ஆசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
'''ஆசியா''' ({{audio|Ta-ஆசியா.ogg|ஒலிப்பு}}) ({{IPAc-en|ˈ|eɪ|ʒ|ə|audio=En-us-Asia.ogg}} or {{IPAc-en|ˈ|eɪ|ʃ|ə}}) உலகின் மிகப்பெரியதும், அதிக [[மக்கள்தொகை]] கொண்டதுமான ஒரு [[கண்டம்]]. பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, [[யுரேசியா]] நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 [[பில்லியன்]] மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.<ref>{{cite journal | url=http://www.economist.com/diversions/millennium/displayStory.cfm?Story_ID=346605 | title=Like herrings in a barrel | journal=The Economist | date=23 December 1999 | issue=Millennium issue: Population | publisher=The ''Economist'' online, The Economist Group}}.</ref>
 
பொதுவாக ஆசியா, யுரேசியாவின் கிழக்குகிழக்கில் ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது [[சூயெசுக் கால்வாய்]]க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; [[காக்கேசிய மலைகள்]], [[கசுப்பியன் கடல்]], [[கருங்கடல்]] என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.<ref name=Britannica>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=eb.com, [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc.}}</ref><ref>{{cite book|title=National Geographic Atlas of the World|edition=7th|year=1999|location=Washington, DC|publisher=[[தேசிய புவியியல் கழகம்|National Geographic]]|isbn=978-0-7922-7528-2}} "Europe" (pp. 68–9); "Asia" (pp. 90–1): "A commonly accepted division between Asia and Europe is formed by the Ural Mountains, Ural River, Caspian Sea, Caucasus Mountains, and the Black Sea with its outlets, the Bosporus and Dardanelles."</ref> கிழக்கில் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]], தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]], வடக்கில் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலும்]] ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.
 
''ஆசியா'' என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துவேயன்றிகருத்துருவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல.<ref name=McG-H>{{cite web | title=Asia | url=http://accessscience.com/abstract.aspx?id=054800&referURL=http%3a%2f%2faccessscience.com%2fcontent.aspx%3fid%3d054800 | work=AccessScience | publisher=McGraw-Hill | accessdate=26 July 2011}}</ref> ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், [[இனக்குழு]]க்கள், [[பண்பாடு]], [[சூழல்]], [[பொருளாதாரம்]], வரலாற்றுப் பிணைப்பு, [[அரசியல் முறைமை]] போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றனகாணப்படுகின்றனர்.
 
== வரைவிலக்கணமும் எல்லைகளும் ==
[[படிமம்:two-point-equidistant-asia.jpg|thumb|right|300px|ஆசியாவினதும் சூழவுள்ள நிலப் பகுதிகளினதும் [[இருபுள்ளித் தொலைவொத்த வீழ்ப்பு]] நிலப்படம்.]]
=== கிரேக்கரின் மூன்று கண்ட முறை ===
ஆசியாவையும், ஐரோப்பாவையும் முதலில் வேறுபடுத்தி அறிந்தவர்கள் பண்டைக் கிரேக்கர்கள் ஆவர். அவர்கள், [[ஏஜியக் கடல்]], [[டார்டனெல்சு]], [[மர்மாராக் கடல்]], [[பொசுப்போரசு]], [[கருங்கடல்]], [[கெர்ச் நீரிணை]], [[அசாவ் கடல்]] ஆகியவற்றை ஆசியாவுக்கும் [[ஐரோப்பா]]வுக்கும் இடையிலான எல்லையாகக் கொண்டனர். [[நைல் ஆறு]] ஆசியாவுக்கும் [[ஆப்பிரிக்கா]]வுக்கும் இடையிலான எல்லையாகக் கொள்ளப்பட்டது. எனினும், சில கிரேக்கப் புவியியலாளர்புவியியலாளர்கள், [[செங்கடல்]] பொருத்தமான எல்லையாக இருக்கும் எனக் கருதினர்.<ref name="Myth">{{harvnb | Lewis | Wigen | 1997 | pp=170–173}}</ref> நைல் ஆற்றுக்கும், செங்கடலுக்கும் இடையில் இருந்த டேரியசுக் கால்வாய், பெரும்பாலான கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகியது. கருங்கடலுட் கலக்கும் [[டொன் ஆறு (உருசியா)|டொன் ஆறு]] ஆசியாவின் மேற்கு எல்லையாக அமைந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நைல் ஆற்றுக்குப் பதிலாகச் செங்கடலே ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக நிலைபெற்றது. தொடக்கத்தில் ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லை ஆர்க்டிக் பெருங்கடல் வரை எட்டவில்லை.<ref name="Myth" /> ஆனால், நாடுகாண் பயணங்கள் வளர்ச்சியடைந்த பின்னர் இவ்வெல்லையை மீள்வரையறை செய்யவேண்டிசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
 
=== ஆசியா-ஐரோப்பா எல்லை ===
சாரக உருசியாவின் மன்னனான [[பேரரசர் பீட்டர்]], [[சுவீடன்|சுவீடனும்]] [[ஓட்டோமான் பேரரசு]]ம் கிழக்குப் பகுதி நிலங்களுக்கு உரிமை கொண்டாடியதை முறியடித்ததுடன், சைபீரியப் [[பழங்குடி]]யினரின் ஆயுத எதிர்ப்புக்களையும் முறியடித்து 1721ல் உருசியப் பேரரசை உருவாக்கினான். இப் பேரரசு [[ஊரல் மலை]]களை எட்டி அதற்கு அப்பாலும் பரந்திருந்தது. இதனால், டான் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக இருந்தது வட ஐரோப்பியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அக்காலத்தில் உருசியப் பேரரசின் முக்கியமான புவியியல் கோட்பாட்டாளராக இருந்தவர் [[வொன் இசுட்ராலென்பேர்க்]]. [[போல்ட்டாவா சண்டை]]யில் பிடிபட்ட ஒரு சுவீடியப் [[போர்க்கைதி]]. இவருக்குப் பீட்டரின் சைபீரிய அலுவலரான [[வசிலி டாட்டிசுச்சேவ்]] என்பவரின் தொடர்பு கிடைத்தது. அவர்மூலம் எதிர்கால நூல் ஒன்றுக்காகப் புவியியல், மானிடவியல் ஆகியவை தொடர்பிலான ஆய்வுகளைச் செய்வதற்குச் சுதந்திரம் கிடைத்தது.
 
1730ல், பீட்டர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சுவீடனுக்குத் திரும்பிய வொன் இசுட்ராலென்பேர்க் ஆசியாவில்ஆசியாவின் எல்லையாக ஊரல் மலைகளைக் குறித்துப் புதிய நிலப்படத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். புவியியல் அடிப்படையிலும், பிற பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையிலும் தமது ஐரோப்பிய அடையாளத்தை வைத்திருப்பதனால், இக்கருத்துரு குறித்து உருசியர்கள் அதிக உற்சாகம் காட்டினர். இந்தக் கருத்தைத் தானே வொன் இசுட்ராலென்பேர்க்குக் கூறியதாக டாட்டிசுச்சேவ் அறிவித்தார். [[எம்பா ஆறு|எம்பா ஆறே]] கீழ் எல்லையாக இருக்க வேண்டும் என வொன் இசுட்ராலென்பேர்க் ஆலோசனை கூறினார். அடுத்த நூற்றாண்டு முழுவதும் பல்வேறு முன்மொழிவுகள் வெளியாயின. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஊரல் ஆறே எல்லை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எல்லை கருங்கடலிலிருந்து, கசுப்பியன் கடலுக்கு நகர்த்தப்பட்டது.<ref>{{harvnb|Lewis|Wigen|1997|pp=27–28}}</ref> அக்காலத்து நிலப்படங்களில் டிரான்சுகாக்கேசியா ஆசியாக் கண்டத்துள் இருந்தது. அப்பகுதியின் பெரும்பகுதி பின்னர் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தினுள்]] சேர்த்துக்கொள்ளப்பட்டதால், எல்லையைஎல்லையைத் தெற்கே நகர்த்த வேண்டும் என்னும் கருத்து எழுந்தது.
 
=== ஆசியா-ஓசானியா எல்லை ===
"https://ta.wikipedia.org/wiki/ஆசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது