"டாம் சாயரின் சாகசங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,354 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
கதைச் சுருக்கம்
(கதைச் சுருக்கம்)
(கதைச் சுருக்கம்)
டாம் சாயர் தனது அத்தை போலி மற்றும் அவனது சகோதரன் சித் உடன் வசித்து வருகிறான். அவன் பள்ளிக்குச் செல்லாமல் நீந்துவதற்குச் செல்வதால் அவனுக்கு வீட்டின் மதில்சுவரை வண்ணம் பூசும் தண்டனை கிடைக்கிறது. ஆனால், டாம் புத்திசாலித்தனமாக இந்த வேலையைச் செய்தால் தான் பரிசு கொடுப்பதாக கூறி தனது நண்பர்களை அந்த வேலையைச் செய்ய வைக்கிறான்.
 
டாம் அந்த நகரத்திற்கு புதியதாக வந்த பெக்கி தாட்சரின் மீது காதல் வயப்படுகிறான். அவளும் அந்த காதலை ஏற்றுக்கொள்கிறாள்.ஆனால் டாமிற்கு ஏற்கனவே எமி லாரன்சோடு திருமண உடன்படிக்கை ஏற்பட்டது தெரிந்த பிறகு இவர்களின் காதலில் முறிவு ஏற்படுகிறது. சக மாணவர்களுக்கு இது தெரியவர பெக்கி கவலையடைந்தாள். இதனால் பெக்கி , டாமை வெறுக்கிறாள். அதன்பிறகு டாம் ஹக்கிள்பெரி ஃபின்னுடன் இணைந்து ஒருநாள் இரவு அருகில் இருக்கும் [[இடுகாடு|இடுகாட்டிற்குச்]] செல்கின்றனர். அங்கு பிணத்தை பகரிக்கும் கும்பலான மருத்துவர்.ராபின்சன், மஃப் பாட்டர் மற்றும் இன்சன் ஜோவிற்கும் இடையில் சண்டை நடக்கிறது. இந்தச் சண்டையில் இன்சன் ஜோவினால் ராபின்சன் கொலைசெய்யப்படுகிறார். இதை வேறு யாரிடமாவது கூறினால் ஜோ தங்களையும் கொலை செய்து விட வாய்ப்புள்ளது என பயந்து இந்தக் கொலையை யாரிடமும் சொல்லக் கூடாது என இருவரும் சத்தியம் செய்கின்றனர்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2580998" இருந்து மீள்விக்கப்பட்டது