யோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
'''யோனி''' (புணர்புழை) என்பது [[பாலூட்டி]]களின் சதைப் பற்றுள்ள, மீட்சித்தன்மையுடைய பெண் பிறப்புறுப்புப் பாதையாகும். கழுத்துப் போன்ற [[கருப்பை]]யின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள [[பெண்குறி]]க்கும் இடைப்பட்ட பாதையாகும். பொதுவாக வெளிப்புற யோனியானது [[கன்னிச்சவ்வு]] எனப்படும் யோனிச்சவ்வினால் பகுதியாக மூடப்பட்டிருக்கும். இதன் ஆழமான முடிவில் [[கருப்பை]]யின் கழுத்துப்பகுதியான [[கருப்பைவாய்கருப்பை வாய்]] சற்றே புடைத்தபடி யோனிக்குள் காணப்படும். யோனியானது பாலுறவுவையும், பிறப்பையும் அனுமதிக்கிறது. மனிதர்களுக்கும் அவர்களோடு நெருங்கிய தொடர்புடைய [[முதனி]]களுக்கும் [[மாதவிடாய்]] வெளியேற்றத்துக்கு வழியாக இருக்கிறது.
பல்வேறு விலங்கினங்கள் இல்லாத(குறைந்துவரும்) நிலையிலும் யோனி பற்றிய ஆய்வுகளில், யோனி அமைந்துள்ள இடம், அமைப்பு, அளவு ஆகியவை இனத்திற்கு இனம் மாறுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாலூட்டிகளில் வழக்கமாக சிறுநீருக்கான திறப்பு ஒன்றும் பிறப்பிற்கான பாதையாக ஒன்றுமாகப் பெண்குறியில் இரண்டு திறப்புகள் உள்ளன. இது ஆண் பாலூட்டிகளுக்கு வேறுபடுகிறது. இனப்பெருக்கத்திற்கும், சிறுநீருக்கும் ஒரே திறப்புதான் உள்ளது. பெண் பாலூட்டிகளில் யோனித் திறப்பானது சிறுநீர்த் திறப்பினைவிட மிகவும் பெரிதாக உள்ளது. இவை இரண்டும் இதழ்போன்ற [[இதழ் (பிறப்புறுப்பு)|யோனியிதழால்]] மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. [[நிலநீர் வாழிகள்]], [[ஊர்வன]], [[பறவைகள்]], மோனோட்ரெம் எனப்படும் பாலூட்டிகள் ஆகியவற்றுக்கு சிறுநீர் வெளியேற்றம், இனப்பெருக்கம், இரைப்பைக்குடல் வழி ஆகிய அனைத்துக்கும் ஒரே எச்சத் துவாரமே காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/யோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது