தி. க. சிவசங்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ThikasivasanakaranSAV 5314.JPGjpg|thumbalt=|rightthumb|தி.க.சிவசங்கரன்]]
'''தி. க. சிவசங்கரன்''' (''Thi. Ka. Sivasankaran'', 30 மார்ச் 1925 - 25 மார்ச் 2014),<ref>{{cite web|title=உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழை வாழவைக்கவா? தற்பெருமையைப் பறைசாற்றவா? |url=http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5869:2010-04-16-04-59-45&catid=1020:10&Itemid=287|work=கீற்று|accessdate=30 சூலை 2010}}</ref><ref>{{cite news|title= நெல்லையில் மார்ச் 21-ல் தி.க.சி. பிறந்த நாள் விழா |url=http://dinamani.co.in/edition/print.aspx?artid=213082|accessdate=30 July 2010|newspaper=[[தினமணி]]|date=18 மார்ச் 2010}}</ref><ref name="Hindu27">{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/literary-critic-ti-ka-si-passes-away/article5832016 | title=Literary Critic Ti. Ka. Si passes away | publisher=[[தி இந்து]] | accessdate=26 மார்ச் 2014}}</ref> மார்க்சிய திறனாய்வாளர். [[திருநெல்வேலி]] நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான [[வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணனுடன்]] இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|இந்திய பொதுவுடமைக் கட்சி]] இலக்கிய இதழான தாமரையில் [[1960]] முதல் [[1964]] வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி [[1990]]ல் ஓய்வுபெற்றார். தி.க.சிவசங்கரனின் மகன் [[வண்ணதாசன்]] என்ற கல்யாணசுந்தரம் எழுத்தாளரும், தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியரும் ஆவார்.
 
வரிசை 5:
 
[[நா. வானமாமலை]], [[தொ. மு. சி. ரகுநாதன்]] ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர். [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனை]] ஒரு இலக்கிய முன்னுதாரணமாக [[க. நா. சுப்ரமண்யம்]] முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குத்தனமான கலாச்சார நசிவு சக்தி என்று அடையாளம் காட்டி "அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு" என்று அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு அக்கருத்துக்களை மாற்றிக் கொண்டார்.
 
== இதழாசிரியர் பணி ==
 
''<big>டிசம்பர் 14,1964இல் வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு, தோழர்.ஏ.எஸ்.மூர்த்தியின் பரிந்துரையின் பேரில், சோவியத் செய்திதுறை ஆசிரியர் குழுவில் இணைந்தார்.  இங்கு பணியாற்றிய காலத்திலேயே, 'தாமரை'யின் பொறுப்பாசிரியராக கடமையாற்றும் பேறையும் அவர் பெற்றார். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சோவியத் செய்தித்துறையிலும், மாலை வேளைகளில் ‘தாமரை’யின் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.</big>''
 
''<big>1965 முதல் 1972 வரை 'தாமரை'யின் நூறு இதழ்களுக்கு ஆசிரியராக திகழ்ந்து, நசிவு இலக்கியங்களுக்கு எதிரான இயக்கத்தை தோற்றுவித்தார். 'வியட்நாம் போராட்டச் சிறப்பிதழ், சிறுகதை சிறப்பிதழ், கரிசல் சிறப்பிதழ், மொழிபெயர்ப்பு சிறப்பிதழ்' என பல சிறப்பிதழ்களை கொண்டு வந்தார். அதே போல், சோவியத் செய்தித்துறையில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து 1990இல் ஒய்வு பெற்றார்.</big>''
 
==இளம் எழுத்தாளர் அறிமுகம்==
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சிவசங்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது