தெங்கிரி மதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 6:
 
மங்கோலிய மொழியில் ''குக் தெங்கிரி'' என்பதன் பொருள் "நீல வானம்" ஆகும். மங்கோலியர்கள் இன்றும் ''முன்க் குக் தெங்கிரியை'' ("எல்லையற்ற நீல வானம்") பிரார்த்தனை செய்கின்றனர். சில நேரங்களில் மங்கோலியா செய்யுள் நடையில் "எல்லையற்ற நீல வான நிலம்" (''முன்க் குக் தெங்கிரீன் ஓரோன்'') என்று மங்கோலியர்களால் அழைக்கப்படுகிறது. நவீன துருக்கியில், தெங்கிரி மதம் ''கோக்தன்ரி தினி'' ("வான் கடவுள் மதம்") என்று அழைக்கப்படுகிறது;<ref>{{cite book |url={{Google books |plainurl=yes |id= CORMAAAAMAAJ }} |title=Eski Türk dini (gök tanrı inancı) ve Alevîlik-Bektaşilik |author=Mehmet Eröz | date=2010-03-10 |accessdate= 2013-02-19}}</ref> துருக்கியச் சொற்களான "கோக்" (வானம்) மற்றும் "தன்ரி" (கடவுள்) முறையே மங்கோலியச் சொற்களான ''குக்'' (நீலம்) மற்றும் ''தெங்கிரி'' (வானம்) உடன் பொருந்துகின்றன. ஹங்கேரிய தொல்பொருள் ஆய்வின்படி, கி.பி. 10ம் நூற்றாண்டு இறுதி வரை (கிறித்தவ மதத்திற்கு முன்பு) ஹங்கேரியர்களின் மதம் தெங்கிரி மதம் ஆகும்.<ref name= 'Fodor 2006'>Fodor István, [http://silver.drk.hu/MVT/letolt/vt6.pdf A magyarok ősi vallásáról (About the old religion of the Hungarians)] Vallástudományi Tanulmányok. 6/2004, Budapest, p. 17–19</ref>
 
==பின்னணி==
 
[[File:Guyuk khan's Stamp 1246.jpg|thumb|left|[[திருத்தந்தை]] நான்காம் இன்னோசன்டுக்கு [[குயுக் கான்]] எழுதிய கடிதத்தில் இருந்த முத்திரை, 1246. முதல் நான்கு சொற்கள், மேல் இருந்து கீழ், இடம் இருந்து வலம், "மோங்கே தெங்கிரி-யின் குச்சுந்துர்" – "''எல்லையற்ற சொர்க்கத்தின் சக்தியின் கீழ்''".]]
 
[[File:Orkhon.svg|thumb|alt=Runic-looking letters|பழைய துருக்கிய எழுத்துக்களில் ''தெங்கிரி'' (வலம் இருந்து இடமாக ''ட்²ன்ர்²இ'' என எழுதப்பட்டுள்ளது)<ref>{{Cite book | last=Tekin | first=Talat | title=Irk bitig (the book of omens) | place=Wiesbaden | publisher=Otto Harrassowitz | year=1993 | isbn=978-3-447-03426-5 | page=8 }}</ref>]]
 
[[File:Kurşun dökme (Dropping lead onto one's head).png|thumb|alt=Three photos of something being ladled into a bowl over a covered person|துருக்கியில் ''குர்சுன் டோக்மே'']]
 
தெங்கிரி மதத்தினர் தாங்கள் வாழக் காரணம் எல்லையற்ற நீல வானம் (தெங்கிரி), வளமான தாய்-பூமி ஆன்மா (எஜே) மற்றும் வானத்தின் தூய ஆன்மாவாகக் கருதப்படும் ஆட்சியாளர் ஆகியோர் என நினைக்கின்றனர். சொர்க்கம், பூமி, மற்றும் இயற்கை மற்றும் முன்னோர்களின் ஆன்மாக்கள் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து அனைத்து மனிதர்களையும் காப்பதாகக் கருதுகின்றனர். நேர்மையான, மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஒரு மனிதன் தன் உலகத்தை சமநிலையிலும், தன் தனிப்பட்ட காற்றுக் குதிரை அல்லது ஆன்மாவை சரியாக ஆக்கவும் முடியும் எனக் கருதுகின்றனர். வடக்குக் காக்கேசியாவின் ஹூனர்கள் இரு கடவுள்களில் நம்பிக்கை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது: தங்கிரி ஹான் (அல்லது தெங்கிரி கான்) மற்றும் குவர். இதில் தங்கிரி ஹான் பாரசீகக் கடவுளான அஸ்பன்டியட்டுடன் ஒப்பிடப்படுகிறார். அஸ்பன்டியட்டுக்கு குதிரைகள் பலியிடப்பட்டன. குவர் மின்னலால் தண்டிப்பதாக கருதப்பட்டது.<ref name="Hungarians & Europe"/> சகா குடியரசு, புர்யாத்தியக் குடியரசு, துவா மற்றும் மங்கோலியாவில் தெங்கிரி மதம் திபெத்தியப் புத்தமதம் மற்றும் புர்கான் மதத்துடன் இணையாகப் பின்பற்றப்படுகிறது.<ref>Balkanlar'dan Uluğ Türkistan'a Türk halk inançları Cilt 1, Yaşar Kalafat, Berikan, 2007</ref>
 
''கிர்கிஸ்'' என்றால் "நாங்கள் நாற்பது" என்று கிர்கிஸ் மொழியில் பொருள். கிர்கிசுத்தானின் கொடி 40 சீரான இடைவெளியுடைய கதிர்களைக் கொண்டுள்ளது. பாரசீகத்தின் சசானியப் பேரரசுக்கு எதிராக பைசாந்தியம் மற்றும் கோக்துருக்கியர்கள் இணைந்து போரிட்டபோது தெங்கிரி மதத்தைச் சேர்ந்த கசர்கள் 40,000 வீரர்களை அனுப்பி ஹெராக்லியசுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/தெங்கிரி_மதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது