விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
நேரடித் தேர்தலில் எப்போதும் பாதிக்கப்படுபவை சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் குழுக்கள். கூட்டணிகளால் சிறிய கட்சிகளின் உண்மையான பலம் புலப்படுவதில்லை. அவை தனித்துப் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைப் பெற முடிந்தாலும், அது வெற்றிக் கோட்டை அடைவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. மூன்றாவது அணியினர் வாக்குகளைப் பிரிக்கும் வில்லன்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். அனைத்து வாக்காளர்களின் விருப்பங்களும் நியாயமான விகிதத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதுதான் விபி முறையின் ஆதார நோக்கமாக இருந்தபோதும், பல நாடுகளில் பலவிதமான முறைகள் பயன்பாட்டில் உள்ளன. மிகுதியும் பின்பற்றப்படுவது "பட்டியல் வாக்கு முறை<nowiki>''</nowiki>. இதில் தொகுதிகள் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் 3 முதல் 10 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு கட்சியும் தொகுதியில் உள்ள மொத்த இடங்களுக்குப் போட்டியிடலாம். 5 இடங்கள் உள்ள தொகுதிக்கு 5 வேட்பாளர்களை ஒரு பட்டியலின் கீழ் அவை களத்தில் இறக்கலாம். சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடலாம். வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கல்ல பட்டியலுக்கே வாக்களிப்பார்கள். எடுத்துக்காட்டாக, 5 இடங்கள் உள்ள தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் பதிவாகின்றன எனலாம். அப்போது ஓர் இடத்தைப் பெறுவதற்கு 1,00,000/5 = 20,000 வாக்குகள் தேவை. இது தொடக்க நிலை மதிப்பு எனப்படுகிறது. முதல் சுற்றில் பெறுகிற ஒவ்வொரு 20,000 வாக்குகளுக்கும் 1 இடம் கிடைக்கும். கீழே உள்ள அட்டவணையில் கண்டபடி, 38,000 வாக்குகளைக் கட்சி - 1 பெறுவதாகக் கொண்டால், முதல் சுற்றில் அது 1 இடத்தைப் பெறும். கட்சி - 1 பெற்ற வாக்குகளில் 20,000ஐக் குறைத்தால், கிடைக்கும் எஞ்சிய 18,000 வாக்குகள் இரண்டாம் சுற்றுப் பரிசீலனைக்கு வரும். கட்சி - 2, 17,000 வாக்குகள் பெறுகிறது. அது தொடக்கநிலை மதிப்பைக் காட்டிலும் குறைவானதால், அது பெற்ற வாக்குகள் அனைத்தும் இரண்டாம் சுற்றுப் பரிசீலனைக்கு வரும். கட்சி - 3 முதல் சுற்றில் 1 இடத்தைப் பெறும். இப்போது இரண்டாம் சுற்றில், அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி - 1இன் இரண்டாம் வேட்பாளரும், கட்சி - 2இன் முதல் வேட்பாளரும், பட்டியல் - 4இன் சுயேச்சை வேட்பாளரும் தேர்வு பெறுவர். இந்த முறையில் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் இடங்களுக்கும் உள்ள இடைவெளி குறைவு என்பதை அட்டவணையில் காணலாம்
அட்டவணை- '''பட்டியல் வாக்கு முறைஅட்டவணை:'''
 
பதிவான வாக்குகள்:1,00,000, இடங்கள்:5,   தொடக்க நிலை மதிப்பு: 1,00,000/5 = 20,000
 
தொடக்க நிலை மதிப்பு: 1,00,000/5 = 20,000
{| class="wikitable"
|பட்டியல் எண்