"ஐயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

461 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Remove d inappropriate content
சி (2409:4072:90F:E60C:0:0:199E:A8ADஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(Remove d inappropriate content)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:Ayyanar idols near Gobichettipalayam.jpg|thumb|right|300px|ஐயனார்]]
'''ஐயனார்''' அல்லது '''அய்யனார்''' ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு [[தமிழர்]] இடையே இருந்து வருகிறது. குறிப்பாக [[மதுரை]]யிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் [[சிறுதெய்வகுலதெய்வ வழிபாடு]] என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
 
ஐயனார் வழிபாடு பிராமணிய [[இந்து சமயம்|இந்து சமய]] வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.
 
[[சிவன்|சிவனுக்கும்]] மோகினி உருவத்தில் இருந்த [[விஷ்ணு]]வுக்கும் பிறந்தவர் ஐயனார்.{{cn}}
[[File:கீழ்ப்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வர அய்யனார் கோயில்.jpg|thumb|கீழ்ப்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வர அய்யனார் கோயில்]]
 
==தோற்றம்==
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் [[பிட்சாடனர்]] உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2607603" இருந்து மீள்விக்கப்பட்டது