ஹரிவன்சராய் பச்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
[[படிமம்:Harivansh_Rai_Bachhan's_Letter.jpg|வலது|thumb|129x129px|ஹரிவன்சராய் பச்சன் ரமேஷ் சந்திரா ஜாவுக்கு எழுதிய கடிதம்]]
== வாழ்க்கை வரலாறு ==
பிரதாப் நாராயணன் மற்றும் சரஸ்வதி தேவி இணையாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரைச் செல்லமாக பச்சன், அதாவது குழந்தை, என்றே அழைத்து வந்தனர். [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] [[ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்|ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தில்]] (தற்கால [[உத்தரப் பிரதேசம்]], [[இந்தியா]]) [[பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்|பிரதாப்புகர் மாவட்டத்திலுள்ள]]. பாபுபட்டி என்ற சிற்றூரில் வாழ்ந்து வந்தனர். இவரது துவக்கக் கல்வி அண்மித்திருந்த நகராட்சி பள்ளியிலும் பின்னர் குடும்ப மரபுப்படி ''காயஸ்த பாடசாலை''யில் [[உருது]]ம் கற்றார். பின்னர் [[அலகாபாத் பல்கலைக்கழகம்|அலகாபாத் பல்கலைக்கழகத்திலும்]] [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்|பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும்]] சட்டம் பயின்றார். கல்லூரியின் படித்தபோது [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி]]யின் தலைமையில் இயங்கிய [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலை இயக்கத்தில்]] ஈர்க்கப்பட்டார். 1941 முதல் 1952 வரை அலகாபாத் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் ஆசிரியப் பணியாற்றி வந்தார். தொடர்ந்து [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்]] சென்று அங்குள்ள செயின்ட் காத்தரீன் கல்லூரியில் [[டபிள்யூ. பி. யீட்சு]] குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.<ref name=obituary /> அப்போதுதான் தனது கடைசி பெயரை பச்சன் என மாற்றிக் கொண்டார். வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்ற பச்சன் இந்தியா திரும்பி ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். ஆங்கிலத்தில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். சில காலம் அனைத்திந்திய வானொலியின் அலகாபாத் நிலையத்தில் சேவையாற்றியுள்ளார்.<ref name=obituary />
 
1926இல், தமது 19வது அகவையில் சியாமா என்பவரை திருமணம் புரிந்தார். ஆனால் பத்தாண்டுகளில் (1936) [[காச நோய்|காச நோயால்]] சியாமா மரணமடைந்தார். 1941இல் பச்சன் மீளவும் தேஜி பச்சனை மணமுடித்தார். இவர்கள் இருவருக்கும் [[அமிதாப் பச்சன்]], அஜிதாப் பச்சன் என இரு மகன்கள் பிறந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஹரிவன்சராய்_பச்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது