கடற்கீரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 27:
 
கடல் கீரி கடற்கரையோர சூழ்நிலைகளில் வாழ்கிறது. அங்கிருந்து கடல் தளத்திற்கு இரை தேட செல்கிறது. இது பெரும்பாலும் கடலில் காணப்படும் முதுகெலும்பிலிகளை உண்கிறது. அவை கடல் முள்ளெலிகள், பல்வேறு மெல்லுடலிகள் மற்றும் கிரஸ்டசீன்கள், மற்றும் சில மீன் இனங்கள் ஆகும். இவற்றின் உணவு தேடும் மற்றும் உண்ணும் பழக்கவழக்கங்கள் பல்வேறு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. ஒன்று, இரையின் ஓட்டை உடைக்க இது கற்களைப் பயன்படுத்துகிறது. இவ்வாறு செய்யும் சில பாலூட்டி இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பெரும்பாலான வாழ்விடத்தில் இது ஒரு மைய உயிரினமாகச் செயல்படுகிறது. இது அவ்விடங்களில் வாழவில்லை எனில் கடல் முள்ளெலிகள் எண்ணிக்கையில் அதிகமாகி கெல்ப் காடு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதன் உணவானது மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் கடல் உயிரினங்களாக உள்ளது. இதனால் இவற்றிற்கும் மீன்பிடிப்பவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
 
கடல் கீரிகளின் எண்ணிக்கை ஒரு காலத்தில் 150,000–300,000 வரை இருந்ததாக கணக்கிடப்பட்டது. ஆனால் இவற்றின் ரோமத்திற்காக 1741 முதல் 1911 வரை ஏராளமாக வேட்டையாடப்பட்டன. இதனால் உலகளவில் இவற்றின் எண்ணிக்கை 1,000–2,000 வரை என்றானது.<ref>{{cite report |title=The sea otter (Enhydra lutris): behavior, ecology, and natural history |last1=Riedman |first1=M.L. |last2=Estes |first2=James A. |authorlink2=James A. Estes |journal=U.S. Fish and Wildlife Service Biological Report |year=1990 |pages=126 |location=Washington, D.C. |url=http://www.fort.usgs.gov/Products/Publications/pub_abstract.asp?PubID=2183 |accessdate=27 September 2010 }}</ref> இவற்றின் வேட்டைக்கு எதிரான சர்வதேசத் தடை, பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் மறு அறிமுக திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக இவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. தற்போது இந்த இனம் இதன் முந்தைய அளவில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் பரவி உள்ளது. அலேடியன் தீவு மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் இவற்றின் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது. எனினும் பரவலான இடங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு வெற்றியாக கருதப்படுகிறது. இக்காரணங்களால் கடல் கீரி இன்னும் அருகி வரும் இனமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
[[படிமம்:Sea-otter-morro-bay_on-back.jpg|thumb|கடல் கீரி, மோர்ரோ விரிகுடா, கலிபோர்னியா]]
"https://ta.wikipedia.org/wiki/கடற்கீரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது