நிலவு மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
[[படிமம்:Penumbral lunar eclipse 1999 jan 31.png|280px|thumb|ஜனவரி 1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முழுமையான புறநிழல் நிலவு மறைப்பு ]]
[[படிமம்:Lunareclipsediagram.svg|thumb|280px|நிலவு மறைப்பின் வகைகள்]]
புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இரண்டு மாறுபட்டஇருவேறு பகுதிகளாகப் பிரிக்கலாம். கருநிழலிற்குள், நேரடியாக கதிரவனின் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது. எனினும், கதிரவனின் பெரிய கோண அளவின் விளைவாக, கதிரவனின் ஒளி, புவியின் நிழலின் வெளிப்புறப் பகுதியில் மட்டுமே ஓரளவிற்குத் தடுப்பதாக இருக்கும். எனவே இது புறநிழல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.[[படிமம்:Geometry of a Lunar Eclipse.svg|thumb|280px|புவியின் நிழல் நிலவில் விழுவதை விளக்கும் வரைபடம்.]]'''புறநிழல் நிலவு மறைப்பு''' என்பது புவியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. அப்போது நிலவின் பகுதி இருண்டு காணப்படும். புவியின் புறநிழலிற்குள் நிலவு முழுமையாக கடந்து செல்லும் போது ஏற்படும் சிறப்பு வகை புறநிழல் மறைப்பு '''முழுமையான புறநிழல் நிலவு மறைப்பு''' எனப்படுகிறது. இது மிக அரிதாகவே ஏற்படும். மேலும் இது ஏற்படும் போது கருநிழலுக்கு மிகவும் அருகில் இருக்கும் நிலவின் பகுதி நிலவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக இருண்டு காணப்படலாம்.
 
'''பகுதி நிலவு மறைப்பு''' என்பது நிலவின் ஒரு பகுதி மட்டும் கருநிழலிற்குள் நுழைவதால் ஏற்படும் நிகழ்வாகும். நிலவானது புவியின் கருநிழலிற்குள் முழுமையாக கடந்து செல்லும் போது, '''முழுமையான நிலவு மறைப்பு''' ஏற்படுகிறது. அந்த நிழலில் நிலவின் வேகம் வினாடிக்கு சுமார் ஒரு கிலோமீட்டராக (2,300&nbsp;mph) இருக்கிறது. ஆகவே அந்த முழு மறைப்பானது கிட்டத்தட்ட 107 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். எனினும் புவியின் நிழலுடன் நிலவின் முதல் மற்றும் இறுதி தொடர்புக்கு இடையில் உள்ள மொத்த நேரம் மிகவும் நீண்டதாக இருக்கிறது. எனவே அது 3.8 மணி நேரங்கள் வரை நீடிக்கலாம்.<ref>{{cite book | title=Fundamental Astronomy | url=http://books.google.com/books?id=DjeVdb0sLEAC&pg=PA139&lpg=PA139&dq=lunar+eclipse+%22maximum+duration%22&source=web&ots=2g2ku9x57X&sig=x5J8rF3DEVu4-TkJGhYr9LhW_GQ | last = Hannu Karttunen | publisher = Springer}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நிலவு_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது