வரைவிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
 
இவற்றைவிட, அகரமுதலிகளில் கொடுக்கப்படும் விளக்க வரைவிலக்கணங்களை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பயன்படுத்துவதற்காக மேலதிக criteriaக்களின்கட்டளை விதிகளின் (criteria) அடிப்படையில் அச் சொல்லை ஒரு குறுகிய பொருள் குறிக்கும் வகையில் கொடுப்பது [[துல்லியமாக்கல் வரைவிலக்கணம்]] (precising definition) எனப்படுகின்றது. [[சி. எல். ஸ்டீவன்சன்]] என்பவர் [[இணக்கமுறை வரவிலக்கணம்]] (persuasive definition) என்னும் ஒரு வகையை எடுத்துக் காட்டி உள்ளார். இணக்கமுறை வரைவிலக்கணம் என்பது எடுபொருள் வரைவிலக்கணத்தின் ஒரு வடிவம் ஆகும். இது, உண்மையான அல்லது பொது வழக்கிலுள்ள பொருளை விளக்குவதாகக் கூறிக்கொண்டு பொருளில் மாற்றம் செய்யும் வரைவிலக்கணம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நோக்கை நிறுவும் நோக்கில் இவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுப்பது உண்டு. ஸ்டீவன்சன், சில வரைவிலக்கணங்கள் ''சட்டமுறை'' அல்லது ''கட்டாயமானவை'' என்கிறார். இவை, [[உரிமை]]கள், [[கடமை]]கள், [[குற்றம்|குற்றங்கள்]] போன்றவற்றுக்குப் புதிய பொருள் கொடுக்க அல்லது ஏற்கெனவேயுள்ள பொருளில் மாற்றங்கள் செய்யப் பயன்படுகின்றன.
 
 
வரிசை 20:
 
 
வரைவிலக்கணம் ஒரு பொருளின் அடிப்படையான பிழிவைக் குறிக்கும் கூற்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம், ''பெயரளவுப்'' பிழிவு (nominal essence), உண்மைப்''உண்மை''ப் பிழிவு (real essence) என்ற வேறுபாட்டுக்கு வித்திட்டது. இதையும் அரிஸ்ட்டாட்டிலே தொடக்கி வைத்தார். உருவாக்கப்பட்ட சொல்லொன்றின் பொருளை, அச் சொல் குறிக்கும் பொருளின் அடிப்படை இயல்புகளை அறிந்து கொள்ளாமலேயே, நாம் அறிந்து கொள்ளலாம் என்று, ''போஸ்ட்டீரியர் அனாலிஸ்ட்டிக்'' (Posterior Analytics) என்னும் அவரது உரையிலுள்ள ஒரு பத்தியில் அரிஸ்ட்டாட்டில் கூறுகிறார். இது மத்தியகாலத் தருக்க அறிஞர், ''பெயரின் என்ன தன்மை'' க்கும், அப்பெயர் குறிக்கும் பொருளின் எல்லாப் பொருட்களிலும் காணும் அடிப்படை இயல்பைக் குறிக்கும் ''பொருளின் என்ன தன்மை'' என்பதற்கும் இடையில் வேறுபாடு கண்டதில் முடிந்தது.
 
 
இது, ''[[பெயரளவு வரைவிலக்கணம்]]'', ''[[உண்மை வரைவிலக்கணம்]]'' என்பவற்றுக்கிடையே வேறுபாடு காண்பதற்கு வழி சமைத்தது. பெயரளவு வரைவிலக்கணம் என்பது சொல் எப்பொருள் குறிக்கிறது என்பதை விளக்குவதாகும். ஆனால், உண்மை வரைவிலக்கணம் அச் சொல் குறிக்கும் பொருளின் உண்மை இயல்பை வெளிப்படுத்துவது ஆகும்.
 
 
இந்தப் ''பிழிவு'' தொடர்பிலேயே நவீன மெய்யியலின் பெரும்பகுதி கழிந்தது. குறிப்பாகப் பகுத்தாய்வு மெய்யியல், ஒரு பொருளின் ''பிழிவை'' விளக்கும் முயற்சியை விமர்சித்தது. [[பேட்ரண்ட் ரஸ்ஸல்|ரஸ்ஸல்]] என்பார் இதை "சரி செய்ய முடியாத அளவுக்குக் குழம்பிய மூளைக்குரிய எண்ணக்கரு" என்று விளக்கினார்.
 
[[பகுப்பு:மொழி]]
"https://ta.wikipedia.org/wiki/வரைவிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது