பாக்கித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 121:
'''பாக்கித்தான்''' (''Pakistan'', ''பாகிஸ்தான்'', ({{audio|En-us-Pakistan.ogg|pækɨstæn}} அல்லது {{audio|En-us-Pakistan-2.ogg|pɑːkiˈstɑːn}}; {{lang-ur|{{Nastaliq|{{Linktext|پاکستان}}}}}}), அதிகாரபூர்வமாக '''பாக்கிஸ்தான் இசுலாமியக் குடியரசு''' ({{lang-ur|{{Nastaliq|اسلامی جمہوریۂ پاکستان}}}}), [[ஆசியா|ஆசிய]] கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கிஸ்தானும் ஒன்று. பாக்கிஸ்தானின் தலைநகர் [[இஸ்லாமாபாத்]]. [[கராச்சி]] முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள [[லாகூர்]] மற்றொரு முக்கிய நகரம்.
 
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கிஸ்தான் ஆறாவது [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மிகுந்த மக்கள்தொகையுடைய]] நாடாகும். 796,095&nbsp;கிமீ<sup>2</sup> ({{nowrap|307,374 ச மை}}) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் [[அரபிக்கடல்]] மற்றும் [[ஓமான் குடா|ஓமன் குடா]]வில் {{convert|1046|km|mi|adj=on}} தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் [[இந்தியா]]வும் மேற்கில் [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானும்]] தென்மேற்கில் [[ஈரான்|ஈரானும்]] வடகிழக்குக் கோடியில் [[சீன மக்கள் குடியரசு]]ம் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய ''வாகான் இடைப்பகுதி''யால் [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானிலிருந்து]] பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது [[கடல் எல்லை]]யை [[ஓமான்|ஓமனுடன்]] பகிர்ந்து கொண்டுள்ளது.
 
தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தின்]] [[மெஹெர்கர்|மெகெர்கரும்]] வெண்கல காலத்து [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகமும்]] குறிப்பிடத்தக்கன. [[இந்து]]க்கள், இந்தோ-கிரேக்கர்கள், [[இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு|முஸ்லிம்கள்]], துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், [[சீக்கியர்]]கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய [[மௌரியப் பேரரசு]], பெர்சிய [[அகாமனிசியப் பேரரசு]], [[பேரரசர் அலெக்சாந்தர்|மாசிடோனியாவின் அலெக்சாந்தர்]], அராபிய [[உமையா கலீபகம்]], [[மௌரியப் பேரரசு]], [[குப்தப் பேரரசு]] [[மங்கோலியப் பேரரசு]], [[முகலாயப் பேரரசு]], [[துராணிப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]] மற்றும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசு]] போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். [[இந்தியத் துணைக்கண்டம்|துணைக்கண்டத்தில்]] நிகழ்ந்த [[இந்திய விடுதலைப் போர்|விடுதலைப் போராட்டங்கள்]] மற்றும் [[முகமது அலி ஜின்னா]]வின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய '''பாக்கிஸ்தான்''' 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் [[மேலாட்சி அரசு முறை|டொமினியனாக]] இருந்தது. 1971ஆம் நடந்த [[வங்காளதேச விடுதலைப் போர்|உள்நாட்டுப் போருக்குப்]] பின்னர் [[கிழக்கு பாக்கிஸ்தான்]] பிரிந்து புதிய நாடாக [[வங்காளதேசம்]] என்ற பெயரில் உதயமானது.
"https://ta.wikipedia.org/wiki/பாக்கித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது