சிட்னி ஒப்பேரா மாளிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
== அமைப்பு ==
சிட்னி ஒப்பேரா மாளிகை, நவீன வெளிப்பாட்டிய (expressionist) வடிவமைப்புடன் கூடியது. தொடர்ச்சியாக அமைந்த பல காங்கிரீட்டு வளைகூரைகள் வடிவமைப்பின் முக்கியமான கூறுகளாக உள்ளன. இக்கூறுகள் ஒவ்வொன்றும் 75.2 மீட்டர் ஆரமுடைய கோள வடிவத்தின் துண்டுகளால் ஆனது. கட்டிடம் பெரிய அளவிலான மேடை போன்ற அமைப்பின் மேல் நிறுவப்பட்டுள்ளது. 1.8 எக்டேர் (4.4 ஏக்கர்) நிலப்பரப்பில் அமைந்த இக்கட்டிடம் 183 மீட்டர்கள் (600 அடி) நீளமும், 120 மீட்டர்கள் (394 அடி) அகலமும் கொண்டது. கடல் மட்டத்துக்குக் கீழ் 25 மீட்டர்கள் (82 அடி) வரை செல்லும் காங்கிறீட்டு நிலத்தூண்களுக்கு மேல் அமைக்கப்பட்ட 588 காங்கிறீட்டுத் தூண்கள் இக்கட்டிடத்தைத் தாங்குகின்றன.
 
இதன் கூரை ஓடக (shell) அமைப்புக் கொண்டது எனப் பரவலாகக் குறிப்பிடப்பட்டாலும், அது உண்மையில் முன்தகைப்புக் காங்கிறீட்டினால் ஆன விலா வளைகளின்மீது தாங்கப்பட்ட முன்தகைப்புக் காங்கிறீட்டுத் தகடுகளால் ஆனது. தொலைவில் இருந்து பார்க்கும்போது கூரை ஒரே தன்மையான வெண்ணிறமாகத் தெரிந்தாலும், உண்மையில் அதன் மேற்பரப்பு, பளபளப்பான வெள்ளை, மங்கலான இளமஞ்சள் ஆகிய நிறங்களாலான 1,056,006 ஓடுகள் பதித்து உருவாக்கப்பட்ட "V" வடிவ வரிசைக் கோல அமைப்புக் கொண்டது. மேற்படி ஓடுகள் சுவீடன் நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது.
 
== நிகழ்ச்சிகளுக்கான இடங்களும் வசதிகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிட்னி_ஒப்பேரா_மாளிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது