பிசினி (நெல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
}}
 
'''பிசினி''' (''Pisini'') பாரம்பரிய [[நெல்]] வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட இரகமாகும். நூற்றி இருபது நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த வகை நெல்லின் அரிசி மோட்டாவாகவும், சிவப்பு நிறமும் கொண்டது. எவ்வகை மண்ணையும் ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், ஐந்தடி உயரம்வரை வளரும் தன்மையுள்ளது. கடும் வறட்சியையும், அதேநேரம் பெருவேள்ளத்தையும்பெருவெள்ளத்தையும் தாங்கி செழிக்கும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 28 மூட்டை (75 கிலோ மூட்டை) வரை மகசூல் கொடுக்கக்கூடியதாகும். நேரடி விதைப்புக்கும், மற்றும் நடவு முறைக்கும் ஏற்ற இந்த நெல்வகை, தொழு உரம் மட்டும் இட்டால் போதும். மிக எளிமையாகச் சாகுபடி செய்யகூடிய, பூச்சி தாக்குதல் அற்றது.<ref name="thehin>{{cite web |url=http://tamil.thehindu.com/general/environment/BF/article7544167.ece |title=நம் நெல் அறிவோம்: கொழுப்பைக் குறைக்கும் பிசினி |நெல் ஜெயராமன் |publisher=தி இந்து (தமிழ்) |date=© ஆகத்து 15, 2015 |accessdate=2016-12-16}}</ref>
 
[[உளுந்து]], மற்றும் பிசினி நெல்லின் [[அரிசி]] கலந்து களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி நீங்குவதாக கூறப்படுகிறது. மேலும், மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதாகவும் கருதப்படுகிறது. பெண்களின் பேறுகாலத்தில், பிசினி அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்தால், சுகப்பிரசவத்துக்கு உதவுதாகவும், மற்றும் இந்நெல்லை அவல் செய்து சாப்பிடச் சுவையாகவும், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கக்கூடிய தன்மை கொண்டதுமாகவும் கருதப்படுகிறது.<ref name="thehin"/>
"https://ta.wikipedia.org/wiki/பிசினி_(நெல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது