வளர்சிதை மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''வளர்சிதைமாற்றம்''' (Metabolism) என்பது உயிர்வாழ்வதற்காக [[உயிரினம்|உயிரினங்களில்]] நடைபெறும் ஒரு தொகுதி [[வேதி வினை]]கள் ஆகும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், [[இனப்பெருக்கம்]] செய்வதற்கும், தமது [[உடல்|உடலமைப்பைப்]] பராமரிப்பதற்கும் உதவுகின்றன. வளர்சிதைமாற்றம் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, [[சிதைமாற்றம்]] (catabolism), [[வளர்மாற்றம்]] (anabolism) என்பனவாகும். சிதைமாற்றம் பெரிய மூலக்கூறுகளைச் சிறியனவாக உடைக்கின்றது. வளர்மாற்றம் சத்தியைப் பயன்படுத்தி [[புரதம்]], [[கருவமிலம்|நியூக்கிளிக் அமிலம்]] போன்ற [[உயிரணு|கலத்தின்]] கூறுகளை உருவாக்குகின்றது.
 
வளர்சிதைமாற்றத்தின் வேதிவினைகள் [[வளர்சிதைமாற்றச் செல்வழி]]களாக ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஒரு வேதிப்பொருள் இன்னொன்றாக மாறுவது ஒரு தொகுதி [[நொதியம்|நொதியங்களின்]] மூலம் நடைபெறுகின்றது. வளர்சிதைமாற்றத்துக்கு நொதியங்கள் மிகவும் இன்றியமையாதனவாகும். ஏனெனில், இவையே விரும்பத்தக்க, ஆனால் வெப்ப இயக்கவியல் அடிப்படையில் சாதகமற்ற வேதிவினைகளை [[இணைத்தல் (இயற்பியல்)|இணைத்தல்]] முறை மூலம் சாதகமானவையாக்கி உயிரினங்களில் அவை நிகழ உதவுகின்றன. நொதியங்கள், கலங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு அல்லது பிற கலங்களில்கலங்களில இருந்து வரும் சைகைகளுக்கு அமைய, வளர்சிதைமாற்றச் செல்வழிகளை நெறிப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
 
ஒரு உயிரினத்தில் நிகழும் வளர்சிதைமாற்றங்களே எப்பொருள் அவ்வுயிரினத்துக்கு ஊட்டம் தருவது எது [[நஞ்சு|நஞ்சாக]] அமைவது என்பதையும் தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டாக, சில [[நிலைக்கருவிலி]]கள் [[ஐதரசன் சல்பைடு|ஐதரசன் சல்பைடை]] [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தாகப்]] பயன்படுத்துகின்றன, ஆனால் இவ் [[வளிமம்]] [[விலங்கு]]களுக்கு நஞ்சாகும். வளர்சிதைமாற்றத்தின் வேகம், அதன் வேகவீதம் என்பனவும் ஒரு உயிரினத்துக்கு எவ்வளவு [[உணவு]] தேவை என்பதைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வளர்சிதை_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது