இலங்கைக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
=== தாதுகோபுரங்கள் ===
 
பௌத்தக் கட்டிடக்கலை தொடர்பில் இலங்கையில் காணப்படும் மிகப் பழைய கட்டிடவகை [[தாது கோபுரம்|தாதுகோபுரங்கள்]] ஆகும். இது [[பாளி மொழி]]யில் ''தூபா'' எனவும் [[சிங்கள மொழி]]யில் ''தாகபா'' எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவை பல வடிவங்களைக் கொண்டவையாக இருப்பினும் ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக் கோள வடிவம் கொண்டவை எனலாம். சிங்கள வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட மிகத் தொன்மையான தாதுகோபுரம், இலங்கையின் பண்டைய தலை நகரமான [[அனுராதபுரம்|அனுராதபுர]]த்தில் முன்னர் குறிப்பிட்ட தேவாநாம்பியதீசன் காலத்தில் கட்டப்பட்ட [[தூபாராமய|தூபாராம தாதுகோபுர]]மாகும். இந்தத் தாது கோபுரம் திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட தாது கோபுரங்கள் பல அனுராதபுரத்திலும், பிற்காலத் [[தலைநகரம்|தலைநக]]ரான [[பொலநறுவை]]யிலும், ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன. பின்னர் கட்டப்பட்ட தாதுகோபுரங்கள் பாரிய அளவு கொண்டவையாக இருந்தன. அனுராதபுரத்திலுள்ள கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, [[ருவன்வலிசாய தாதுகோபுரம்|ருவன்வலிசாய தாதுகோபுர]]மும்தாதுகோபுரமும், கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த [[அபயகிரி தாதுகோபுரம்|அபயகிரி தாதுகோபுர]]மும், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட [[ஜேதவன தாதுகோபுரம்|ஜேதவன தாதுகோபுர]]மும் உலகின் மிகப்பெரிய திண்மக் கட்டிட அமைப்புக்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியன.
 
== போதிகர ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது