"இரண்டாம் விருபக்ஷ ராயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

376 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''இரண்டாம் விருபக்ஷ ராயன்''' (கி.பி. 1465-1485) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] 20 ஆண்டுக் காலம் ஆட்சி செய்தவன். இவன் [[சங்கம மரபு|சங்கம மரபினன்]].
 
இவன், தனக்கு முன்னிருந்த [[மல்லிகார்ஜுன ராயன்|மல்லிகார்ஜுன ராயனை]] ஆட்சியிலிருந்து அகற்றி அரசைக் கைப்பற்றினான். மல்லிகார்ஜுன ராயன் திறமையற்ற, ஊழல் மலிந்த அரசனாக இருந்ததுடன், பேரரசின் எதிரிகளுடன் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்தான். எனினும், இரண்டாம் விருபக்ஷ ராயனும், முன்னவனை விடச் சிறந்தவனாக இருக்கவில்லை. <ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom 2.37]</ref>
 
==தோல்விகள்==
தனது ஆட்சிக் காலம் முழுதும், குழப்பம் விளைவிக்கும் தலைவர்களையும் அதிகாரிகளையும் மட்டுமன்றி, பேரரசின் வலுவின்மையை உணர்ந்து அதன் பகுதிகளைக் கைப்பற்றத் துடிக்கும் பகை அரசர்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. 1470 ஆம் ஆண்டில் இவன் [[கொங்கண்கொங்கணம்]] கரையோரப் பகுதிகளை [[பஹமானிபாமினி அரசுசுல்தானகம்|பஹமானி அரசிடம்]] இழந்தான். பஹமானி சுல்தான் [[மூன்றாம் முஹம்மத் ஷா]] அனுப்பிய முதல் அமைச்சன் மஹமுத் கவான் [[கோவா]] உட்பட்ட இப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பஹமானி சுல்தான், [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]], [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை]] ஆறுகளிடை நிலப்பகுதியையும் கைப்பற்றினான். ஒரிசாவின் அரசன் [[புருஷோத்தம கஜபதி]], எல்லைக்குள் புகுந்து [[திருவண்ணாமலை]]யைப் பிடித்தான். இத் தோல்விகள் விருபக்ஷ ராயனை மதிப்பு இழக்கச் செய்ததோடு, பேரரசின் பகுதிகள் பலவும் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது.
 
==இறப்பு==
இந் நிலை, 1485 இல், விருபக்ஷ ராயன் தனது சொந்த மகனான [[பிரௌத ராயன்]] கையாலேயே கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2589874" இருந்து மீள்விக்கப்பட்டது