"புவியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக [[வானியல்]], [[அண்டவியல்]] ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை [[கோளியல்]] (''planetology'') எனப்படும்.
 
கணம்== புவியியலின் வரலாறு ==
 
மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த [[அனக்சிமாண்டர்]] (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் [[நிலநேர்க்கோடு|நிலநேர்க்கோட்டை]] அளப்பதற்குக் கிரேக்கர்கள் பயன்படுத்திய, எளிமையான ஆனால் செயற்றிறன் கொண்ட கருவியைக் கண்டுபிடித்தவரும், [[கிரகணம்|கிரகணங்களை]] எதிர்வு கூறுவதற்கான வழிமுறையை வகுத்தவரும் இவரே என்று கருதப்படுகிறது. புவியியலுக்கான அடிப்படைகளைப் பல பண்டைக்காலப் பண்பாடுகளில் காண முடியும். பண்டைய, இடைக்கால, தற்காலத் தொடக்கம் ஆகிய காலப்பகுதிகளுக்குரிய சீனப் பண்பாட்டில் இதற்கான சான்றுகள் உள்ளன.
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2608758" இருந்து மீள்விக்கப்பட்டது