யூலியசு சீசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Federico Leva (BEIC)ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
'''கையுசு யூலியசு சீசர்''', சுருக்கமாக '''யூலியசு சீசர்''' (''ஜூலியஸ் சீசர்'', ''Gaius Julius Caesar'', சூலை 12 அல்லது சூலை 13, கிமு 100<ref>There is some dispute over the date of Caesar's birth. The day is sometimes stated to be 12&nbsp;July when his feast-day was celebrated after deification, but this was because his true birthday clashed with the ''[[Ludi Apollinares]]''. Some scholars, based on the dates he held certain magistracies, have made a case for 101 or 102&nbsp;BC as the year of his birth, but scholarly consensus favors 100&nbsp;BC. Goldsworthy, 30</ref> – மார்ச் 15, கிமு 44) [[பண்டைய ரோம்|உரோம]] இராணுவ மற்றும் அரசியற் தலைவர் ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார். [[இலத்தீன்]] உரைநடை இலக்கியம் படைத்த எழுத்தாளருமாவார்.
 
[[உரோமைக் குடியரசு|உரோமைக் குடியரசின்]] வீழ்ச்சிக்கும் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] எழுச்சிக்கும் வித்திட்ட நிகழ்வுகளில் முக்கியப் பங்கேற்றார். கிமு 60 ஆம் ஆண்டில், சீசர், கிராசசு, பாம்பெ என்ற மூவரும் முதல் மூவராட்சியை ஏற்படுத்தினர்; இந்த அரசியல் கூட்டணி பல ஆண்டுகளுக்கு உரோமானிய அரசியலில் தாக்கத்தை விளைவித்தது. மக்கள் விரும்பும் திட்டங்கள் மூலம் அதிகாரத்தை குவிக்கும் இவர்களது திட்டங்களை செனட்டின் பழமைவாத ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர். கிமு 51இல் சீசர் கவுலில் பெற்ற வெற்றிகள், உரோமின் ஆட்சியை [[ஆங்கிலக் கால்வாய்]] மற்றும் [[ரைன் ஆறு]] வரை நீட்டியது. இவை இரண்டையும் கடந்த முதல் உரோமை படைத்தலைவராக சீசர் ரைன் ஆற்றின் மீது பாலத்தைக் கட்டினார்; பிரித்தானியா மீதான முதல் ஊடுருவலை மேற்கொண்டார்.
 
கிமு 53இல் கார்கெ போரில் கிராசசின் இறப்பிற்குப் பின்னர் பாம்பெ செனட்டுடன் ஒத்துழைக்கத் துவங்கினார்; தனது படைத்துறை சாதனைகளால் செல்வாக்குப் பெற்றிருந்த சீசர் பாம்பெயை எதிர்த்து நின்றார். கவுலில் போர் முடிவுற்றபோது செனட் சீசரை பதவி விலகி உரோமிற்குத் திரும்பப் பணித்தது. இதனை ஏற்க மறுத்த சீசர் கிமு 49&nbsp;இல் ரூபிகான் ஆற்றைக் கடந்து உரோமானியப் படைகளுடன் கடந்து வந்து இத்தாலியை அடைந்தார்.<ref>{{cite book|last=Keppie|first=Lawrence|title=The making of the Roman Army: from Republic to Empire|year=1998|publisher=University of Oklahoma Press|location=Norman, OK|isbn=978-0-8061-3014-9|page=102|chapter=The approach of civil war}}</ref> இதனால் விளைந்த உள்நாட்டுப் போரில் வென்ற சீசர் எதிர்பற்ற சர்வாதிகாரியாக மாறினார்.
 
அரசை தன்வயப்படுத்திய சீசர், சமூக, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளலானார். புதிய [[யூலியன் நாட்காட்டி]]யை உருவாக்கினார். குடியரசின் அதிகாரங்களை மையப்படுத்தினார். ''எக்காலத்திற்கும் சர்வாதிகாரி'' என அறிவித்தார். இருப்பினும் அரசியல் கிளர்ச்சிகள் முழுவதுமாக அடக்கப்படவில்லை; [[நட்ட நடு மார்ச்சு]] (15&nbsp;March) கிமு44&nbsp;இல், புரூட்டசின் தலைமையிலான செனட் உறுப்பினர்கள் சீசரைக் கொலை செய்தனர். தொடர்ந்து உரோமானிய உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன; இதன்பிறகு அரசியல் சட்டத்தின்படியான முழுமையான குடியரசு நிறுவப்படவில்லை. சீசரின் வளர்ப்பு மகனான ஓக்டோவியசு,பின்னாட்களில் [[அகஸ்ட்டஸ்]], உள்நாட்டுப் போர்களில் வென்று ஆட்சியமைத்தார். இவரது ஆட்சியில் [[உரோமைப் பேரரசு]] உருவாகத் தொடங்கியது.
 
ஆங்கில நாடக மேதை [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம் ஷேக்ஸ்பியரின்]] புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் (கிபி 1599) நாடகத்தின் கதாநாயகனாகவும், கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை உருவாக்கியவராகவும் சீசர் அறியப் பெறுகிறார். இவருடைய சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. சீசர் கிரேக்க வரலாற்றில் பெரும் வீரராகவும், போரின் பொழுது கருணை காட்டாதவராகவும், இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் அறியப் பெறுகிறார்.<ref>http://urssimbu.blogspot.com/2011/12/julius-caesar-great-roman-empire.html</ref>
வரிசை 55:
யூலியசு சீசர் சாதாரண குடும்பத்தில் ஔரெலியாவின் மகனாக கி.மு.100 வது ஆண்டில் பிறந்தார். சுபுரா என்ற ரோம நகரப்பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்தார். சீசரின் தந்தையை விட அவர் தாயின் கவனிப்பில் தான் வளர்ந்தார். சீசரின் கல்வி அவரின் ஏழாம் வயதில் இலத்தீன், கிரேக்க மொழிப் பாடங்களுடன் துவங்கியது. கிரேக்க, இலத்தீன் இலக்கணம், கணித இயல், எழுத்துத்திறன் முதலியவற்றை சீசரும், அவரின் தங்கைகளும் வீட்டிலேயே கற்று அறிந்தனர். பன்னிரண்டு வயதில் இலக்கியம், கவிதைகள் இவற்றையும் சீசர் கற்றிருப்பார். சீசரின் ஆசிரியர் பெயர் "மார்க்குஸ் அந்தோனியுஸ் க்னிஃபொ". அவர் எகிப்திய நாட்டிலுள்ள அலெக்சாந்திரியா நகரத்தில் கிரேக்கம், இலத்தீன் மொழிகளை நன்கு கற்றுணர்ந்தார்.
 
யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்துக் கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்ச்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் “Corona“''Corona Civica”Civica''” என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். கி. மு. 78 ஆம் ஆண்டில், சுல்லா உரோமை நகரில் காலமானார்.
உடனே சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.
 
சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார். கி. மு. 69ஆம் ஆண்டில் சீசரின் மனைவி கொர்னெலியா காலமானார். கி. மு. 67ஆம் ஆண்டில் சுல்லாவின் பேத்தி பொம்பெயாவை மணந்து கொண்டார். அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை (''Appian Way'') சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார். இந்தப்பணியில் அவர் கற்றது கல்லியா நாட்டில் வெற்றி அடையத் துணை செய்தது. உரோமப் பேரரசின் படைவலம் ஓங்க, ஆப்பியன் வழிப் பேருதவி செய்தது. ஆப்பியன் வழியும், மற்றும் உரோமையர் கட்டிய பாலங்களும், இன்றும் நிலைத்திருக்கின்றன.
 
ஏறக்குறைய அதே சமயத்தில், பொம்பெய் (''Pompeius Magnus'') என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியத்தரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.
 
=== கிளியோபட்ராவுடனான வாழ்க்கை ===
வரிசை 71:
== கவுல் போர் ==
 
கி. மு. 58-ல் ஐரோப்பிய கண்டங்களிருந்து பல்வேறு பழங்குடிகள் கவுல் நகரினை நோக்கி வந்தார்கள். கவுல் என்பது வடக்கு இத்தாலி, யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி மற்றும் தெற்கு பிரான்ஸ் ஆகிய மூன்று மாகாணங்கள் இணைந்த பகுதியாகும். பழங்குடியினரின் வருகையை அறிந்த சீசர், ரோமிற்கு இவர்களால் பிரட்சனை உண்டாகுமென எண்ணி அவர்கள் மீது போர் தொடுத்தார். அப்போரில் சீசருடைய இராணுவப் படை இருபதாயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் கடுமையாக நடைப்பெற்ற இந்தப் போரானது, மிகச் சவாலாக இருந்தது. இதில் இருபது இலட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து இலட்சம் பழங்குடியினர் விற்பனை செய்யப்பட்டனர். இப்போர் மூலம் சீசர் பெரும் மாவீரனாக உலகிற்கு அறிமுகமானார்.<ref name="tamilkathir.com">http://www.tamilkathir.com/news/11600/58//d,full_article.aspx</ref>
 
== கடற்கொள்ளையர்கள் ==
 
கி. மு. 75-ல் கிரேக்க நாட்டிற்கு கப்பல் வழியே பயணப்படும் பொழுது சீசர் மற்றும் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கடற்கொள்ளையர்களால் சிறை செய்யப்பெற்றனர். ஒவ்வொருவரையும் விடுவிக்க 20 தங்கக் காசுகள் விலையாகக் கேட்டனர். சீசர் அவர்களிடம் 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்தார்.<ref name="tamilkathir.com" /> ஜூலியஸ் சீசரை கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்க சீசரின் நண்பர்கள் பெரும்பணம் கொடுத்தாகவும் செய்தியுள்ளது. அதனால் கடற்கொள்ளையர்கள் பலரை சீசர் சிலுவையில் அறைந்து கொன்றார்.<ref>http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article834952.ece</ref>
 
== மரணம் ==
ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர்.<ref name="tamilkathir.com" />
கி. மு. 44 பங்குனி 15 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
வரிசை 85:
 
=== உடல்நலம் மற்றும் உடல் தோற்றம் ===
புளூடார்ச்சின் குறிப்புகளின்படி,<ref>Plutarch, ''Caesar'' 17, 45, 60; see also Suetonius, ''Julius'' 45.</ref> சீசருக்கு சிலநேரங்களில் [[கால்-கை வலிப்பு]] வந்துள்ளதாகத் தெரிகின்றது. தற்கால வரலாற்று அறிஞர்கள் இதுகுறித்து "மிகவும் பிளவுபட்டுள்ளனர்"; தவிரவும், சிலர் சீசருக்கு [[மலேரியா]] தாக்கியதாக நம்புகின்றனர்.<ref>Ronald T. Ridley, "The Dictator's Mistake: Caesar's Escape from Sulla," ''Historia'' 49 (2000), pp. 225–226, citing doubters of epilepsy: F. Kanngiesser, "Notes on the Pathology of the Julian Dynasty," ''Glasgow Medical Journal'' 77 (1912) 428–432; T. Cawthorne, "Julius Caesar and the Falling Sickness,” ''Proceedings of Royal Society of Medicine'' 51 (1957) 27–30, who prefers [[Ménière's disease]]; and O. Temkin, ''The Falling Sickness: A History of Epilepsy from the Greeks to the Beginnings of Modern Neurology'' (Baltimore 1971), p 162.</ref> பல தலைவலி சிறப்பு மருத்துவர்கள் கால்-கை வலிப்பிற்கு மாற்றாக மைக்ரேன் தலைவலி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.<ref>Seymour Diamond and Mary Franklin, ''Conquering Your Migraine: The Essential Guide to Understanding and Treating Migraines for all Sufferers and Their Families'', (New York: Fireside, 2001), 19.</ref> வேறு சிலர் இந்த கால்-கை வலிப்புக்கள் மூளையில் தீநுண்ம தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.<ref name="bruschi">{{cite journal
| last =Bruschi
| first =Fabrizio
வரிசை 110:
| accessdate =11 May 2013 }}</ref>
 
சீசருக்கு நான்கு முறை வலிப்பு ஏற்பட்டுள்ளதை ஆவணங்கள் உறுதி செய்கின்றன. தவிர, அவரது இளமையில் வலிப்புக்கள் வந்திருக்கலாம். சீசருக்கு ஏற்பட்ட வலிப்பு குறித்த முதல் குறிப்பை தன்வரலாற்றாளர் சுடோனியசு பதிவு செய்துள்ளார். இவர் சீசர் இறந்த பிறகு பிறந்தவராவார். வலிப்பு குறித்த பதிவுகளை எதிர்க்கும் மருத்துவ வரலாற்றாளர்கள் இத்தகைய வலிப்புகளுக்கு [[இரத்தச் சர்க்கரைக் குறைவு|இரத்தச் சர்க்கரைக் குறைவைக்]] காரணமாகக் கூறுகின்றனர்.<ref name="Hughes2004Caesar">{{Cite journal|author=Hughes J|title=Dictator Perpetuus: Julius Caesar—did he have seizures? If so, what was the etiology?|journal=Epilepsy Behav|volume=5|issue=5|pages=756–64|year=2004|pmid=15380131 |doi=10.1016/j.yebeh.2004.05.006|last2=Atanassova|first2=E|last3=Boev|first3=K}}</ref><ref name="Gomez1995">{{Cite journal|author=Gomez J, Kotler J, Long J|title=Was Julius Caesar's epilepsy due to a brain tumor?|journal=The Journal of the Florida Medical Association|volume=82|issue=3|pages=199–201|year=1995| pmid = 7738524}}</ref><ref name="epilepsiemuseumCaesar">{{cite web|url=http://www.epilepsiemuseum.de/alt/caesaren.html|title=Gaius Julius Caesar|accessdate=28 August 2008|author=H. Schneble|date=1 January 2003|publisher=German Epilepsy Museum}}</ref>
 
2003இல் மனநல மருத்துவர் ஆர்பர் எஃப். ஓடர் சீசரின் வலிப்பு நோய் காரணமாக ஏற்பட்ட மனநோயை "சீசர் காம்ப்ளெக்சு" என்று பெயரிட்டுள்ளார்; வலிப்புநோயால் தான் வருத்தமுறுவதை மற்றவர் அறியக்கூடாதென்பதற்காகவே தனது மெய்க்காப்பாளர்களை விலக்கிக் கொண்டதும் அதுவே சீசரது கொலைக்குக் காரணமானதும் இந்த மனநோயாலேயாகும்.<ref>{{Cite journal|last=Hodder|first=Harbour Fraser|date=September 2003|title=Epilepsy and Empire, Caveat Caesar|journal=Accredited Psychiatry & Medicine|publisher=Harvard University|location=Harvard, Boston|volume=106|issue=1|page=19|url=http://www.forensic-psych.com/articles/artHarvardMagCaesar.php}}</ref>
 
சேக்சுபிரியரின் நாடக வரியொன்றிலிருந்து சீசருக்கு ஒரு காது கேளாதிருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது: ''எனது வலதுகைப் பக்கம் வா, இந்தக் காது கேட்காது''.<ref>William Shakespeare, ''Julius Caesar'' I.ii.209.</ref> எந்த வரலாற்று நூலும் சீசருக்கு காதுக் குறை இருப்பதாக குறிப்பிடவில்லை.<ref>Plutarch, ''Alexander'' 42; Jeremy Paterson discussing Caesar's health in general in "Caesar the Man," ''A Companion to Julius Caesar'' (Wiley-Blackwell, 2009), p. 130 [http://books.google.com/books?id=gzOXLGbIIYwC&pg=PT150&dq=julius+caesar+deaf&hl=en&ei=zPtSTO-xFYaDngfwjbHvAg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCkQ6AEwAA#v=onepage&q=julius%20caesar%20deaf&f=false online.]</ref>
வரிசை 129:
 
=== மனைவிகள் ===
* முதல் திருமணம் கிமு 83ல் கார்னெலியாவுடன் நடைப்பெற்றது. கர்னெலியா பிரசவத்தின் பொழுது இறக்கும் (கிமு 68 அல்லது 69) வரை இந்த உறவு தொடர்ந்தது.
* இரண்டாவது திருமணம் கிமு 67ல் பொம்பெயாவுடன் நடந்தது. இந்த உறவு கிமு 61ல் விவாகரத்து பெறும் வரை தொடர்ந்தது.
* மூன்றாவது திருமணம் கிமு 59ல் ''Calpurnia Pisonisவுடன்Pisonis''வுடன் நடந்தது. இந்த உறவு சீசரின் மரணம் வரை தொடர்ந்தது.
 
=== குழந்தைகள் ===
வரிசை 161:
சீசரை மையமாக வைத்து எழுதப்பெற்ற நாடகங்கள்
 
* ஜூலியஸ் சீசர் - வில்லியம் ஷேக்ஸ்பியர்
* சீசர் அன்ட் கிளியோபட்ரா - பெர்னாட்சா
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூலியசு_சீசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது