துளுவ நரச நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
 
==தெற்கில் பெற்ற வெற்றிகள்==
1463 ஆம் ஆண்டளவில் சாளுவ நரசிம்மனின் ஆட்சிக்காலத்தில், அவன் தலைநகருக்கு அண்மித்த பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டி இருந்தபோது, [[காவிரி]]க்குத் தெற்கேயிருந்த பகுதிகள் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொண்டன. 1496 ஆம் ஆண்டில் தெற்கு நோக்கிப் படையெடுத்த துளுவ நரச நாயக்கன், குழப்பம் விளைவித்த தலைவர்களை அடக்கினான். [[திருச்சி]], தஞ்சை ஆகிய இடங்களின் ஆளுநர்களும் இவர்களுள் அடங்குவர். கவிரிக்குத் தெற்கே [[குமரி முனை]] வரையான பகுதிகள் அனைத்தையும் நரச நாயக்கன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். சோழ, சேர நாடுகள், மதுரை, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியவற்றின் தலைவர்களும், விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இவ் வெற்றிகள் அனைத்தும் 1497 இல் நிறைவு பெற்ற ஒரே படையெடுப்பிலேயே கிடைத்தன. <ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.38- ]</ref>
 
1496 இல், கஜபதி அரசன் [[பிரதாபருத்திரன்]] விஜயநகரத்தைத் தாக்கினான். எனினும், எவருக்கும் வெற்றி தோல்வியின்றி நகரத்தைப் பாதுகாப்பதில் நரச நாயக்கன் வெற்றி பெற்றான்.
"https://ta.wikipedia.org/wiki/துளுவ_நரச_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது