"பிரெஞ்சு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*உரை திருத்தம்*)
இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரெஞ்சு மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரெஞ்சு மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரெஞ்சு மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரெஞ்சு மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரெஞ்சு அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.
 
பிரெஞ்சு மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இணைந்து ''லா பிரான்கோபோனீ'' எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. பிரான்சின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய உறவுகள் அமைச்சின் தகவலின் படி, ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். பிரான்சுக்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகளவில் கனடா (மக்கள் தொகையில் 25%த்தினர், பெரும்பாலானோர் கியூபெக்கில் வசிக்கின்றனர்.), பெல்ஜியம் (மக்கள்தொகையில் 45%த்தினர்), சுவிட்சர்லாந்து (மக்கள்தொகையில் 20%த்தினர்) மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் உள்ளனர். 2013ல், அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் இரண்டாவது பெரும்பான்மை மொழியாக பிரெஞ்சு உள்ளது. முதலிடத்தில் ஜெர்மானிய மொழியும் மூன்றாமிடத்தில் ஆங்கில மொழியும் உள்ளன.<ref>{{cite web|title=The status of French in the world|url=http://www.diplomatie.gouv.fr/en/french-foreign-policy-1/promoting-francophony/the-status-of-french-in-the-world/|work=France Diplomatie|publisher=Ministère des Affaires étrangères|accessdate=13 May 2013|year=2013}}</ref> ஐரோப்பாவில் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டிராத, 20%மான மக்கள் பிரெஞ்சு மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர்.{{Clarify|date=ஏப்ரல் 2013}} இது கிட்டத்தட்ட 145.6 மில்லியனாகும்.<ref>{{cite web|url=http://cpfont.on.ca/nav/faq/Why%20learn%20French/default.htm |title=Why learn French |publisher=Canadian Parents For French (Ontario) |date= |accessdate=21 ஏப்ரல் 2010}}</ref> 17ம் நூற்றாண்டுக்கும், 20ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சு மற்றும் பெல்ஜியம் (அவ்வேளையில் இது பிரெஞ்சு மொழி பேசுவோரால் ஆளப்பட்டது.). ஆகியவற்றின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக, அமெரிக்காக்கள், ஆபிரிக்கா, பொலினேசியா, லிவான்ட், தென்கிழக்காசியா மற்றும் கரீபியன் பிரதேசங்களில் பிரெஞ்சு மொழி அறிமுகமானது.
 
லாவல் பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பல்கலைக்கழக ஒன்றியம் ஆகியன நடத்திய சனத்தொகை எதிர்வுகூறல் ஆய்வின்படி, 2025ல் 500 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழி பேசுவர் எனவும், 2050ல் இது 650 மில்லியன் அல்லது உலக சனத்தொகையின் 7%மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.ledevoir.com/non-classe/69236/agora-la-francophonie-de-demain|title=Agora: La francophonie de demain|accessdate=13 June 2011}}</ref><ref>{{cite web|url=http://www.demographie.auf.org/IMG/pdf/BULLETIN_No_22.pdf |title=Bulletin de liaison du réseau démographie|accessdate=14 June 2011|archiveurl=http://web.archive.org/web/20120426011333/http://www.demographie.auf.org/IMG/pdf/BULLETIN_No_22.pdf|archivedate=26 ஏப்ரல் 2012}}</ref>
====பிரான்சில் சட்டத் தகுதிநிலை====
 
பிரான்சிய அரசியலமைப்பின்படி, 1992இலிருந்து பிரெஞ்சு மொழி உத்தியோகபூர்வ மொழியாகும்<ref>{{fr icon}} [http://www.languefrancaise.net/dossiers/dossiers.php?id_dossier=50 Loi constitutionnelle 1992]&nbsp;– {{lang|fr|C'est à la loi constitutionnelle du 25 juin 1992, rédigée dans le cadre de l'intégration européenne, que l'on doit la première déclaration de principe sur le français, langue de la République.}}</ref> (எவ்வாறாயினும் இதற்கு முன்னரான சட்ட வரைவுகளில் இது உத்தியோகபூர்வ மொழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (1539இலிருந்து)). பிரான்சின் உத்தியோகபூர்வ அரசாங்க வெளியீடுகள் மற்றும் பொதுக் கல்வியில் பிரெஞ்சு மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தங்கள் போன்ற சில இடங்களில் இவ்விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. விளம்பரங்கள் வெளிநாட்டு மொழிபெயர்ப்பொன்றைக் கொண்டிருக்கவேண்டும்.
 
பிரெஞ்சு மொழியை விட பல்வேறு பிராந்திய மொழிகளும் மொழி வழக்குகளும் காணப்படுகின்றன. பிராந்திய மொழிகளுக்கான ஐரோப்பியப் பட்டயத்தில் பிரான்சு கையெழுத்திட்டுள்ளது. எனினும், 1958ம் ஆண்டின் அரசியலமைப்புக்கு இது விரோதமாக உள்ளதால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.<ref>[http://www.mercator-research.eu/minority-languages/facts-figures/the-european-charter-for-regional-or-minority-languages-and-education The European Charter for Regional or Minority Languages and Education] ''Mercator'' Retrieved 11 ஏப்ரல் 2011</ref>
[[File:Arret.jpg|right|thumb|கியூபெக் பிரதேசத்தில் காணப்படும் நிறுத்தற் குறியீடு.]]
 
கனடாவில், ஆங்கில மொழிக்கு அடுத்த முதன்மை மொழியாக பிரெஞ்சு உள்ளது. மேலும், இவ்விரு மொழிகளும் அரசாங்க மட்டத்தில் உத்தியோகபூர்வ மொழிகளாய் உள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரே உத்தியோகபூர்வ மொழி பிரெஞ்சு ஆகும். இம் மாகாணத்தில் 7 மில்லியன் மக்கள், அதாவது சனத்தொகையின் 80.1% (2006 கணக்கெடுப்பு) மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். கியூபெக்கின் 95.0%மான மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகவோ அல்லது இரண்டாம் மொழியாகவோ பேசுகின்றனர். பிரெஞ்சைத் தாய்மொழியாகப் பேசுவோர் உள்ள நகரங்களில் இரண்டாமிடத்திலுள்ள மொன்றியல் நகரம் இங்கேயே அமைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக, இருமொழி மாகாணங்களாக நியூபிரென்சுவிக்கும், மானிட்டோபாவும் காணப்படுகின்றன. நியூபிரென்சுவிக்கின் சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினர் பிரெஞ்சு மொழி பேசுவோராய் உள்ளனர். ஆட்சிப் பகுதிகளின் (வடமேல் ஆட்சிப் பகுதிகள், நுனாவுட் மற்றும் யூகோன்) உத்தியோகபூர்வ மொழிகளில் பிரெஞ்சு மொழியும் ஒன்றாகும். இவற்றுள், யூகோனில் அதிகளவில் பிரெஞ்சு மொழி பேசுவோர் உள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 4%மாக உள்ளனர். கிழக்கு ஒன்ராரியோ, வடகிழக்கு ஒன்ராரியோ, நோவா ஸ்கோட்டியா, நியூபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், அல்பேர்ட்டா மற்றும் மானிட்டோபா ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்களவு பிரெஞ்சு சமூகத்தினர் உள்ளனர். ஒன்ராரியோ போன்ற பல மாகாணங்கள் இங்குள்ள சிறுபான்மையோருக்கு பிரெஞ்சு மொழியில் சேவைகளை வழங்குகின்றனர். போர்ட் ஔ போர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் இரு மொழி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது (இவ்விடங்களில் நியூபவுன்லாந்து பிரெஞ்சு என்ற வழக்கு பரவலாகப் பேசப்பட்டுள்ளது).ஏனைய எல்லா மாகாணங்களிலும் சிறியளவான பிரெஞ்சு சமூகத்தினர் உள்ளனர்.
 
கிட்டத்தட்ட 9,487,500 கனேடியர்கள் அல்லது சனத்தொகையில் 30%மானோர் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.<ref name="tlfq.ulaval">{{cite web|url=http://www.tlfq.ulaval.ca/axl/francophonie/OIF-francophones-est2005.htm |title=Qu'est-ce Que La Francophonie |publisher=Tlfq.ulaval.ca |date= |accessdate=2013-05-25}}</ref> 2,065,300 பேர் பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர்.<ref name="tlfq.ulaval" /> இருமொழிப் பாடசாலைத் திட்டம் மற்றும் பிரெஞ்சு வகுப்புகள் போன்றவற்றால் கடந்த இரு தசாப்த காலங்களில் பிரெஞ்சு மொழி தெரிந்த கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.{{Citation needed|date=May 2012}}
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2597867" இருந்து மீள்விக்கப்பட்டது