பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
வார்ப்புரு:மணிரத்தினத்தின் திரைப்படங்கள்
 
மன்ஹ்வா என்பது கொரிய மொழியில் வரைகதை மற்றும் கேலிச்சித்திரங்களை குறிக்கும் ஒரு பொதுவான பெயர் ஆகும். மற்ற நாடுகளில் இவ்வார்த்தை பெரும்பாலும் தென் கொரிய வரைகதைகளையே குறிப்பிட பயன்படுகிறது. வட கொரியாவில் வரைகதை துறை தற்போது தான் வளர்ந்து வருகிறது.
 
மன்ஹ்வாவின் வரலாறு:
மங்கா (manga), மன்ஹுவா (manhua), மன்ஹ்வா (manhwa) ஆகிய வார்த்தைகள் முறையே ஜப்பானிய, சீன, கொரிய மொழியில் வரைகதையினை குறிப்பிடுகின்றன. ஜப்பானிய மங்காவின் சர்வதேச வெற்றிக்குப் பின்னரே மன்ஹ்வா அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. மன்ஹ்வா உருவாக்கும் கலைஞர்கள் மன்ஹ்வாகா என்று அழைக்கப்படுகிறார்கள்.
 
கொரிய கலாச்சாரத்தை பற்றி மேற்கத்திய நாடுகள் அதிகம் அறிந்திருக்க படாததால் மன்ஹ்வா ஆங்கிலம் பேசும் மக்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது. ஆகவே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட மன்ஹ்வா அந்நாடுகளில் ஜப்பானிய மங்கா என்று விற்பனை செய்யப்பட்டது. மங்காவை பற்றி அறிந்த மக்களிடையே மன்ஹ்வாவும் வெற்றி பெற்றது.
ஆகவே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட மன்ஹ்வா அந்நாடுகளில் ஜப்பானிய மங்கா என்று விற்பனை செய்யப்பட்டது. மங்காவை பற்றி அறிந்த மக்களிடையே மன்ஹ்வாவும் வெற்றி பெற்றது.
 
இணையவழி வரைகதை:
இணையவழி மன்ஹ்வா வரைகதைகள் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தைப் பயன்படுத்தி இலவசமாக படிக்க முடியும் என்பதால் கொரிய மக்களிடையே இவ்வரைகதைகள் வரவேற்ப்பை பெற்றன. மேலும் இது மற்ற நாட்டு
மக்களிடமும் பிரபலமடைந்து வழக்கமான காகிதஅச்சு வரைகதைகளுக்கு மாற்றாக வெளிவர தொடங்கின.
 
அமெரிக்காவில் மன்ஹ்வா:
வரிசை 17:
 
கொரிய எழுத்துக்கள் பொதுவாக மேலிருந்து கீழ் மற்றும் இடமிருந்து வலம் இரு பாணியில் எழுதப்பட்டாலும், அமெரிக்க வாசகர்களுக்காக ஆங்கில புத்தகங்களைப் போல் மன்ஹ்வா இடமிருந்து வலம் பாணியிலே எழுதப்பட்டது.
 
மன்ஹ்வா வரைகதைகளின் தழுவல்கள்:
கொரிய வரைகதைகளை தழுவி அதிகமாக உயிரூட்டுதல் திரைப்படங்கள் வெளிவரவில்லை (1897ல் வந்த 'டூலி த லிட்டில் டைனேசர்' ஒரு வெற்றிப் படம் ஆகும்). உயிரூட்டுதல் அல்லாத நேரடி திரைப்படங்கள் சில மன்ஹ்வா வரைகதைகளை தழுவி எடுக்கப்பட்டு வெற்றிப்படங்கள் ஆயின. 2004ல் வந்த 'ஃபுல் ஹவுஸ்', 2006ல் வந்த 'ப்ரின்சஸ் ஹவர்ஸ்' ஆகியவை அந்த ஆண்டுகளின் சிறந்த திரைப்படங்களாக கருதப்படுகின்றன.
'ப்ரீஸ்ட்' என்ற மன்ஹ்வா வரைகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. பின்னர் 2011ம் ஆண்டு 'ப்ரீஸ்ட்' என்ற அதே தலைப்பில் அமெரிக்க திகில் படமாக எடுக்கப்பட்டது.
2013ல் வெளிவந்த 'சீக்ரட்லி, க்ரேட்லி' என்ற படம் அதிக வசூலைப் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது