எயித்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
[[Image:Haitian revolution.jpg|thumb|1802இல் ''ஸ்னேக் கல்லி''யில் நடந்த சண்டை.]]
[[Image:Haitian Revolution.jpg|thumb|1803இல் வெர்டியர்சு சண்டை]]
'''எயித்தியப் புரட்சி ''' அல்லது '''ஹைட்டியின் புரட்சி''' (''Haitian Revolution'', 1791–1804) [[பிரான்சு|பிரெஞ்சுக்]] [[குடியேற்ற நாடு|குடியேற்ற நாடான]] [[செயிண்ட் டொமிங்கு]]வில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டதுடன் [[எயிட்டி]] [[ஆபிரிக்கா|ஆபிரிக்கர்களால்]] ஆளப்பட்ட முதல் [[குடியரசு|குடியரசாக]] மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சி யாகும்புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கிய புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் [[அமெரிக்காக்கள்|அமெரிக்காக்களின்]] எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றியது.
==பின்புலம்==
[[கரிபியன்|கரிபியன் தீவுகளின்]] செல்வச்செழிப்பு ஐரோப்பிய [[சர்க்கரை]]த் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த [[கரும்பு]]த் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். இத்தீவில் காப்பி, கோக்கோ, பருத்தித் தோட்டங்களும் இருந்தபோதிலும் அவை இலாபமீட்டுபவையாக இல்லை.<ref name="Thomas E. Weil 1985">Thomas E. Weil, Jan Knippers Black, Howard I. Blustein, Kathryn T. Johnston, David S. McMorris, Frederick P. Munson, ''Haiti: A Country Study''. (Washington, D.C.: The American University Foreign Area Handbook Series 1985).</ref> 1730களில் பிரெஞ்சு பொறியாளர்கள் சிக்கலான [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசன]] அமைப்புகளை உருவாக்கியதால் கரும்பு உற்பத்தி பெருகியது. 1740களில் செயிண்ட்-டொமிங்குவும் [[ஜமைக்கா]]வும் உலக சர்க்கரை உற்பத்தியில் முதன்மையாளர்களாக விளங்கின. சர்க்கரை உற்பத்திக்கு மனித உழைப்பு மிகவும் தேவையாக இருந்தது; இதற்கு ஆபிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி வந்தனர். சிறுபான்மையினராகவும் மிகுந்த செல்வந்தர்களாகவும் விளங்கிய வெள்ளைக்கார தோட்ட உரிமையாளர்கள் தங்களை விட பத்து மடங்கு பெரும்பான்மையான கருப்பர்களின் எதிர்ப்பை எதிர்பார்த்து அஞ்சினர்.<ref name="brief">{{cite book|first=Jan|last=Rogozinski|year=1999|title=A Brief History of the Caribbean|edition=Revised|publisher=Facts on File|location=New York|pages=85, 116–117, 164–165|isbn=0-8160-3811-2}}</ref><ref name="kreyol-004">{{cite web|url= http://www.kreyol.com/history004.html|title=The Slave Rebellion of 1791|accessdate=27 November 2006}}</ref> இதனால் அடித்து கொடுமைப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றனர். அடிமைகள் இட்ட கட்டளையை மீறினாலோ தப்பி ஓடினாலோ அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓர் படிப்பினையாக இருக்குமாறு கொடுமையான கசையடிகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இது சில நேரங்களில் விரை நீக்கம், கொளுத்துதல் வரை சென்றது. பிரெஞ்சு மன்னர் [[பதினான்காம் லூயி]] இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ''கோட் நாய்ர்'' என்ற ''கருப்பு விதியை'' கொணர்ந்தார். ஆனால் இதனை தோட்டக்காரர்கள் மீறியதோடன்றி உள்ளூர் சட்டங்களால் இவற்றை மாற்றினர்.<ref name="Laurent Dubois 2004">Laurent Dubois, ''Avengers of the New World: The Story of the Haitian Revolution''. (Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press 2004).</ref>
"https://ta.wikipedia.org/wiki/எயித்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது