"சீனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (removed Category:உணவுகள் using HotCat)
[[படிமம்:Sugar 2xmacro.jpg|thumb|250px|சீனி-படிக அமைப்பு (கற்கண்டு)]]
'''சீனி''' (இந்திய வழக்கில் சர்க்கரை) சிறிய கட்டிகளால் ஆன திண்மப் பொருளாகும். சீனி பல பொருட்களில் இருந்து வருவிக்கப்படுகின்றது.சீனியானது [[கரும்பு]] மற்றும் [[பீட்ரூட்]] போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இது [[இந்தியா]], [[பாக்கிஸ்தான்]], [[சீனா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]] நாடுகளில் கரும்பில் இருந்தே பெறப்படுகின்றது. இலங்கையில் [[திருகோணமலை]], [[கந்தளாய்]] பகுதியில் சீனித் தொழிற்சாலைகள் இருந்தன. பின்னர் மூடப்பட்டன. இது பொதுவாக [[சுக்குரோசு]] (''Sucrose'') எனப்படும் [[கார்போஹைட்ரேட்டு]] ஆகும். எளிய சர்க்கரைகள் [[ஒற்றைச்சர்க்கரை]]களையும் (''monosaccharides'') [[குளுக்கோசு|குளுக்கோஸ்]] [[காலக்டோசு|காலக்டோஸ்]] மற்றும் புருக்டோசையும் (''fructose'') கொண்டவை. தானிய சர்க்கரை பாரம்பரியமாக பயன் படுத்தப்பட்டு வருவதாகும். இதில் [[இரட்டைச்சர்க்கரை]]யான [[சுக்குரோசு]] காணப்படுகின்றது. [[இரட்டைச்சர்க்கரை|இரட்டைச்சர்கரைகளில்]] லாக்டோசு (''Lactose'') மற்றும் மால்டோசு (''Maltose'') போன்றவையும் அடங்கும். சர்க்கரையின் நீண்ட தொகுப்புக்கள் ஒலிகோசர்க்கரைகள் (''Oligosaccharide'') என அழைக்கப்படுகின்றன. வேறு சில இரசாயனப் பொருட்களும் சீனியின் இனிப்புத்தன்மையைக் கொண்டிருக்கும். எனினும் அவற்றை சீனியாகப் பாகுபடுத்த முடியாது. சில இரசாயனப் பொருட்கள் குறைந்த கலோரியைக் கொண்ட உணவு மாற்றுக்களாகப் பயன்படுகின்றன, அவற்றை [[சர்க்கரைப் பதிலீடு]] என அழைப்பர்.
 
[[படிமம்:Canaviais Sao Paulo 01 2008 06.jpg|thumb|[[கரும்பு]]ப் பயிர்ச்செய்கை]]சீனியானது பல்வேறு தரப்பட்ட தாவரங்களின் [[இழையம்|இழையத்தில்]] காணப்படுகின்றது. எனினும் [[கரும்பு]] மற்றும் [[பீட்ரூட்|பீற்றூட்]] போன்றவற்றிலேயே கூடிய செறிவுடனான இலகுவாகப் பிரித்தெடுக்கக்கூடிய சீனி வகை காணப்படுகின்றது. கரும்பானது பாரிய ஒரு புல் வகைத் தாவரம் ஆகும். வெப்பமண்டல காலநிலைகளில் இதனை அறுவடை செய்யலாம். இது உலகத்தின் கிழக்குப்பிரதேசத்தில் பண்டைக்காலம் தொட்டே பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. 18 ஆம் நூற்றாண்டிலே கரும்பு பாரிய விளைச்சலைப்பெற்றதோடு மட்டுமன்றி அதன் மூலம் பாரிய அளவு சீனியும் அதாவது சர்க்கரையும் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வறு நிகழ்ந்தது [[மேற்கு இந்தியா]] மற்றும் [[அமெரிக்கா]]ப் பிரதேசங்களிலேயே ஆகும். இதுவே பொது மக்களும் கரும்பின் மூலம் சீனியைப்பயன்படுத்திய முதல் தடவையாகும். இதற்கு முன் [[தேன்]] போன்றவையே இனிப்புத் தேவைக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. [[பீட்ரூட்]] ஒரு வகையான வேர்ப்பயிர் ஆகும். இது குளிர்மையான காலநிலைகளில் பயிரிடக்கூடியதாகும். அத்துடன் 19 ஆம் நூற்றான்டில் சீனிக்குப்பயன் படுத்தக்கூடிய பிரதான வளமாக மாறியதுடன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய நிலைமையை அடைந்தது. வர்த்தகமும் சீனி உற்பத்தியும் பலவழிகளில் மனித வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது.
 
== வரலாறு ==
இடைக் காலங்களில் சர்க்கரை இந்திய துணைக் கண்டத்தில் உற்பத்தி செய்தனர். இக்காலக்கட்டங்களில் சர்க்கரை ஆனது மிகவும் மலிவான விலையில் கிடைக்கப் பெற்ற பொருளாகும். இதே சமயத்தில் தேனின் பயன்பாடானது அறிதற்குரிய ஒரு பொருளாக இருந்தது. இதன் பயன்பாடானது உலகெங்கிலும் மிகவும் குறைவாகவே இருந்தது. சீனி உற்பத்தியாகும் தாவரம் ஆங்கிலத்தில் சுகர் கேன் என்று அழைப்பார்கள். சுகர் கேன் உடைய பிறப்பிடம் வடக்கு ஆசியா மற்றும் வட மேற்கு ஆசியாவாகும். கி.மு.500க்கு முன்னரே இத்தாவரம் இந்தியாவில் பயிரடப்பட்டு வேளாண்மை செய்யப்பட்டு இருந்தது. சுகர் கேன் எனப்படும் கரும்புச் செடியிலிருந்து சர்க்கரையை பிரிக்க இதனை கூழ்மாக மாற்றி மிகப் பெரிய கொப்பரைகளில் கொட்டி அதனை படிக அமைப்பாக மாற்றுகின்றனர். இந்த படிகம் இந்திய மொழியில் கந்தா [[:en:Devanagari|(Devanagari:खण्ड,Khaṇḍa)]] என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே கேன்டி (''candy'') என்ற வார்த்தை பிறந்தது.
 
== வேதியியல் ==
அறியல்பூர்வமாக சீனி என்பது ஒற்றைச்சர்க்கரைகள், இரட்டைச்சர்க்கரைகள் மற்றும் கூட்டுச்சர்க்கரைகள் அடங்கிய கார்போவைதரேட்டுகளை குறிக்கிறது. மோனோசேக்கரைடுகள் "எளிய சர்க்கரை" என்றும் அழைக்கப்படுகின்றன, இதி்ல் குளுக்கோசு முக்கியமானது ஆகும்.ஒற்றைச்சர்க்கரைகள் பொதுவாக {{chem|C|n|H|2n|O|n}} என்ற அமைப்பியல் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். இதில் n என்பது கரிம அணுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். இது 3 முதல் 7 வரையிலான எண்களை கொண்டிருக்கம். குளுக்கோசுவின் மூலக்கூறு வாய்ப்பாடு {{chem|C|6|H|12|O|6}} ஆகும்.
ஒற்றைச்சர்க்கரைகளும், இரட்டைச்சர்க்கரைகளும் [[சீனி|சீனி அல்லது சர்க்கரை]] என பொது வழக்கில் அழைக்கப்படுகின்றன<ref>{{cite journal|doi=10.1038/421219a|title=Sugars tied to the spot|year=2003|last1=Flitsch|first1=Sabine L.|last2=Ulijn|first2=Rein V|journal=Nature|volume=421|issue=6920|pages=219–20|pmid=12529622}}</ref>.
 
 
=== இயற்க்கை பலபடிச் சேர்மம் ===
சர்க்கரையின் உயிர்பலபடிச் சேர்மம் பொதுவாக இயற்கையில் அமைந்துள்ளன.ஒளிச்சேர்க்கை மூலமாக தாவரங்கள் கிளிசரால்டிகைடு முப்பாசுப்பேட்டை (glyceraldehyde-3-phosphate (G3P)) தயாரிக்கின்றன. 3 கரிம அணுக்களைக் கொண்ட பாசுபேட்டேற்றம் செய்யப்பட்ட சர்க்கரையைக் கொண்டு பச்சய செல்களானது குளுக்கோசு ({{chem|C|6|H|12|O|6}}) அல்லது கரும்பு மற்றும் கிழங்குகளில் உள்ள சுக்ரோசு ({{chem|C|12|H|22|O|11}}) போன்ற ஒற்றைச்சர்க்கரைகள் உருவாக்கப்படுகின்றன.இந்த ஒற்றைச்சர்க்கரைகள் மேலும் மாற்றப்பட்டு அமைப்பு பல்கூட்டுச்சர்க்கரைகளாக செலுலோசு , பெக்டின் போன்ற அணுச்சுவர் கட்டமைப்பாகவோ அல்லது ஆற்றல் சேமிப்பு வடிவங்களான மாச்சத்து தரசமாகவோ (''Starch'') அல்லது இனுலின் (''Inulin'') ஆகவோ மாற்றப்படுகின்றன.
 
