சேந்தமங்கலம் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளம்: 2017 source edit
வரிசை 21:
 
==கோப்பெருஞ்சிங்க காடவராயன்==
காடவ மன்னன் மணவாளப்பெருமான் கி.பி 1195 ல் சேந்தமங்கலத்தை தலை நகராகத் தோற்றுவித்தான் என்று அவனது 5ம் ஆண்டு ஆட்சிக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவன் இவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் என்பவன்.கோப்பெருஞ்சிங்க காடவராயனைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.வரலாற்று ஆசிரியர் வேங்கட சுப்பையைர் கூற்றுப்படி காடவ மன்னர் கோப்பெருஞ்சிங்கன் இருவரென்றும் அவர்கள் முறையே முதலாம் கோப்பெருஞ்சிங்கன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்கிறார்.இவரின் கருத்தை “கோப்பெருஞ்சிங்கன்”“[[கோப்பெருஞ்சிங்கன்]]” என்ற வரலாற்று நூலை எழுதிய எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் மறுத்துக் கூறி [[திருவண்ணாமலை]] கல்வெட்டுச் சான்றுகளை ஆதாரமாகக்கொண்டு எடுத்துரைக்கிறார். “சோழர்“[[சோழர் வரலாறு”வரலாறு]]” என்ற நூலை எழுதிய வரலாற்றாசிரியர் கூற்றுப்படி கோப்பெருஞ்சிங்கன் கி.பி 1229 முதல் 1278 வரை ஆட்சிபுரிந்தான் எனக் கூறுகிறார்.இக்கருத்தைக் கொண்டு கோப்பெருஞ்சிங்கன் ஒருவனாக இருக்கக்கூடும் எனக்கருதலாம்.மேலும் சேந்தமங்கல்த்தில்சேந்தமங்கலத்தில் 1995 மற்றும் 1996 ம் ஆண்டு நடைபெற்ற தொல்பொருள் ஆய்வின் மூலமும் கிடைத்த சான்றுகளின் மூலமும் மணவாளப்பெருமான் என்ற காடவராயனுக்குப் பிறகு அவனது மகன் ஆட்சிக்குவந்தான் என்பது உறுதியாகிறது.
 
==கோப்பெருஞ்சிங்கனின் போர்ச்செயல்==
மூன்றாம் ராஜராஜ சோழனின் காலத்தில் குறு நில மன்னனாக விளங்கிய கோப்பெருஞ்சிங்கன் வீரமும் சூழ்ச்சியும் மிக்கவன்.பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் கி.பி 1231ல் நடந்த யுத்தத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 3ம் ராஜராஜனை வென்று முடிகொண்ட சோழபுர்த்தில் வெற்றிவிழா கொண்டாடினான்.தோல்வியுற்ற 3ம் ராஜராஜசோழன் போசளமன்னனான வீர நரசிம்மனின் ஆதரவை நாடிச்சென்றபோது இடையில் வழிமறித்து வந்தவாசி வட்டத்திலுள்ள தெள்ளாறு என்ற இடத்தில் கி.பி1231 ல் கோப்பெருஞ்சிங்கன் தன்படையுடன் வந்து 3ம் ராஜராஜசோழனைப் போரில் தோற்கடித்து அவரைத் தனது தலைநகரான சேந்தமங்கலத்தில் ஏறத்தாழ முப்பது நாள்களுக்கு மேலாக தன்னுடைய கோட்டைச் சிறையிலடைத்தான்.மூன்றாம் ராஜராஜனை சிறையிலடைத்த சேதி அறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் கெடிலம் நதிக்கரையிலுள்ள அனைத்து ஊர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியும்,கொள்ளையிட்டும் சேந்தமங்கலத்தை பேரழிவிற்குள்ளாக்கினான். இதனைக் கண்ட கோப்பெருஞ்சிங்கன் ராஜராஜனை விடுவித்து ஆட்சியை விட்டுத்தருவதாக அறிவித்தான்.இச்செய்தியை திருவந்திபுரம் கல்வெட்டு மூலம் அறியலாம்.மீண்டும் ராஜராஜனின் ஆட்சிக்குட்பட்டு ஆண்டுவந்தான்.மீண்டும் கி.பி 1253 ல் பெரம்பலூர் எனுமிடத்தில் போசளருடன் போர்புரிந்து அவர்களை வென்றான்.கி.பி 1255 ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேந்தமங்கலம் கோட்டையை முற்றுகையிட்டான்.இதன்பின் இருவரும் நட்பு உடன்படிக்கை செய்துகொண்டு ஆட்சியை மீண்டும் கோப்பெருஞ்சிங்கனிடம் ஒப்படைத்தான்.ஆனால் கி.பி 1279ம் ஆண்டு [[மாறவர்மன் குலசேகர பாண்டியன்]] சோழ நாடு,திருமுனைப்பட்டி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததின் மூலம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி முடிவுற்றது.அவனோடு காடர்குல ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சேந்தமங்கலம்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது