கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 51:
| வலைதளம் =
}}
 
'''கல்யாணபசுபதீசுவரர் கோயில்''' என்பது தமிழ்நாட்டில் [[கரூர் (கரூர் மாவட்டம்)|கரூர்]] நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் [[தேவாரம்]] பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது.
 
இத்தலத்தின் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபக்த நாயனார் தொண்டு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
 
== சன்னதிகள் ==
[[File:Karur Pasupateeswarar temple.jpg|thumb|left|700px|<div class="center" style="width:auto; margin-left:auto; margin-right:auto;">கரூர் பசுபதீசுவரர் ஆலயம்</div>]]
 
வரி 65 ⟶ 64:
புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில் அமைந்துள்ளன.
 
== அமைவிடம் ==
 
[[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தின்]] தலைமையிடமாக அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூரில், நகரின் மையப் பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையில் இக்கோவில் அமைந்துள்ளது.
 
== கோவில் அமைப்பு ==
[[File:Temple guard.JPG|thumb|கோயில் மதில் சுவரில் காணப்பட்டது]]
இக்கோவிலின் கொடிமரம் கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கமும் சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன.
வரி 81 ⟶ 79:
கோவிலின் தென்மேற்கு மூலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால் கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.
 
== தல வரலாறு ==
படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால் அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து சிவனிடம் போய் தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து படைப்புத் தொழிலை அவருக்கேத் திரும்ப அளித்து காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.
 
காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.
 
== பாடல் பெற்ற தலம் ==
[[எறிபத்த நாயனார்]] தோன்றியதும் [[புகழ்ச்சோழ நாயனார்]] ஆண்டதும் இத்தலமாகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. [[திருவிசைப்பா]] பாடிய [[கருவூர்த் தேவர்]] பிறந்தது இவ்வூரில்தான். இது [[திருஞான சம்பந்தர்|திருஞான சம்பந்தரால்]] [[தேவாரம்|தேவாரத்திலும்]] [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரால்]] [[திருப்புகழ்|திருப்புகழிலும்]] பாடப் பெற்றுள்ளது.
 
== திருவிழாக்கள் ==
இங்கு பங்குனி உத்திரம், ஆருத்தரா தரிசனம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
== ஆதாரங்கள் ==
[http://dinamani.com/weekly_supplements/vellimani/article1322845.ece கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோவில்] [[தினமணி]], நவம்பர் 02, 2012
 
== கருவிநூல் ==
தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.southdreamz.com/temple/sri-kalyana-pasupatheeswarar-temple-karur/ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்]
* [http://temple.dinamalar.com/New.php?id=503 அருள்மிகு கல்யாண பசுபதீசுவரர் திருக்கோயில்]
 
{{தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் திருத்தலங்கள்|கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்|கொடுமுடி மகுடேசுவரர் கோயில்||7|7}}
"https://ta.wikipedia.org/wiki/கரூர்_கல்யாணபசுபதீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது