"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Lissner TroiceSergievaLavr.jpg|thumb|270px|குலிகோவோ போருக்கு முன், ரடோனெசின் செர்கியஸ், டிமித்ரி டொன்ஸ்கோயை, ட்ரினிடி செர்கியஸ் லவ்ராவில் வைத்து ஆசீர்வதிக்கிறார். ஏர்னஸ்ட் லிஸ்னரால் வரையப்பட்ட ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது.]]
 
கீவிய ரசியாவின் வழிவந்த, மிகவும் பலம்வாய்ந்த அரசு மொஸ்கோவின் பெரும் டச்சி ஆகும். (மேலைத்தேய குறிப்புகளில் "மொஸ்கோவி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது).) ஆரம்பத்தில் இது விளாடிமிர்-சுஸ்டாலின் ஒரு பகுதியாக இருந்தது. மொங்கோலிய-தாத்தார்களின் ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்டாலும், அவர்களின் உதவியுடன் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத்திய ரசியாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தது. மேலும், படிப்படியாக, ரசியாவின் ஒன்றிணைவு மற்றும் விஸ்தரிப்புக்கான பிரதான சக்தியாகவும் இது உருவெடுத்தது.
 
மொங்கோலிய-தாத்தார்களின் தொடர் தாக்குதல்களாலும், பனிக்காலத் தொடக்கத்தினால், விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களாலும் துன்பப்பட்டது. ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, பிளேக் நோய் ரசியாவையும் பாதித்தது. 1350இலிருந்து 1490 வரை ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசியாவின் பகுதிகள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டன. எவ்வாறாயினும், குறைந்த சனத்தொகை அடர்த்தி, சிறந்த சுகாதார நடைமுறைகள் (பரவலான, ஈர ஆவிக் குளியல் நடைமுறை) காரணமாக,<ref name=banya>[http://sauna-banya.ru/ist.html The history of banya and sauna] {{ru icon}}</ref> பிளேக் நோயினால் ஏற்பட்ட இழப்புகள், மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்டது போன்று பெரியளவில் ஏற்படவில்லை. 1500 ஆகும்போது ரசியாவின் சனத்தொகை பிளேக் நோய்க்கு முன்னரான அளவுக்கு உயர்ந்தது.<ref>"''[http://books.google.com/books?id=yw3HmjRvVQMC&pg=PA62 Black Death]''". Joseph Patrick Byrne (2004). p. 62. ISBN 0-313-32492-1</ref>
மொஸ்கோவின் டிமித்ரி டொன்ஸ்கோயினால் வழிநடத்தப்பட்டதும், ரசிய பழமைவாத திருச்சபையினால் உதவி வழங்கப்பட்டதுமான ரசியப் பகுதிகளின் ஐக்கிய இராணுவம், 1380இல் நடைபெற்ற குலிகோவோ போரில் மொங்கோலிய-தாத்தார்களைத் தோற்கடித்து சாதனை படைத்தது. சிறிது சிறிதாக அருகிலிருந்த பகுதிகளும் மொஸ்கோவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுள் மொஸ்கோவின் முன்னைய எதிரிகளான ட்வெர் மற்றும் நோவ்கோகொரட் போன்றனவும் அடங்கும்.
 
மூன்றாம் இவான் (''தி கிரேட்'') இறுதியாக கோல்டன் ஹோர்டை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, முழு மத்திய மற்றும் வட ரசியாவையும் மொஸ்கோவின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தான். இவனே முதலாவது "முழு ரசியாவினதும் பெரும் டியூக்" பட்டத்தைப் பெற்றவனாவான்.<ref>{{cite web|author=May, T.|title=Khanate of the Golden Horde|url=http://www.accd.edu/sac/history/keller/Mongols/states3.html|archiveurl=http://web.archive.org/web/20080607055652/http://www.accd.edu/sac/history/keller/Mongols/states3.html|archivedate=7 June 2008|accessdate=27 December 2007}}</ref> 1453ல் கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சிக்குப் பின், மொஸ்கோ [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு ரோமப் பேரரசின்]] ஆட்சியுரிமையை எதிர்த்தது. மூன்றாம் இவான், இறுதிப் பைசாந்தியப் பேரரசரான 11ம் கொன்ஸ்தாந்தைனின் மைத்துனியான சோபியா பலையோலொகினாவைத் திருமணம் செய்துகொண்டான். மேலும் பைசாந்தியத்தின் குறியீடான இரட்டைத் தலைக் கழுகை தனதும் ரசியாவினதும் சின்னமாக்கிக் கொண்டான்.
 
=== ரசியாவில் சார் ஆட்சி ===
இவானின் மகன்களின் மரணம் காரணமாக 1598ல் பண்டைய ரூரிக் வம்சம் முடிவு பெற்றது. மேலும் 1601-03 பஞ்சம்<ref>{{Cite book|author=Borisenkov E, Pasetski V.|title=The thousand-year annals of the extreme meteorological phenomena|isbn=5-244-00212-0|page=190}}</ref> உள்நாட்டுக் கலகத்துக்கு வழிகோலியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், குழப்ப காலத்தின் போது, ஆட்சி உரிமையாளர்களினதும், வெளிநாட்டினரினதும் குறுக்கீடுகள் ஏற்பட்டன.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=7|pages=461–568|isbn=5-17-002142-9}}</ref> போலிய-லிதுவேனிய பொதுநலவாயம் மொஸ்கோ உள்ளிட்ட ரசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1612ல் இரண்டு தேசிய வீரர்களான குஸ்மா மினின் என்ற வணிகனாலும், திமித்ரி பொசார்கி என்ற இளவரசனாலும் வழிநடத்தப்பட்ட ரசியத் தொண்டர் படையினால் போலியர்கள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். செம்ஸ்கி சொபோரின் தீர்மானம் காரணமாக 1613ல் ரோமனோவ் வம்சம் அதிகாரத்துக்கு வந்தது. இதனால் நாடு நெருக்கடியிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டது.
 
17ம் நூற்றாண்டில் கொசக்குகளின் காலத்தில் ரசியா தனது நிலப்பரப்பை தொடர்ந்தும் விஸ்தரிக்கத் தொடங்கியது. கொசக்குகள் என்போர், கொள்ளையர் மற்றும் புதுநில ஏகுனர்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ சமூகங்கள் ஆவர். 1648ல், கெமெல்நைட்ஸ்கி கிளர்ச்சியின்போது போலந்து-லிதுவானியாவுக்கு எதிராக, [[உக்ரேன்|உக்ரேனின்]] விவசாயிகள் சபோரோசியன் கொசக்குகளில் இணைந்து கொண்டனர். இதற்குக் காரணம், போலிய ஆட்சியின்கீழ் சமூக, மத அடக்குமுறைகளுக்கு உள்ளானமையேயகும்.1654ல் உக்ரேனிய தலைவரான போடான் கெமெல்நைட்ஸ்கி, உக்ரேன் ரசிய சார் மன்னரான முதலாம் அலெக்சியின் பாதுகாப்பில் இருப்பதற்கு சம்மதித்தார். அலெக்சி இதற்கு சம்மதித்ததால், இன்னொரு ரசிய-போலிய யுத்தம் (1654-16671654–1667) ஏற்பட்டது. இறுதியில், நீப்பர் நதியை எல்லையாகக் கொண்டு உக்ரேன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்குப்பகுதி (அல்லது வலது கரை) போலிய கட்டுப்பாட்டிலும், கிழக்குப்பகுதி (அல்லது இடதுகரை மற்றும் கீவ்) ரசிய கட்டுப்பாட்டிலும் இருந்தன. பின்பு, 1670-71ல்1670–71ல் ஸ்டென்கா ரசினால் வழிநடத்தப்பட்ட டொன் கொசக்குகள் வொல்கா பகுதியில் பாரிய கிளர்ச்சியொன்றை ஆரம்பித்தனர். ஆயினும் சாரின் படைகள் கலகத்தை வெற்றிகரமாக அடக்கின.
 
கிழக்குப் பகுதியில், பெரும்பாலும் கொசக்குகளால், சைபீரியாவின் பல பகுதிகளில் விரைவான ரசிய கண்டுபிடிப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும், பெறுமதிமிக்க, விலங்குகளின் தோல் மற்றும் தந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே நடத்தப்பட்டன. ரசிய கண்டுபிடிப்பாளர்கள் சைபீரிய நதித் தடங்கள் வழியே மேலும் கிழக்கு நோக்கி பயணித்தனர். 17ம் நூற்றாண்டளவில் கிழக்கு சைபீரியாவின், சூச்சி தீபகற்பம், அமுர் நதிக்கரை, மற்றும் பசுபிக் கரையோரங்களில் ரசியக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1648ல், ஆசியாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையிலான [[பெரிங் நீரிணை]], ஃபெடோட் போபோவ் மற்றும் செம்யோன் டெஸ்ன்யோவ் ஆகியோரால் முதன்முதலில் கடக்கப்பட்டது.
1721ல், [[ரஷ்யாவின் முதலாம் பீட்டர்|மகா பீட்டரின்]] கீழ், ரசியா ஒரு பேரரசானதுடன், அறியப்பட்ட உலக வல்லரசானது. 1682இலிருந்து 1725 வரை அரசாண்ட பீட்டர், பெரும் வடக்குப் போரில் சுவீடனைத் தோற்கடித்தான். மேலும், மேற்கு கரேலியா, இங்கிரியா (குழப்பகாலத்தின் போது ரசியாவால் இழக்கப்பட்ட இரு பிரதேசங்கள்),<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=9, ch.1|url=http://militera.lib.ru/common/solovyev1/09_01.html|isbn=5-17-002142-9|accessdate=27 December 2007}}</ref> எஸ்ட்லாந்து மற்றும் லிவ்லாந்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டான். இதன்மூலம் ரசியாவுக்கு கடல் வழிப் போக்குவரத்தும், கடல் வணிகமும் மேற்கொள்ள முடியுமாயிருந்தது.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=15, ch.1|url=http://militera.lib.ru/common/solovyev1/15_01.html}}</ref> [[பால்டிக் கடல்|பால்டிக்]] கடற்கரையில் பீட்டர் புதிய தலைநகரான [[சென் பீட்டர்ஸ்பேர்க்|செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை]] நிறுவினான். இது பிற்காலத்தில் ரசியாவின் ''ஐரோப்பாவுக்கான நுழைவாயில்'' என அழைக்கப்பட்டது. பீட்டரின் பாரிய மறுசீரமைப்புக்கள் ரசியாவில் குறிப்பிடத்தக்க மேற்கு ஐரோப்பிய கலாசாரத் தாக்கங்களை ஏற்படுத்தின.
 
1741-621741–62 வரை, முதலாம் பீட்டரின் மகளான [[எலிசவேத்தா பெட்ரோவ்னா|எலிசபெத்தின்]] ஆட்சிக்காலத்தில் ரசியா [[ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப் போரில்]] பங்கேற்றது (1756-631756–63). இந்த போராட்டத்தின்போது, ரசியா கிழக்குப் பிரசியாவையும், மேலும் பெர்லினையும் சிறிதுகாலம் இணைத்திருந்தது. எவ்வாறாயினும், எலிசபெத்தின் மரணத்தின் பின், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பிரதேசங்களும், ரசியாவின் [[உருசியாவின் மூன்றாம் பீட்டர்|மூன்றாம் பீட்டரினால்]] [[பிரசியா|பிரசியப் பேரரசுக்கு]] திருப்பி வழங்கப்பட்டது.
 
1762-961762–96 வரை ஆண்ட [[உருசியாவின் இரண்டாம் கத்தரீன்|இரண்டாம் கத்தரீன்]] ரசிய அறிவொளிக் காலத்துக்கு தலைமை தாங்கினார். இவர் போலிய-லிதுவானிய பொதுநலவாயத்தின் மீது ரசியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டியதோடு, போலந்து பிரிவினையின் போது, இதன் பெரும்பாலான பகுதிகளை ரசியாவுடன் இணைத்துக்கொண்டார். இதன்மூலம் ரசியாவின் மேற்கெல்லை மத்திய ஐரோப்பா வரை பரந்தது. ஒட்டோமன் பேரரசுக்கெதிரான ரசிய-துருக்கியப் போர்களின் வெற்றியின் பின் கிரிமியன் கானேட்டைத் தோற்கடித்ததன் மூலம் அவர் ரசியாவின் தென் எல்லையை கருங்கடல் வரை விரிவு படுத்தினார். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒட்டோமன்களுக்கெதிரான வெற்றிகளைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்காக்கேசியாவின் சில பகுதிகளையும் பெற்றுக்கொண்டது. முதலாம் அலெக்சாண்டரின்(1801-25), 1809ல், பலவீனமான சுவீடனிடமிருந்தான [[பின்லாந்து|பின்லாந்தின்]] பறித்தெடுப்பு, 1812ல், ஒட்டோமன்களிடமிருந்தான பெஸ்ஸராபியாவின் பறித்தெடுப்பு என, இவ் விரிவுபடுத்தல் தொடர்ந்தது. இதேவேளை ரசியர்கள் அலாஸ்காவில் தமது குடியேற்றங்களை ஏற்படுத்தியதோடு, கலிபோர்னியாவிலும் கூட (ஃபோர்ட் ரொஸ்) தமது குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
 
1803–06 வரை முதலாவது ரசிய உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பிற்காலத்திலும் குறிப்பிடத்தக்க கடற்பயணங்கள் சிலவும் மேற்கொள்ளப்பட்டன. 1820ல் ஒரு ரசிய நாடுகாண் பயணத்தின் மூலம் [[அண்டார்டிக்கா]] கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் துணையுடன் ரசியா, [[நெப்போலியன்|நெப்போலியனின்]] பிரான்சுக்கெதிராகப் போராடியது. 1812ல் உச்ச நிலையிலிருந்த நெப்போலியனின் ஐரோப்பிய சேனை, ரசியர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் ரசியாவின் கொடூரமான குளிர்காலம் என்பன காரணமாக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இப் போரில் நெப்போலியனின் 95%மான படை அழிந்தது.<ref>{{cite web|title=Ruling the Empire|publisher=Library of Congress|url=http://countrystudies.us/russia/5.htm|accessdate=27 December 2007}}</ref> மிகெய்ல் குட்டுசோவ் மற்றும் பார்கிளே டி டொலி ஆகியோரால் வழிநடத்தப்பட்ட ரசியப்படை, ஆறாம் கூட்டணியின் போரின் மூலம், நெப்போலியனின் படையை ரசியாவிலிருந்து வெளியேற்றியதோடு, ஐரோப்பா வழியாக இறுதியில் பாரிஸ் நகர் வரை துரத்தியடித்து நகருக்குள் நுழைந்தன. ரசியாவின் சார்பில் முதலாம் அலெக்சாண்டர் [[வியன்னா மாநாடு|வியன்னா மாநாட்டில்]] கலந்துகொண்டார். இம்மாநாடு நெப்போலியனுக்குப் பின்னான ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுத்தது.
 
[[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களில்]] கலந்துகொண்ட அதிகாரிகள் தாராளவாதம் பற்றிய சிந்தனையை ரசியாவுக்கு எடுத்து வந்தனர். 1825ல் நடத்தப்பட்ட, வெற்றிபெறாத, டிசம்பர் புரட்சியின் மூலம் சார் மன்னரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் இவர்கள் முயற்சித்தனர். முதலாம் நிக்கலசின் (1825-551825–55) பழமைவாத ஆட்சியின் முடிவில், கிரிமியன் போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ரசியாவின் ஐரோப்பா மீதான அதிகாரமும், செல்வாக்கும் தகர்ந்தது. 1847க்கும், 1851க்குமிடையில் ரசியா முழுவதும் பரவிய ஆசியக் [[வாந்திபேதி|கொலரா]] ஒரு மில்லியன் உயிர்களைக் காவு கொண்டது.<ref>Geoffrey A. Hosking (2001). "''[http://books.google.com/books?id=oh-5AAmboMUC&pg=PA9 Russia and the Russians: a history]''". Harvard University Press. p. 9. ISBN 0-674-00473-6</ref>
 
நிக்கலசின் பின் ஆட்சிக்கு வந்த [[இரண்டாம் அலெக்சாண்டர்]] (1855-811855–81) நாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். இவற்றுள் 1861ன் அடிமைத்தன விடுதலை மறுசீரமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாரிய மாற்றங்கள் கைத்தொழில்மயமாக்கத்தை ஊக்குவித்ததுடன், ரசிய ராணுவத்தையும் நவீனமயப் படுத்தியது. இதன் மூலம் ரசிய ராணுவம் 1877-781877–78 ரசிய-துருக்கிய யுத்தத்தின் போது, [[பல்கேரியா]]வை ஒட்டோமன் ஆதிக்கத்திலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது.
 