== வகைகள் ==
=== ஒற்றைச்சர்க்கரை ===
'''ஒற்றைச்சர்க்கரைகள்''' (''Monosaccharide'') என்பன தனித்த [[மூலக்கூறு|மூலக்கூறினாலான]], அத்தியாவசியமான [[காபோவைதரேட்டு]] எனப்படும் [[ஊட்டக்கூறு|ஊட்டக்கூறின்]] எளிய அடிப்படை அலகாகும். இவற்றிலுள்ள [[கரிமம்|கரிம]] (carbon) எண்ணிக்கையின் அடிப்படையில் டையோஸ், டிரையோஸ், டெட்ராஸ், பென்டோஸ், ஹெக்சோஸ் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன. டிரையோசுகள் (''Trioses'', C3H6O3) வளர்சிதைமாற்றத்தில் இடைநிலைப் பொருட்களாகத் தோன்றுபவை. உயிர் மூலக்கூறுகளை இடைமாற்றம் செய்வதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு. பென்டோசுகளில் (''Pentoses'', C5H10O5) முக்கியமானவை [[கரு அமிலம்|கரு அமிலங்களின்]] கூறுகளான, ரைபோஸ் (''Ribose''), டியாக்சிரைபோஸ் (''Deoxyribose'') போன்றவை. இவை [[ஆர்.என்.ஏ]], [[டி.என்.ஏ]] மூலக்கூறுகளின் முக்கிய அங்கங்களாகும். ஹெக்சோசுகள் (''Hexoses'', C6H12O6) [[குளுக்கோசு]] (Glucose), ஃப்ரக்டோசு (''Fructose''), காலக்டோசு (''Galactose'') எனும் பொருட்களாக [[உணவு|உணவில்]] உள்ளன.
 
காபோவைதரேட்டுகள் [[உயிரணு]]க்களில் [[சக்தி]] தோன்றுதலுக்கு உதவுகின்றன. சக்தி உற்பத்திக்கான [[வளர்சிதைமாற்றம்]] [[சித்திரிக்கமில சுழற்சி]]யினால் ஏற்படும். உற்பத்தியாகும் சக்தி ATP (''Adenosine triphosphate'') மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படும். ஒவ்வொரு கிராம் காபோவைதரேட்டும் 4.1 கலோரி அளவிற்குச் சக்தியினைத் தரும்.
 
=== இரட்டைச்சர்க்கரைகள் ===
* '''[[லாக்டோசு]]'''
 
[[மால்ட்டோசு]] (''Maltose'') இரண்டு [[குளுக்கோசு]] மூலக்கூறுகளின் இணைப்பால் ஆனது. இவை [[முளைத்தல்|முளைத்த]] [[தானியம்|தானியங்களில்]] காணப்படும். [[சுக்குரோசு]] என்பது ஒரு குளுக்கோசு மூலக்கூறும், ஒரு [[புருக்டோசு]] மூலக்கூறும் இணைந்து உருவாவதாகும். இது [[கரும்பு|கரும்புச்]] சாற்றில் காணப்படும். [[லாக்டோசு]] என்பது ஒரு குளுக்கோசு மூலக்கூறும், ஒரு [[காலக்டோசு]] மூலக்கூறும் இணைந்து உருவாவது ஆகும். இது அனைத்து வகைப் பாலிலும் காணப்படும்.
 
 
| [[கிழங்கு]]|| 27.9|| 0.5|| tr|| tr|| tr|| na|| tr
|-
| கரும்பு|| || 13 – 1813–18|| 0.2 – 12–1.0|| 0.2 – 12–1.0|| 11 – 1611–16|| 1.0|| உயர் செறிவு
|-
| [[பீட்ரூட்]]|| || 17 – 1817–18|| 0.1 – 01–0.5|| 0.1 – 01–0.5||16 – 1716–17|| 1.0|| உயர் செறிவு
|}
 
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2599914" இருந்து மீள்விக்கப்பட்டது