரான [[கூரத்தாழ்வார்|கூரத்தாழ்வாரின்]] மூத்த மகனாக பிறந்தார். இளையவர் [[வேத வியாச பட்டர்|வேத வியாச பட்டர்]]. குருபரம்பரையில் அவருடைய பிறப்பைப் பற்றிச் சொல்லப்படும் கதை வெகு சுவையானது. [[ஸ்ரீரங்கம்|ஸ்ரீரங்கத்தில்]] தன் வழக்கப்படி பிட்சைக்காக செல்லவேண்டிய கூரத்தாழ்வான் கொடு மழையால் வெளியில் போகமுடியாமல் இருந்தார். அவரும் அவருடைய மனைவியார் ஆண்டாளும் அன்று பட்டினி. ஆனால் அவர்கள் பக்தியுடன் போற்றி வந்த அரங்கநாதப் பெருமாள் (ஸ்ரீரங்கம் கோயிலின் மூலவர்) அவர்கள் பட்டினி கிடப்பதைப் பொறுக்காமல் அசரீரியாக கோயிலின் பட்டர் உத்தமநம்பி என்பவர் மூலம் அவர்களுக்கு உணவு அனுப்பி வைத்தார். அதில் மூன்றில் ஒரு பங்கை தான் உண்டு மீதி இரண்டு பங்கை தன் மனைவியான ஆண்டாளை உண்ணச் செய்தார் ஆழ்வார். காலக்கிரமத்தில் ஆண்டாள் இரு மகவை ஈன்றெடுத்தாள். இராமானுசர் தன் குருவான ஆளவந்தாருக்கு செய்துக்கொடுத்த இரண்டாம் வாக்கின்படி விஷ்ணுப்புராணம் பாடிய பராசர முனிவரின் பெயரும், பாகவதம் பாடிய வேதவியாசரின் பெயரும் விளங்குவண்ணம் கூரத்தாழ்வரின் மக்களுக்குள் முதலாமவருக்கு "பராசர பட்டர்" என்றும், இளையவருக்கு "[[வேத வியாச பட்டர்]]" என்றும் பெயரிட்டார்.
 
==ஸர்வக்ஞ பட்டரின் ஆசிர்வாதம்==
"https://ta.wikipedia.org/wiki/பராசர_பட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது