தமிழ்த் தேசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 70:
கிழக்கிந்திய நிறுவனம் இந்தியப் பரப்பில் ஆதிக்கம் செலுத்த முனைந்த தொடக்க அவதானிப்புகள் தமிழகத்தில் எழுந்தன. அவற்றினூடாக எழுந்த இந்தியத்தேசியத்தையும் [[திராவிடத் தேசியம்|திராவிடத்தேசியத்தையும்]] மறுத்து தமிழ்த்தேசியம் வளர்ந்தது. [[நீதிக்கட்சி]] பெயர்மாற்றக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியம் தீவிரமாக வெளிப்பட்டது. நீதிக்கட்சி தமிழர் கழகம் எனப் பெயர்மாற்றப்பவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய அண்ணல் தங்கோ<ref>செ.அருள்செல்வன் (2017 ஏப்ரல் 13). "அண்ணல் தங்கோ எனும் ஆளுமை!". ''கட்டுரை''. தி இந்து. பார்த்த நாள் 13 ஏப்ரல் 2017.</ref> [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ.விசுவநாதம்]] போன்ற தலைவர்கள் தமிழ்த்தேசியத்தை உட்கிடையாகத் தம் கண்ணோட்டத்தில் கொண்டிருந்தனர். இதுகுறித்த எழுந்த உரையாடலே தமிழகத்தில் திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே நடந்த முதன்மையான உரையாடல்களுள் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றது. பல நூற்றாண்டுகாலமாக தமிழர்களுக்கான உரிமைகள், தமிழுக்கான முதலுரிமை ஆகியன பற்றிய விழிப்புணர்வு மிக்க தலைவர்கள் செயல்பட்டுவந்தனர். அவர்களின் தொடர்ச்சியாக பிரிட்டிசு எதிர்ப்புக் காலத்தின் விளைவாகத் தமிழ்த்தேசியம் தேசிய அறிந்துணர்வோடு (பிரக்ஞையோடு) தன்னை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தன்னை வெளிப்படுத்தியது. அக்காலகட்டத்தில் முனைப்பாகத் தமிழத்தேசிய உரையாடல்களை, செயற்பாடுகளை ஆற்றியவர்களுள் [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ விசுவநாதன்]], [[அண்ணல் தங்கோ]], [[ம.பொ.சி.|ம.பொ.சி]] ஆகியோர் அடங்குவர். ம.பொ.சி 1946 மே 1 ஆம் நாள் [[தமிழ் முரசு (இதழ்)|தமிழ் முரசு]] எனும் மாத இதழைத் தொடங்கி நடத்தினார். அதே ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் [[தமிழரசுக் கழகம்]] அமைப்பினை ம.பொ.சி தொடங்கினார். அந்த அமைப்பின் குறிக்கோளாக 1950களுக்குப்பிறகு [[பாவலரேறு பெருஞ்சித்திரனார்]], [[சி.பா.ஆதித்தனார்]] உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்களில் பெருஞ்சித்திரனார் இறுதிவரை தமிழ் தேசியத்தின் அத்தனை கூறுகளிலும் நின்று களம் அமைத்தார். ஆதலால் தமிழ்த்தேசியத் தந்தை என்ற அடைமொழியை பெற்றார். 1980 தொடங்கி தமிழ்த்தேசிய இயக்கங்கள் பல தமிழ்த்தேசியக் கருத்தியலை முழுமையாக ஏற்று இயங்கிவருகின்றன. திராவிடம், [[தலித்தியல்|தலித்தியம்]], இந்தியத்தேசியம் ஆகிய அரசியல் கருத்துருவாக்கங்களுக்கு உள்ள வரலாற்றோடு ஒப்பிடுகையில் தமிழத்தேசியம் நீண்டதாகும்.
 
== தமிழ்த்தேசிய அமைப்புகள் ==
== தமிழ்த்தேசியத்தின் உட்கூறுகள் ==
தமிழ்த்தேசியத்தின் உட்கூறுகள் தமிழர்களின் இன ஓர்மை, தமிழ்மொழிக்காப்பு, தமிழ்நிலவுரிமை, தமிழ்நாடு, தமிழீழம் ஆகியவற்றின் இறையாண்மை ஆகியவையாகும். இந்த உட்கூறுகள் ஒவ்வொன்றும் தனக்கேயுரிய உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழர்களின் இன ஓர்மை சாதியைக் கடந்தும் மதம் கடந்தும் தமிழர்களை மொழியினமாகத் திரண்டிடக் கோருகிறது. தமிழ்மொழிக்காப்பு என்பது தமிழ்வழிக்கல்வியுரிமை, தமிழ்வழி வழிபாட்டுரிமை, தமிழ்ஆட்சிமொழியுரிமை போன்றவற்றை வலியுறுத்துகிறது. தமிழ்நிலவுரிமை தமிழர் நிலங்களின் மீதான உரிமை, தமிழரல்லாதவர் ஆக்கிரமிப்பதைத் தடைசெய்யும் உரிமை ஆகியவற்றை வற்புறுத்துகிறது. தமிழ்நாடு, தமிழீழம் ஆகியவற்றின் இறையாண்மை என்பது தமிழர்கள் தம் நிலப்பரப்பில் கொண்டிருக்கவேண்டிய ஆட்சியதிகார உரிமையை முன்வைக்கிறது.
 
* தமிழரசுக் கழகம்
தமிழ்த்தேசியம் [[தமிழர்]] மரபுத் தாயக நிலப்பரப்புகளான [[தமிழ்நாடு]] மற்றும் [[தமிழீழம்]], [[தமிழ்]] மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமூக-அரசியல்-பொருளாதார நலன்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி, அவற்றின் ஊடாக வெளிப்பட்டு, அவற்றால் பயன்பெற்று, அவற்றைப் பேணி, பகிர்ந்து, மேம்படுத்த ஏற்ற சூழலமைவைக் கட்டமைப்பதை நோக்காக கொண்டது. இதன் அடிப்படைக் கருத்தியல் தமிழரிடையே காணப்படும் ஆண் ஆதிக்கம், சாதிக் கொடுமைகள், வர்க்க விரிசல்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத் தீங்குகளுக்கும் எதிராக அமைகின்றது. மேலும், சமய புவியியல் சார்புகளை மீறி, தமிழர்களிடையே ஓர்மையை ஏற்படுத்திட இது முனைகின்றது. தமிழ்த் தேசியத்தை இந்திய அரசோ இலங்கை அரசோ ஒரு கருத்தியலாக அதிகாரப்பூர்வமாக ஏற்காத நிலையில் அதற்கு உரிய சட்ட வரையறையும் இதுவரை கிடைக்கவில்லை. ஆயினும், பொதுவாக அரசியலில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ள தமிழ் இளைஞர்கள் தமிழ்த்தேசியம் என்பதை தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்கான மற்றும் தமிழர்களின் ஒற்றுமைக்கான அரசியல் தத்துவம் என்றே விளங்கிக்கொள்கின்றனர்.
* தமிழ்த்தேசியக் கட்சி
* உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்
* தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி
* தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
* தமிழ்த்தேச மக்கள் கட்சி
* தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
* நாம் தமிழர் கட்சி
* தமிழர் தேசிய இயக்கம்
* விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
 
== தமிழ்த்தேசியமும் சாதியொழிப்பும் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது