"ஆன்டன் செக்கோவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== இளமைக்காலம் ==
[[படிமம்:Chekhov Birthhouse.jpg|left|200px|thumb|ரஷ்யாவில் டகன்ரோக் என்னும் இடத்தில், அன்டன் செக்கோவ் பிறந்த வீடு]]
அன்டன் செக்கோவ் 29, சனவரி 1860 இல், செயின்ட் அந்தோணி பெரிய (17 ஜனவரி பழைய பாணி) விருந்து நாள் அன்று தெற்கு ரஷ்யாவின் ஆழாவ் (''Azov'') கடல் துறைமுகமான டாகன்ராக்( (''Taganrog'') கில் பிறந்தார். இவருடன் சேர்த்து மொத்தம் ஆறு சகோதரர்கள். இவர் மூன்றாவது நபர் ஆவார். இவரது தந்தையின் பெயர் பவெல் எகொரோவிச் செக்கோவ் என்பதாகும். இவருடைய தந்தை ஒரு பண்ணையடிமையாவார். அவரது மனைவி, உக்ரேனிய நாட்டைச் சார்ந்தவர். அவரது வில்ஹோவட்கா கிராமமானது கொபிலியகி அருகேயுள்ள போல்டவா பகுதியில் உள்ள தற்போதைய உக்ரைன் நாட்டில் அமைந்துள்ளது. ஒரு மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் திருச்சபைப் பாடகர் குழுவின் இயக்குநராகவும், பக்தியுள்ள கட்டுப்பாடான கிறிஸ்துவராகவும் மற்றும் உடல் குறைபாடுடையவராகவும் காணப்பட்டார். பவெல் செக்கோவ், சில வரலாற்றாசிரியர்களால் தனது மகனின் பல ஓவியங்களில் காணப்படும் பாவனை மூலமாகப் பார்க்கப்பட்டார். செக்கோவின் தாயான, எவ்ஜெனிய மொரோசாவா சிறந்த கதைசொல்லி. அவர் தம்முடைய குழந்தைகளுக்கு, தாம் தம் துணி வியாபாரியான தந்தையுடன் ரஷ்யா முழுக்கப் பயணித்த பல்வேறு பயண அனுபவங்களைக் கதைகளாக எடுத்துக்கூறுவார்<ref>{{cite book | url=http://www.taganrogcity.com/chekhov_taganrog.html}}</ref>. <blockquote>"எங்கள் திறமைகள் எமது தந்தையிடமிருந்து பெற்றவையே" என்பதையும், "ஆனால் எமது ஆன்மாவோ எங்கள் தாயிடமிருந்து வந்தது" என்பதையும் செகோவ் என நினைவுகூர்வார். வாலிபனான செக்கோவ் அவரது சகோதரர் அலெக்சாண்டர் என்பவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் காட்டும் விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கண்டித்ததுடன் தனது தந்தை பவெல் கொடுங்கோன்மையையும் விமர்சித்தார். "எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அது ஓர் எதேச்சதிகாரப்போக்கு ஆகும். அஃதும் பொய்யும் என் அன்னையின் இளமையான வாழ்வைச் சீர்குலைத்தன. அவ்வெதேச்சதிகாரமும் பொய்மையும் என்னுடைய குழந்தை பருவத்தைப் பாழாக்கியதொடு பயத்தையும் தோற்றுவித்தது. அதைப் பற்றி இப்போது நினைத்தாலும் திகில் மற்றும் வெறுப்பை என்னால் உணர முடியும். ஒரு சமயம் என் தாயார் தயாரித்த சூப்பில் உப்பு அதிகமாகிட, எனது தந்தையார் திடீரென வெறிகொண்டு, அன்னையை, 'நீயொரு முட்டாள்' எனத் திட்டி வீசி எறிந்ததை மறக்கவியலாது.</blockquote>
 
== படிப்பு ==
1884 ஆம் ஆண்டில், செக்கோவ் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். இதனை அவர் தனது முதல் தொழிலாகக் கருதினார். ஆனாலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்ததனால், அவருக்கு அதிலிருந்து சிறிதளவு பணமே சம்பாதிக்க முடிந்தது.<ref>{{cite book |last1=Malcolm |first1=Janet |title=Reading Chekhov, a Critical Journey |location=London |publisher=Granta Publications |year=2004 |orig-year=2001 |isbn=978-1-86207-635-8 |oclc=224119811}}</ref>
 
1884 மற்றும் 1885 ஆம் ஆண்டுகளில், செக்கோவ் [[காசநோய்]] பாதிப்பிற்கு ஆட்பட்டார். 1886 இல் அதன் பாதிப்புகளால் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால், அவர் தனது குடும்பத்தாரோ அல்லது அவரது நண்பர்களிடமோ தனது காசநோயைப் பற்றிக் கூற மறுத்து விட்டார். வாராந்திர ப் பத்திரிகைகளுக்கு அவர் தொடர்ச்சியாக எழுதி, அதன் மூலமாகப் பணம் சம்பாதித்துக் குடும்பத்தைப் படிப்படியாக அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தினார்.
 
== திருப்புமுனை ==
1887 ஆம் ஆண்டில்,அதிக வேலைப் பளு மற்றும் மோசமான உடல்நிலையிலிருந்து விடுபட எண்ணி, செக்கோவ் உக்ரைனுக்குப் பயணப்பட்டார்.அப்போது அங்கிருந்த அழகான புல்வெளி அவரை வெகுவாக ஈர்த்தது. அவர் தாயகம் திரும்பியவுடன், "புல்வெளி" (''The Steppe'') என்னும் நீளமான சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கினார். இதனை அவர் "சிறிது முரணானதும், மிகவும் உண்மையானதும்" என்று குறிப்பிட்டார். இது இறுதியில் செவர்னி வெஸ்ட்னிக் (தி வடக்கு ஹெரால்ட்) இல் வெளியிடப்பட்டது. இது கதைமாந்தர்களின் சிந்தனைச் செயல்பாடுகளோடு கலந்த ஒரு கதையாகும். செக்கோவ் இக்கதையின் வாயிலாக, வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட ஓர் இளம் சிறுவனின் பார்வை வழியாகவும், அவரது தோழர்கள், ஒரு மதபோதகர் மற்றும் வணிகர் மூலமாகவும் ஓர் ஒற்றைக் குதிரை, இரு சக்கர வாகனப் பயணத்தைத் தூண்டுகிறார். மேலும், இது செக்காவின் ''கவித்துவமிக்க படைப்புகளின் அகராதி'' என்று பரவலாக அறியப்படுகிறது. இது அன்டன் செக்காவிற்குப் புகழையும், அவரது முதிர்ந்த கற்பனையின் தரத்தையும் மிக அதிகமாக வெளிப்படுத்தியது. தவிர, இதனை ஒரு இலக்கிய இதழில் வெளியிடப்படக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
 
1890 ஆம் ஆண்டில், செக்காவ் ஜப்பான் நாட்டின் வடக்கில் காணப்படும் ஷேகலின் (''Sakhalin'') தீவில், ரஷ்ய தூர கிழக்கு மற்றும் கத்தோர்கா அல்லது தண்டனைக்குரிய குடியிருப்புப் பகுதியில், தொடர்வண்டி, குதிரை பூட்டப்பட்ட வண்டி மற்றும் ஆற்றின் நீராவிப் படகு மூலம் கடினமான பயணம் மேற்கொண்டார். சுமார் மூன்று மாத காலம் அந்த இடத்தில் தங்கியிருந்து, அங்கு வசித்த ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காகக் குடியேறியவர்கள் ஆகியோரிடம் நேர்காணல் எடுத்தார். செக்காவினின் ஷெகாலினுக்கான அந்த இரண்டரை மாத பயணத்தின்போது அவர் எழுதிய கடிதங்கள் சிறந்த படைப்பாக நோக்கப்படுகின்றன. டோம்சுக் (Tomsk) என்னும் நகரைப்பற்றி அவர் தனது சகோதரிக்கு எழுதிய குறிப்புகள் தவறானவையாகக் கருதப்பட்டன. அந்த நகரத்து மாந்தர் அனைவருமே மந்தமானவர்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் டோம்சுக் மக்கள், அவர் கூறிய கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அவரைக் கேலி செய்வதுபோன்ற அவருடைய ஒரு சிலையை நிறுவினார்கள்.
 
== இறப்பு ==
 
1904 ஆம் ஆண்டு மே மாதத்தில் செக்கோவ் காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதுகுறித்து "அவரைப் பார்த்த அனைவரும் அவர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாகத் தமக்குள் நினைத்தனர். ஆனால் அவர் தனது முடிவை நெருங்க நெருங்க, அதனை உணர்ந்து கொள்ளாதவராகவே காணப்பட்டார்.". மிக்கேல் செக்கோவ் நினைவுகூர்ந்தார். இறுதியில், ஜூன் மாதம் மூன்றாம் நாள், அவர் பிளாக் வனிலுள்ள ஜேர்மனிய ஸ்பா நகரமான பேடன்வெலைருக்காக ஓல்காவுடன் சென்றார். அங்கிருந்து அவர் தனது சகோதரியான மாஷாவிற்கு வெளிப்படையாக, நகைச்சுவையாக எழுதிய கடிதங்களில் உணவு மற்றும் சமுதாயவெளி பற்றி விவரிக்கிறார். மேலும், அன்டன் செக்காவ் அவரது தாயாருக்கும் சகோதரிக்கும் தான் நலமாகி வருவதாகக் கூறி வந்தார். அவர் எழுதிய கடைசி கடிதத்தில், ஜேர்மானியப் பெண்கள் ஆடைகள் அணிந்திருக்கும் முறை பற்றி மனவேதனையடைந்தார்.
 
== படக் காட்சி அகம் ==
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2604999" இருந்து மீள்விக்கப்பட்டது