கோஸ்ட் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
 
== அரசியல் மற்றும் நிர்வாகம் ==
கோஸ்ட் மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அப்துல் ஜப்பர் நயீமி ஆவார். மாகாணத்தின் தலைநகராக [[கோஸ்ட்]] நகரம் உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தை ஒட்டியுள்ள பாக்கித்தானின் எல்லையைப் பகுதியை ஆப்கானிய தேசிய காவல்துறையின் (ஏஎன்பி) ஒரு பகுதியான ஆப்கானிய எல்லை பொலிசால் (ஏபிபீ) கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த எல்லை "தூரந்து லைன்" என அழைக்கப்படுகிறது. இந்த எல்லைப்பகுதியியல் தீவிரமான போராளி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத கடத்தல்களால் நடப்பதால் உலகின் மிகவும் ஆபத்தான பகுதியாக அறியப்படுகின்றது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய எல்லைதேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் [[காபூல்]] உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
 
== நலவாழ்வு பராமரிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கோஸ்ட்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது