உயிர்ப்பு ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
'''பாஸ்கா''' என்ற [[அரமேயம்|அரமேய மொழிச்]] சொல்லுக்கு '''கடந்து போதல்''' என்று பொருள். இது இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்பு பெற்றத்தன் நினைவாக கொண்டாடப்படும் யூதப் பெருவிழா ஆகும். [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] "''நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்"'' (1 கொரி 5 : 7 ) என்று [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல்]] கூறுகிறார். ஆகவே [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] கூறப்பட்டிருக்கும் [[பாஸ்கா|பாஸ்கா பெருவிழா]] என்பது இயேசுவின் சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன்னறிவிப்பாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆகவே அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளை புதிய பாஸ்கா பெருவிழாவாகக் கருதுகின்றனர்.
 
== கணக்கீடு ==
== கணிப்பு ==
{{இயேசுவின் உயிர்த்தெழுதல் நாட்கணிப்பு|collapsible=collapsible}}
உயிர்ப்புத் திருநாளைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. ஏனெனில் [[எபிரேய நாட்காட்டி|எபிரேய நாட்காட்டியின்]] படி இயேசு, நிசான் மாதம் 14ஆம் நாளன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளான நிசான் மாதம் 16ஆம் நாளன்று உயிர்த்தெழுந்தார். இதன்படி கணக்கிட்டால் புனித வெள்ளியும் உயிர்ப்பு ஞாயிறும் ஆண்டுதோறும் வெவ்வேறு கிழமைகளில் வரும். ஆகவே கி.பி. 325ம் ஆண்டு குழுமிய முதல் நைசீய பொதுச்சங்கம், [[மார்ச்]] மாதம் வரும் [[சம இரவு நாள்|சம இரவு நாளான]] 21ம் தேதிக்குப் பின் வரும் [[பூரணை|முழு நிலவு]] நாளிலோ அல்லது அதற்கு பிறகோ வரும் முதல் [[ஞாயிறு (கிழமை)|ஞாயிற்றுக்கிழமையே]] உயிர்ப்புத் திருநாள் என்று அறிவித்தது.<ref>https://www.timeanddate.com/calendar/determining-easter-date.html</ref> அதைப் பின்பற்றி [[மேற்கத்திய கிறித்தவம்|மேற்கு]] மற்றும் [[கிழக்கத்திய கிறித்தவம்|கிழக்கு]] கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ப்பு_ஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது