"கண்ணதாசன் கவிதைகள் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

359 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''கண்ணதாசன் கவிதைகள் ''' என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த “காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் 1959 ஆம் ஆண்டு <ref> முத்தையன், பொன்; கண்ணதாசன் காப்பியங்கள்: சமூக வரலாற்று அரசியல் பின்னணி; முனைவர் பட்ட ஆய்வேடு; அரசினர் கல்லூரி, கும்பகோணம்; 1998; பக்.305</ref> சனவரித் திங்கள் முதல் நாள் எழுதிய “கிழவன் சேதுபதி” என்னும் கவிதை வரை கண்ணதாசன் எழுதிய பல கவிதைகளில் இருந்து சில கவிதைகளை கவிஞர் [[நாக. முத்தையா]] தேர்ந்தெடுத்து எட்டு பிரிவுகளின் கீழ் தொகுத்திருக்கிறார். அவர் “சில சொற்கள்” என்னும் தலைப்பில் ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். <ref name = “kd”> கண்ணதாசன், கண்ணதாசன் கவிதைகள், சென்னை, காவியக்கழகம், 1959 </ref> “பதிப்பகத்தார் உரையை” காவியக்கழகத்தின் உரிமையாளர் கண்ணப்பா வள்ளியப்பன் எழுதியிருக்கிறார். இந்நூலின் மூன்றாம் பதிப்பு 1960ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கிறது. <ref> சங்கீதா, பா; கண்ணதாசன் படைப்புகளில் பெண்ணியம்; முனைவர் பட்ட ஆய்வேடு; தமிழ் ஆய்வு மையம், ஏ.பி.சி.மகளிர் கல்லூரி, தூத்துக்குடி; பக்.213</ref> நான்காம் பதிப்பு 1968ஆம் ஆண்டில் வானதி பதிப்பகத்தின் வழியாக வந்திருக்கிறது. <ref> கவிதா, சு; கண்ணதாசன் கவிதைகளில் அகத்திணைக்கூறுகள்; முனைவர் பட்ட ஆய்வேடு; அரசர் கல்லூரி, திருவையாறு; 2013 </ref>
 
== உள்ளே ==
485

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2599859" இருந்து மீள்விக்கப்பட்டது