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு சோசலிச இயக்கங்கள் ரசியாவில் தோற்றம் பெற்றன. 1881ல் இரண்டாம் அலெக்சாண்டர் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். அவரது மகனான மூன்றாம் அலெக்சாண்டர் (1894-941894–94) ஆட்சிக்காலம் மிகவும் சமாதானமானதும், தாராளமயம் குறைந்ததுமாக இருந்தது. கடைசி ரசியப் பேரரசரான [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலஸ்]] (1894-1917) [[உருசியப் புரட்சி, 1905|1905ன் ரசியப் புரட்சியைத்]] தடுக்க முடியாதவராக இருந்தார். இப்புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது ரசிய-சப்பானியப் போரில் ரசியாவின் தோல்வியாகும். இப்புரட்சி நிகழ்வுகள் [[இரத்த ஞாயிறு (1905)|இரத்த ஞாயிறு]] என அழைக்கப்படுகிறது. கிளர்ச்சி கைவிடப்பட்டது. ஆனால், அரசாங்கம் [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்|பேச்சுச் சுதந்திரம்]], [[கூடல் சுதந்திரம்|ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்]], அரசியல் கட்சிகளை சட்டபூர்வமாக்கல் மற்றும் சட்டவாக்கக் கழகமொன்றை உருவாக்குதல் (ரசியப் பேரரசின் டூமா) போன்ற பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்டொலிபின் விவசாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, [[சைபீரியா]]வுக்கான குடிபெயர்வு வேகமாக அதிகரித்தது. 1906க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றக்காரர்கள் இந்தப்பகுதிக்கு வந்தனர்.<ref>N. M. Dronin, E. G. Bellinger (2005). "''[http://books.google.com/books?id=9a5j_JL6cqIC&pg=PA38 Climate dependence and food problems in Russia, 1900–1990: the interaction of climate and agricultural policy and their effect on food problems]''". Central European University Press. p. 38. ISBN 963-7326-10-3</ref>
 
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு சோசலிச இயக்கங்கள் ரசியாவில் தோற்றம் பெற்றன. 1881ல் இரண்டாம் அலெக்சாண்டர் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். அவரது மகனான மூன்றாம் அலெக்சாண்டர் (1894-94) ஆட்சிக்காலம் மிகவும் சமாதானமானதும், தாராளமயம் குறைந்ததுமாக இருந்தது. கடைசி ரசியப் பேரரசரான [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலஸ்]] (1894-1917) [[உருசியப் புரட்சி, 1905|1905ன் ரசியப் புரட்சியைத்]] தடுக்க முடியாதவராக இருந்தார். இப்புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது ரசிய-சப்பானியப் போரில் ரசியாவின் தோல்வியாகும். இப்புரட்சி நிகழ்வுகள் [[இரத்த ஞாயிறு (1905)|இரத்த ஞாயிறு]] என அழைக்கப்படுகிறது. கிளர்ச்சி கைவிடப்பட்டது. ஆனால், அரசாங்கம் [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்|பேச்சுச் சுதந்திரம்]], [[கூடல் சுதந்திரம்|ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்]], அரசியல் கட்சிகளை சட்டபூர்வமாக்கல் மற்றும் சட்டவாக்கக் கழகமொன்றை உருவாக்குதல் (ரசியப் பேரரசின் டூமா) போன்ற பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்டொலிபின் விவசாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, [[சைபீரியா]]வுக்கான குடிபெயர்வு வேகமாக அதிகரித்தது. 1906க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றக்காரர்கள் இந்தப்பகுதிக்கு வந்தனர்.<ref>N. M. Dronin, E. G. Bellinger (2005). "''[http://books.google.com/books?id=9a5j_JL6cqIC&pg=PA38 Climate dependence and food problems in Russia, 1900–1990: the interaction of climate and agricultural policy and their effect on food problems]''". Central European University Press. p. 38. ISBN 963-7326-10-3</ref>
 
1914ல் ரசியாவின் கூட்டாளியான [[செர்பியா]]வுக்கு எதிராக ஆஸ்திரியா-ஹங்கேரி போர்ப் பிரகடனம் செய்ததையடுத்து, ரசியா [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலக யுத்தத்தினுள்]] பிரவேசித்தது. இதன் முக்கூட்டு நட்பு அணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பல்வேறு போர்முனைகளில் போராடவேண்டியிருந்தது. 1916ல் ரசிய ராணுவத்தின் பிரசிலோவ் தடுப்பு நடவடிக்கை மூலமாக ஆஸ்திரியா-ஹங்கேரியின் ராணுவம் கிட்டத்தட்ட முற்றாகவே அழிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், போர்ச் செலவுகள், உயர் இழப்புகள், ஊழல் பற்றிய வதந்தி மற்றும் தேசத்துரோகம் என்பன காரணமாக ஆட்சியாளருக்கெதிரான மக்களின் அவநம்பிக்கை அதிகரித்தது. இத்தகைய நடவடிக்கைகள் 1917ல் இரு தடவைகளில் நடந்த [[ரஷ்யப் புரட்சி (1917)|ரசியப் புரட்சிக்கான]] சூழலை உருவாக்கியது.
ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கம் [[திட்டமிட்ட பொருளாதாரம்]], பெரும்பாலும் கிராமிய நாடாக இருந்த ரசியாவில் கைத்தொழில்மயமாக்கம் மற்றும் [[சோவியத் ஒன்றியத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம்|விவசாயக் கூட்டுப் பண்ணைகள்]] என்பவற்றைச் செயற்படுத்தியது. விரைவான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் நிறைந்த இக்காலப்பகுதியில், மில்லியன் கணக்கான மக்கள் தொழிலாளர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.<ref name="Getty">Getty, Rittersporn, Zemskov. Victims of the Soviet Penal System in the Pre-War Years: A First Approach on the Basis of Archival Evidence. The American Historical Review, Vol. 98, No. 4 (Oct. 1993), pp. 1017–49.</ref> இவர்களுள் ஸ்டாலினின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளும் அடங்குவர். மேலும் மில்லியன் கணக்கானோர், சோவியத் ஒன்றியத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.<ref name="Getty" /> கடுமையான சட்டங்கள் மற்றும் வரட்சி ஆகியவற்றுடன் நாட்டின் விவசாயத்தில் ஏற்பட்ட இடைக்காலச் சிதைவு காரணமாக 1932-33 காலப்பகுதியில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.<ref>[[R.W. Davies]], [[S.G. Wheatcroft]] (2004). ''The Years of Hunger: Soviet Agriculture, 1931–33'', pp. 401.</ref> எவ்வாறாயினும், பாரிய இழப்புக்களுடன், குறுகிய காலத்தில், சோவியத் ஒன்றியம் பாரிய விவசாயப் பொருளாதாரச் சமூகத்திலிருந்து, முக்கிய கைத்தொழிற் சக்தியாக மாறியது.
 
[[அடோல்ப் ஹிட்லர்|அடோல்ப் ஹிட்லரின்]] [[ரூர்]], ஆஸ்திரியா, மற்றும் இறுதியாக [[செக்கோசிலோவாக்கியா]] ஆகியவற்றின் இணைப்பின் மீதான பெரிய பிரித்தானியாவினதும், பிரான்சினதும் அமைதிக் கொள்கை காரணமாக [[நாசி ஜெர்மனி]]யின் பலம் அதிகரித்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் அச்சுறுத்தல் காணப்பட்டது. இதேவேளை [[ஜெர்மன் ரெய்க்]], சப்பானியப் பேரரசுடன் கூட்டுச் சேர்ந்தது. 1938-391938–39 வரையான சோவியத்-சப்பானியப் போர்களின் மூலம் சப்பான் தூரக் கிழக்கில், சோவியத் ஒன்றியத்தின் முக்கிய எதிரியாக இருந்தது.
 
ஆகத்து 1939ல், பிரித்தானியா மற்றும் பிரான்சுடன் நாசிச எதிர்ப்புக் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தோல்வியடைந்ததாலும், மேற்கத்திய சக்திகளின் நாசி ஜெர்மனியுடனான அமைதிக் கொள்கை காரணமாகவும், சோவியத் அரசாங்கம் ஜெர்மனியுடன் அமைதியான தொடர்புகளைக் கட்டியெழுப்ப முடிவு செய்தது. இதன்படி, இரு நாடுகளுக்கிடையிலும் போர் ஏற்படாதிருத்தல் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தமது செல்வாக்குக்குட்பட்ட பிரதேசங்களை பிரித்துக்கொள்ளல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக [[மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] தொடக்கத்தில், ஹிட்லர் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை கைப்பற்றிய வேளை, சோவியத் ஒன்றியம் தனது இராணுவத்தை கட்டியெழுப்புவதிலும், குளிர்காலப் போர் மற்றும் போலந்தின் சோவியத் படையெடுப்பு ஆகியவற்றின்போது இழந்த ரசியப் பேரரசின் முன்னைய பகுதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டது.
 
சூன் 22, 1941ல், நாசி ஜெர்மனி ஆக்கிரமிக்கா ஒப்பந்தத்தை உடைத்து, மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிகவும் பலமிக்கதுமான படையுடன் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது.<ref>{{cite web| title = World War II| publisher = Encyclopædia Britannica | accessdate =9 March 2008 | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|முக்கிய களமாக]] மாறியது. ஜெர்மனிய ராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மொஸ்கோ போரின் போது அவர்களது தாக்குதல் தடைப்பட்டது. தொடர்ந்து, 1942-43 குளிர்காலத்தில் நடைபெற்ற [[சுடாலின்கிரட் சண்டை|ஸ்டாலின்கிராட் போரிலும்]],<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II | publisher =Encyclopædia Britannica|accessdate=12 March 2008|title=The Allies' first decisive successes: Stalingrad and the German retreat, summer 1942 – February 1943}}</ref> 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோல்வியைச் சந்தித்தனர். [[லெனின்கிராட் முற்றுகை]]யும் ஜெர்மனியரின் இன்னொரு தோல்வியாகும். இதன்போது, அந்நகரம் 1941-44வரை ஜெர்மனிய, ஃபின்னியப் படைகளால், முற்றுகையிடப்பட்டது. பட்டினியால் வாடியபோதும், ஒரு மில்லியன் பேர் இறந்தபோதும், இந்நகரம் சரணடையவில்லை.<ref>[http://www.cambridge.org/gb/knowledge/isbn/item1173696/?site_locale=en_GB The Legacy of the Siege of Leningrad, 1941–1995]. Cambridge University Press.</ref> ஸ்டாலினின் நிர்வாகத்தின் கீழும், ஜோர்ஜி சுகோவ் மற்றும் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்சோவ்ஸ்கி போன்ற இராணுவத் தலைவர்களின் கீழும், சோவியத் படைகள், ஜெர்மனியரை 1944-45வரை கிழக்கைரோப்பா வழியாக விரட்டி, மே 1945ல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 1945ல் சோவியத் ராணுவம், சீனாவின் மன்சூக்குவோ மற்றும் [[வட கொரியா]]விலிருந்து சப்பானியரை வெளியேற்றி, சப்பானுக்கெதிரான நேச நாடுகளின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது.
 
இரண்டாம் உலகப்போரின் 1941-45 காலப்பகுதி ரசியாவில் ''பெரும் நாட்டுப்பற்றுப் போர்'' எனக் குறிப்பிடப்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் கொடூரமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற இப்போரில், 10.6&nbsp;மில்லியன் ராணுவத்தினரும், 15.9&nbsp;மில்லியன் மக்களும் கொல்லப்பட்டனர்.<ref>{{Cite book|author=Erlikman, V.|title=Poteri narodonaseleniia v XX veke : spravochnik|year=2004|id=Note: Estimates for Soviet World War II casualties vary between sources|isbn=5-93165-107-1|publisher=Russkai︠a︡ panorama|location=Moskva}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். சோவியத் மக்களின் மொத்த மக்கள் இழப்பு இதனிலும் அதிகமாகும்.<ref>Geoffrey A. Hosking (2006). "''[http://books.google.com/books?id=CDMVMqDvp4QC&pg=PA242 Rulers and victims: the Russians in the Soviet Union]''". Harvard University Press. p. 242. ISBN 0-674-02178-9</ref> சோவியத் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் பாரிய அழிவுக்குள்ளானது.<ref>{{cite web|title=Reconstruction and Cold War|publisher=Library of Congress|url=http://countrystudies.us/russia/12.htm|accessdate=27 December 2007}}</ref> ஆயினும் சோவியத் ஒன்றியம் மாபெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது.
போருக்குப் பின், [[செஞ்சேனை]], [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு|கிழக்கு ஜெர்மனி]] உட்பட கிழக்கு ஐரோப்பாவையே ஆக்கிரமித்துக் கொண்டது. தங்கியிருக்கும் சோசலிச அரசாங்கங்கள் கிழக்குப்பகுதிக் கண்காணிப்பு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டன. உலகின் இரண்டாவது அணுவாயுத நாடாக உருவான சோவியத் ஒன்றியம், [[வார்சோ உடன்படிக்கை]]யை உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] ஆகியவற்றுடன் [[பனிப்போர்]] என அறியப்பட்ட, உலக ஆதிக்கத்துக்கான போட்டியுள் இறங்கியது. உலகெங்குமுள்ள புரட்சிகர இயக்கங்களுக்கு, சோவியத் ஒன்றியம் தனது ஆதரவை வழங்கியது. இவற்றுள் புதிதாக உருவான [[சீன மக்கள் குடியரசு]], [[வட கொரியா|கொரிய சனநாயக மக்கள் குடியரசு]] மற்றும் [[கியூபா|கியூபக் குடியரசு]] போன்றனவும் அடங்கும். குறிப்பிடத்தக்களவு சோவியத் வளங்கள், ஏனைய சோசலிச நாடுகளுக்கு, உதவியாக ஒதுக்கப்பட்டது.<ref>[http://rs6.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field%28DOCID+su0391%29 Foreign trade] from ''A Country Study: Soviet Union (Former)''. [[Library of Congress Country Studies]] project.</ref>
 
ஸ்டாலினின் மரணத்துக்குப்பின், குறுகியகால கூட்டுத்தலைமையின் கீழ், புதிய தலைவரான [[நிக்கிட்டா குருசேவ்]], ஸ்டாலினின் கொள்கைகளை விமர்சித்ததோடு, ஸ்டாலின்மய ஒழிப்புக் கொள்கைகளைச் செயற்படுத்தினார். தொழிலாளர் வதை முகாம்கள் ஒழிக்கப்பட்டன. பல சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டனர். (இவர்களுல் பலர் இறந்திருந்தனர்).)<ref>{{Cite news|url=http://www.time.com/time/magazine/article/0,9171,916205-2,00.html|work=TIME|accessdate=1 August 2008|title=Great Escapes from the Gulag|date=5 June 1978}}</ref> பொதுவான அடக்குமுறைக் கொள்கைகளின் தளர்வு, பின்பு குருசேவ் தளர்வு என அழைக்கப்பட்டது. இதேவேளை, துருக்கியில் ஐக்கிய அமெரிக்காவின் ஜூபிட்டர் ஏவுகணைகள் வைக்கப்பட்டமை மற்றும் [[கியூபா ஏவுகணை நெருக்கடி|கியூபாவில் சோவியத் ஏவுகணைகள்]] வைக்கப்பட்டமை காரணமாக ஐக்கிய அமெரிக்காவுடனான முறுகல்நிலை அதிகரித்தது.
 
[[படிமம்:Mir on 12 June 1998edit1.jpg|left|thumb|சோவியத் மற்றும் ரசிய [[விண்வெளி நிலையம்|விண்வெளி நிலையமான]] [[மிர்]].]]
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2585504" இருந்து மீள்விக்கப்பட்டது