தமிழ்த் தேசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 85:
 
== தமிழ்த்தேசியமும் சாதியொழிப்பும் ==
சாதிக் கட்டமைப்பு என்பது ஒருங்கிணைந்த ஒன்று. இதில் ஒரு பகுதியை மட்டும் மாற்ற முடியாது. அது ஒருமைப்பட்ட முழுமை (integral whole). அதனைப் பகுதிபகுதியாக அழிக்கவோ மாற்றவோ முடியாது. அடியோடு அழித்தால்தான் உண்டு. அறவே ஒழித்தால்தான் உண்டு. எல்லா உறுப்புகளையும் கழற்றிப் போட்டு மாற்றிப் பூட்டியாக வேண்டும். அதுதான் சாதி ஒழிப்பு. <ref>தியாகு: தலித்தியமும் தமிழ்த்தேசியமும் நூல் பக்கம் 18 , தமிழ்த்தேசம் வெளியீடு (2018)</ref>தமிழ்த்தேசியப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதியாக சமத்துவ சமூக அமைப்புத் திட்டம் உள்ளது. <ref>பெ. மணியரசன் எழுதிய சாதியும் தமிழ்த்தேசியமும் நூல் பக்கம் 120</ref>தமிழகத்தின் சாதியொழிப்பு அரசியலில் தமிழ்த்தேசியம் தீர்மானகரமான பங்காற்றியுள்ளது. திட்டவட்ட சாதியொழிப்பு அரசியல் தமிழ்நாடு விடுதலை எனும் தமிழ்த்தேசிய அரசியலோடு இணைத்து தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி நிறுவனர் [[தமிழரசன்]] அவர்களால் கோட்பாடாக முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையே தமிழ்த்தேசியத்திற்கும் சாதியொழிப்புக்குமான உறவினைத் தெளிவுபடுத்தும் முதன்மையான வரலாற்று ஆவணமாக உள்ளது. இவ்வறிக்கை 1985இல் மீன்சுருட்டி எனும் ஊரில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை ஆகியவை தொடர்ச்சியாக சாதியொழிப்பை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய அரசியலை நடைமுறையில் செய்துவந்தன. தமிழ்த்தேசிய இயக்கங்கள், கட்சிகள் எதுவும் [[சனாதன தர்மம்]] எனும் சாதிய அடிப்படையிலான சமூகப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ இல்லை. சாதியையும் மதத்தையும் கடந்து தமிழர்கள் இன ஓர்மை பெறவேண்டும் என்பதே அவ்வியக்கங்கள் முன்வைக்கும் கருதுகோள் ஆகும். சாதிதோன்றிய காலம் மிகத்தொன்மைக் காலமாகும். அதுமுதல் தமிழின் எழுதப்பட்ட வரலாற்றில் சாதியொழிப்புக் கருத்தோட்டங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த சாதியொழிப்பு மரபினைப் பல தமிழ்த்தேசிய இயக்கங்கள் தம் மரபாகக் கருதுகின்றன. திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் கூற்றும், சித்தர் மரபுகளும் , வள்ளலார் , பாரதியார், பாரதிதாசன் என சாதியொழிப்பு மற்றும் சாதியெதிர்ப்பு வழித்தடமே தமிழ்த்தேசியக் கருத்தியலின் சாதியொழிப்புப் பார்வையின் சாரமாக உள்ளது.
 
== நிலப்பரப்பு ==
வரிசை 107:
 
== தமிழ்த்தேசியமும் திராவிடத்தேசியமும் ==
திராவிடத்தேசியம் என்று ஒன்று கிடையாது. நேரடியாக அதற்கு அப்படி ஒரு வரையறுப்பும் முன் வைக்கப்பட்டதாகவும் சொல்ல முடியாது. <ref>இராசேந்திர சோழன் : இந்தியம், திராவிடம், தமிழ்த்தேசியம் நூல் பக்கம் 27</ref> எந்த வரையறுப்பும் இல்லமலேயேஇல்லாமலேயே, திராவிட நாடு, திராவிடத் தேசியம் என்னும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது<ref>இராசேந்திர சோழன் : இந்தியம், திராவிடம், தமிழ்த்தேசியம் நூல் பக்கம் 27</ref>. மேட்டிமைச் சக்திகளாக இருக்கும் பிராமணர்களைத் தவிர்த்து பிற தென்னிந்தியர்களின் சமூக மேம்பாடு ஆகும். நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், மராட்டியத்தில் அம்பேத்கர் மற்றும் புலே ஆகியோர் உருவாக்கிய இயக்கங்கள் ஆகியவறிற்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. இந்தியச் சமூக முரண்பாட்டை, அடிப்படையில் சாதிய வடிவில் அமைந்துள்ளதாகப் பார்ப்பதே இந்தப் பொதுப்பண்பு.<ref>ம.பொ.சி. எழுதிய தமிழகத்தில் பிறமொழியினர் , (பக்கம் 9) நூலின் முன்னுரையில் ஆய்வாளர் அ.மார்க்சு,</ref> திராவிடத்தேசியம் 1956க்கு முற்பட்ட சென்னை மாகாண அரசியலாகத் தோற்றம் கண்டது. கோட்பாட்டளவில் தென்னிந்தியர் அனைவரையும் திராவிடர் எனக் கூறினாலும் நடைமுறையில் சென்னை மாகாண மக்கள் நடுவில் மட்டுமே இக்கருத்தாக்கம் செல்வாக்கு செலுத்தியது. திராவிடத்தை முன்னெடுத்த இயக்கங்கள் ஆரியத்தை மொழியடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் சிலவகையில் எதிர்த்துப்பேசினாலும் ஆரியத்தின் அரசியல் அதிகாரக் கருவான இந்தியத்தை வீழ்த்துவற்கான செயல் திட்டமின்றி, அந்த இந்தியத்திற்கு அடிபணியவே செய்தன. இனத்தால் திராவிடன் நாட்டால் இந்தியன் என மயங்கின, தமிழர்களை மயக்கின.<ref>தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் சனவரி 25,2018, பொழிலன்- தமிழ்த்தேசம் எங்கே நிற்கிறது? கட்டுரை பக்கம் 67, வெளியீடு :தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) , சென்னை</ref> திராவிட நாடு என்பதற்கு திட்டவட்ட வரையறைகள் கிடையாது. இந்தியத்தேசியத்தின் உடன்விளைவாகத் தோன்றிய திராவிடத்தேசியம் தமிழ்த்தேசியம் போன்று நிலத்தையும் மொழியையும் வரம்பெல்லைகளாகக் கொண்டிருக்கவில்லை. திராவிடத்தேசியம் பிரிட்டீசு ஆட்சியின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணம் எனும் நில எல்லைக்குள் பிராமணர்களின் மேலாதிக்கத்தின் எதிர்ப்பரசியலாகத் தோன்றி வளர்ந்தது. இது உள்ளீட்டில் பல்தேசிய இனத்தன்மை கொண்டும், நிலம் குறித்த அறிதலற்றும் முதன்மையாகச் சமூகச்சிக்கல்களைக் கொண்டும் இருந்தது. இதன் தொடக்கக் கட்டம் தமிழ்த்தேசியத்துடன் தீவிர முரண்களை எட்டியது. இதற்கு [[திராவிடர் கழகம்]] பெயர்சூட்டல் விவகாரம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. ஆனால், திராவிடர் இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் உருவான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்த்தேசிய உள்ளீட்டினைப் பெற்று வளர்ந்தது. தமிழர் வரலாற்றுப் பெருமைகள், தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழர் என்ற அடையாளப்படுத்தல் போன்றவற்றை திமுக பல்வேறு கட்டங்களில் தனதாக்கி வளர்த்தது. இவ்வாறாக திராவிடத் தேசியம் தொடக்கத்தில் முரண்பட்டும் பிறகு இணக்கமாகவும் தமிழ்த்தேசியத்துடன் உறவு கொண்டிருந்தது. திராவிடர் இயக்கத்தின் செல்வாக்கு மங்கத்தொடங்கிய 1990களில் தமிழ்த்தேசியம் மீள் உயிர் பெற்றது. தமிழ்த்தேசியத்திற்கும் திராவிடத்தேசியத்திற்கும் இடையேயான முதன்மையான வேறுபாடு இந்தியத் தேசியத்தோடு அவை கொண்டுள்ள உறவிலேயே தங்கியுள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடத்தேசியம் இந்தியத்தேசியத்தோடு நட்புமுரணாகவும் தமிழ்த்தேசியம் இந்தியத்தேசியத்தோடு பகைமுரணாகவும் உறவுகொண்டுள்ளன. இரண்டாம் வேறுபாடு நில இறையாண்மை குறித்த நிலைப்பாடு சார்ந்தது. அதாவது திராவிட இயக்கத்தின் கோட்பாட்டில் வாழும் நிலத்தின் மீது மக்கள் சமூகத்திற்கு இருக்கவேண்டிய இறையாண்மைக்கு இடமில்லை. ஆனால், தமிழ்த்தேசியத்திற்கு நிலம் இன்றியமையாத கூறாக உள்ளது. தமிழ்நாட்டின் எல்லைப்போராட்டக் காலமான 1950களில் தமிழ்த்தேசிய அக்கறை கொண்டிருந்த தமிழரசுக்கட்சி போன்ற கட்சிகள் தமிழர் நில உரிமைக்கு முன்னுரிமை கொடுத்தன. ஆனால், திராவிட இயக்கம் இதுகுறித்த அறிந்துணர்வற்று (பிரக்ஞையற்று) இருந்தது. இவ்வாறாக வாழும் நிலம் குறித்த நிலைப்பாடு திராவிடத்தேசியம் மற்றும் தமிழ்த்தேசியம் ஆகியவற்றுக்கும் இடையேயான இரண்டாவது வேற்றுமையாகும். இன்னமும் பல்வேறு வேற்றுமைகள் முரண்கள் இவ்விரு மெய்யியல் போக்குகளுக்கு இடையே நிலவுகின்றன.
 
== தமிழ்த்தேசியமும் தலித்தியமும் ==
வரிசை 114:
</ref>. மேலும், தலித்தியத்தின் பிரிக்கமுடியாத கூறு இந்தியத் தேசியமும் மொழிவழித் தேசிய இன மறுப்பும் ஆகும் என்றும் தமிழ்த்தேசியவாதிகள் எண்ணுகின்றனர். <ref>பெ.மணியரசன்: சாதியும் தமிழ்த்தேசியமும் நூல் பக்கம் 36
 
</ref> போக்குகளைக்கொண்டவையாக இருக்கின்றன. இந்தியாவில் தலித்திய அரசியல் அம்பேத்கருக்கு சற்று முன்னே அரசியல் வடிவம் பெற்றது. சாதியச் சமூகத்தில் ஒரு தாராளவாத அரசுசார்ந்த சீர்திருத்தங்களைத் தன் அரசியல் இலக்குகளாகக் கொண்டு தலித்தியத்தின் குறிக்கோள்கள் அமைகின்றன. தலித் எனும் சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர் என்று பொருள் ஆகும். தலித்தியம் என்றால் ஒடுக்கப்பட்டவர் மெய்யியல் என்று பொருள்படுத்தலாம். ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தலித்தியம் என்றால் சாதியால் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களையே நடைமுறையில் குறிக்கிறது தலித் என்பவர் தீண்டாமைக் கொடுமையால் பாதிப்புற்றவர் என்பதே பொருளாகக் கருதப்படுகிறது. தலித்தியம் இந்தியச் சமூகத்தை சாதிய அடிப்படைக் கட்டமைப்பாக அணுகுகிறது. இந்தியாவில் சாதிகள்தான் உள்ளன. தேசிய இனங்கள், மொழியினங்கள் போன்ற எந்த வகைப்பாடும் வெளித்தோற்றமே. உள்ளீடு சாதியக் கட்டமைப்பைத் தவிர வேறில்லை என்பது இதன் கருதுகோளாக உள்ளது. தலித்தியத்திற்கு மொழி ஒரு பொருட்டில்லை. சாதியால் தாழ்த்தப்பட்டோர் அனைவரும சமூக உரிமையால் தலித்துகளாக உள்ளனர். ஆகவே, தலித்தியம் சாதியொழிப்புக் கருத்தியலாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. தலித்தியம் ஒரு கோட்பாடாக எழுச்சி பெற்ற 1990களில் (அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சிக் காலம்) ஓர் அடையாள அரசியலாய் வீறுடன் எழுந்தது. சாதியொழிப்பு குறித்த அக்கறையையும் தேவையையும் முன்வைத்த தலித்தியம் தமிழ்த்தேசியத்துடன் நெருக்கமாக இருந்திட அதன் அகில இந்திய தலித்தியத் தலைவர்களின் இந்தியச்சார்பு அனுமதிக்கவில்லை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் அடையாளங்களை தமிழகத்தின் தாழ்த்தப்பட்டோர் கைவிடவேண்டும் என்றும் தமிழ்ப்பண்பாடு இந்தியப்பண்பாட்டுடன் தொடர்புடையது என்றும் இந்தியத் தலித் தலைவர்கள் கூறுகின்றனர். <ref>தலித் முரசு இதழ் 2007 ஆகஸ்ட், உத்தரப்பிரதேச தலித்தியலாளர் விவேக்குமார் நேர்காணல்</ref> ஆயினும், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்த்தேசியத்தையும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை அரசியலையும் ஒருங்கே முன்வைக்கும் கட்சியாக விளங்குகிறது.
 
== தமிழ்த் தேசியம் நோக்கி நேர்நிலை திறனாய்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது