ஆப்கானித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 92:
 
=== தாலிபான் ஆட்சி ===
தாலிபான் அரசியல்–மதம் சார்ந்த சக்தியை உருவாக்கியது. இது 1996 இல் காபூலைக் கைப்பற்றிக்கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தாலிபான் நாட்டின் 95%விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை '"வடக்கு முண்ணனி'" எனும் அமைப்பு, வடகிழக்கு மாகாணமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தாலிபான்கள், ஷரீஆ எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமுல்படுத்தினர். அவர்கள் பிற்காலத்தில் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தாலிபான்கள், '"அல்-காயிதா'" தீவிரவாதியான உசாமா பின் லாதினைப் பாதுகாத்தனர்.
 
தாலிபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது, தாலிபான் அதிகஅளவில் மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடைசெய்தது; பெண்கள் பாடசாலைக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ செல்வது தடைசெய்யப்பட்டது; இவற்றை எதி்ர்த்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுத்தவர்களின் கைகள் வெட்டி அகற்றப்பட்டன; இதைப்போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலிபான் ஆட்சியில் ஏற்பட்ட நல்லநிகழ்வு என்றால், அது 2001 ஆம் ஆண்டு அளவில் '"ஆப்கானின் அபின்'" எனும் போதைப் பொருள் தயாரிப்பு, முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதே ஆகும்.
 
=== 2001 அமெரிக்க நடவடிக்கை ===
வரிசை 176:
ஆப்கானியர் தமது மதம், நாடு, தம்முடைய பழைமை, தம் முன்னோர்கள், இவற்றிற்கு மேல் அவர்களது சுநத்திரம் போன்றவற்றில் பெருமை கொள்கின்றனர். இந்த நாட்டு மக்களின் தனிப்பட்ட நடத்தை காரணமாகவே வெளிநாட்டுச் சக்திகளால் அந்நாட்டைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை.
 
ஆப்கானித்தான் குழப்பமான வரலாற்றை உடைய ஒருநாடு. அதன் வரலாறு, தற்போது அங்குள்ள கலாச்சாரங்கள், அல்லது பல்வேறு வடிவிலுள்ள மொழிகள் மற்றும் நினைவுச் சின்னங்களில்தான் எஞ்சி உள்ளது. ஆனால், நாட்டின் பெருமளவிலான நினைவுச் சின்னங்கள் இங்கு நடந்த போர்களினால் அழிந்துபோயின; பாமியான் மாகாணத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற இரு புத்தர் சிலைகள் தாலிபான்களால் அழிக்கப்பட்டன. கந்தகார், ஹீரத், கஸ்னி போன்ற நகரங்களில் கலாச்சாரச் சுவடுகளைக் காணலாம். 'முகம்மது நபி' அவர்களால் அணியப்பட்ட மேலாடை ஒன்று, இன்றும் கந்தகார் நகரில் உள்ள "கால்கா ஷரிஃபா"வில் உள்ளதாக நம்பப்படுகின்றது. இதைவிட ஹரி ருட் பள்ளத்தாக்கில் உள்ள '"மின்னரட் ஒப் ஜாம்'" யுனெஸ்கோவினால், உலகின் முக்கிய கலாச்சார இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆப்கானியர், பெரும்பகுதியினர் குதிரை ஓட்டிகள்; இந்த நாட்டின் தேசிய விளையாட்டு புஸ்காசி, இது ஒரு வகையில் போலோ விளையாட்டை ஒத்ததாகும். ஆனால், பந்துக்குப் பதிலாக ஓர் இறந்த ஆட்டின் உடலை வைத்து விளையாடுவர்.
வரிசை 184:
[[தாரி மொழி|தாரி]] என்பது கிழக்கில் பேசப்படும் பாரசீக மொழியின் வித்தியாசமான ஒரு பேச்சு வழக்காகும்.
 
இன்றய ஆப்கானித்தான், அன்று "குராசான்" என்று அழைக்கப்பட்டது; அங்கு 10ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு வரை பல அறிஞர்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் மொழி, இயற்கை விஞ்ஞானம், மருத்துவம், சமயம், வானியல் போன்றவற்றில் தேர்ச்சி உடையவர்களாக இருந்துள்ளனர். உதாரணமாக "மெளலானா றூமி" என்பவரைக் கூறலாம். இவர் 13 ஆம் நூற்றாண்டில் பல்க் நகரில் பிறந்ததுடன் அங்கேயே கல்வி கற்றார்; பின்னர் இவர் "கோன்யா" (இன்றய துருக்கியில் உள்ள இடம்.) என்ற பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தார். சனாயி கஸ்வானி (12ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் கஸ்னி மாகாணம்), ஜாம்-ஏ-ஹீரத் (15ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் ''Jam-e-Herat'', மேற்கு ஆப்கானித்தான்), ''Nizām ud-Dīn Alī Sher Navā'ī'', நிசாம்-உத்-தீன் அலி சேர் நவாஇ என்பவர் (15ம் நூற்றாண்டு, ஹீரட் மாகாணம்). இவர்களில் பெரும்பாலானோர் பாரசீகர் ஆவர். (தாஜிக்) இனத்தைச் சேர்ந்தவர்கள்; இவ்வினத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நாட்டில் இரண்டாவது அதிகமான இனத்தவராக இருந்து வருகின்றனர். இவர்களை விட உசுதாத் பிதாப், கலிலுல்லா கலிலி, சூஃபி குலாம் நபி அஷ்காரி, ககார் ஆசே, பர்வீன் பசுவாக் போன்ற பாரசீக எழுத்தாளர்கள் (''Ustad Betab'', ''Khalilullah Khalili'', ''Sufi Ghulam Nabi Ashqari'', ''Qahar Asey, Parwin Pazwak'') ஈரான், ஆப்கானித்தான் ஆகிய இருநாடுகளிலும் ஓரளவு அறியப்பட்டவர்களாவர். 2003 இல் காலித் ஹுசைனி என்பவர் பதிப்பித்த புத்தகம் ஒன்று 1930 இல் இருந்து இன்றய தினம்வரையான, ஆப்கானித்தானில் நடந்த வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
 
கவிஞர்கள், எழுத்தாளர்களைவிடப் பல பாரசீக விஞ்ஞானிகளின் பூர்வீகம் பாரசீகமாக இருந்துள்ளது. இவர்களுள் குறிப்பிடத்தக்கவரான '"அவிசென்னா'" என மேலை நாடுகளில் அறியப்பட்ட அபு அலி ஹூசைன் இப்னு சினா பல்க் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இப்னு சினா, இஸ்பகானில் மருத்துவக் கல்லூரி அமைத்தவரும், இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தையரில் ஒருவருமானவர். தற்போது பிரபலமான ஆங்கிலப் புத்தகங்களான ''Noah Gordon'' இன் ''The Physician'' இல் கூட இவர் பற்றிய தகவல்களைக் காணலாம். இந்தப் புத்தகம் இப்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றும் முன்னர் அந்த நகரில் பல இசையறிஞர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாரம்பரிய இசையிலும், நவீன இசையிலும் தேர்ந்து விளங்கினர்.
வரிசை 205:
 
=== போக்குவரத்து ===
ஆப்கானின் வர்த்தக நோக்கிலான விமான சேவை நிறுவனமான 'அரியானா ஆப்கான் எயார் லைன்ஸ்' இப்போது லண்டன் ஹீத்ரோவ், பிராங்புர்ட், மட்ரிட், ரோம், துபாய் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களுக்குச் சேவைகளை வழங்குகின்றது. இது காபூல் மற்றும் ஹீரத் ஆகிய நகரங்களில் இருந்து நடைபெறுகின்றது. ஆப்கானித்தானில் டொயோட்டா, லேண்ட் ரோவர், பி. எம். டபிள்யு மற்றும் ஹயுண்டாய் போன்ற வாகனங்கள் பாவனைக்கு வரத் தொடங்கியுள்ளன. அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பாவி்த்த வாகனங்கள் பெருமளவில் இறக்குமதி செய்து பயன்படுத்தப்படுகின்றன. ஆப்கானித்தான் தற்கால நவீன தொழில் நுட்ப வசதிகளை அனுபவிக்காவிட்டாலும் அந்த இலக்கு நோக்கி விரைவாகப் பயனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
== கல்வி ==
ஆப்கானித்தானின் 7000 பாடசாலைகளில் 30% விழுக்காடு பாடசாலைகள், இரண்டு பதின்ம ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தத்தினால் சேதமடைந்தனவாக 2003 காலப்பகுதியில் அறியப்பட்டுள்ளது. இவற்றில் அரைவாசிப் பாடசாலைகளே சுத்தமான குடிநீர் வசதி பெற்றுள்ளன. தாலிபான் காலத்தில் பெண்கள் பாடசாலைக்கு வராமல் தடுக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
 
ஆப்கானியச் சிறுவரைச் சுற்றியுள்ள யுத்தம், வறுமை போன்றவற்றின் மத்தியிலும், அவர்கள் அதில் இருந்து விரைவாக மீண்டு ஆர்வமுடன் கல்வி கற்பதாக '"சேவ் த சில்ரன் நிதியம்'" எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
மார்ச் 2003 இல் ஆரம்பித்த பாடசாலைத் தவணையில் சுமார் நான்கு மில்லியன் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலைகளில் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது ஆப்கானித்தான் வரலாற்றில் மிக அதிகமான தொகையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது