"எறும்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
}}
'''எறும்பு,''' குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு [[பூச்சி|பூச்சியினமாகும்]]. இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் ([[சமூகம்|சமூக]] ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது.
 
உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன. பல்வேறுபட்ட தரவுகளின்படி, இத்தரவுகள் தங்களுக்குள் சிறிதளவு மாறுபடினும், எறும்பிலுள்ள இனங்களின் (species) எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது<ref>{{cite news
|publisher = Instituto Humboldt, Bogotá
|year = 2003
|url= http://antbase.org/ants/publications/20973/20973.pdf}}</ref>. இவ்வாறு மிகக்கூடிய எண்ணிக்கையில் இனங்களை உள்ளடக்கி இருப்பதனால், எறும்புகள் உலகின் விரிவாக உயிர்வாழ்வதில் வெற்றி நாட்டிய உயிரினமாகவும் கருதப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காகஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தைவாழ்விடத்தைத் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாககாரணங்களாகக் கருதப்படுகின்றன. பொதுவாக எறும்புகளைக் காண முடியாத இடம் தென் பனிமுனைப் பகுதியாகும். எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள். நிலவுலகில் பூக்கும் [[நிலைத்திணை]](தாவரம்) தோன்றிப் பரவிய பின்னரே (100-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு உள்ளினங்களாக வளர்ச்சி பெற்றன.
 
== உயிரியல் வகைப்பாடு ==
எறும்புகள், [[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டில்]] [[குளவி]], (wasps), [[தேனீ]] (bees) போன்ற பூச்சிகளையும் உள்ளடக்கிய ''உறையுடைய இறகிகள்'' (Hymenoptera) என்ற [[வரிசை (உயிரியல்)|உயிரினவரிசையில்]] தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில் இருக்கும் ஏனைய உயிரினங்களிலிருந்து எறும்புகள் தமது தனித்தன்மையான உருவவியல் அமைப்புக்களாகஅமைப்புகளாக வளைந்த உணர்விழை அல்லது உணர்உறுப்பு/உணர்கொம்பு, மற்றும் கணுப் போன்ற மிக ஒடுங்கிய இடுப்பு (node-like slender waist) என்பவற்றைக் கொண்டிருப்பதால் வேறுபட்டு, ''ஃவோர்மிசிடீ'' (Formicidae) என்னும் குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
ஒர் எறும்புக் [[குமுகம்|குமுகத்தில்]] அல்லது சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. சில குழுக்கள், மிகக் குறைவான எண்ணிக்கையில் தனியன்களைதனியன்களைக் கொண்டிருக்கும். அதேவேளை, சில குழுக்கள் பல [[மில்லியன்]] எண்ணிக்கையிலான தனியன்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனம்பெருக்கும்இனப்பெருக்கத் திறன் கொண்ட அரசி (queen) என அழைக்கப்படும் பெண் தனியன்களும், இனம்பெருக்கும் திறன் கொண்ட சில ‘சோம்பேறிகள்' (drones) என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனம்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' (workers), ‘போராளிகள்' (soldiers) ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இவற்றில் வேலையாட்களும், போராளிகளுமான இனம்பெருக்கும் திறனற்ற பெண் எறும்புகளே எந்நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பனவாகும். அரசியும், சோம்பேறிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுஈடுபட்டுச் சந்ததியைப் பெருக்குவதில் மட்டும் பங்கெடுக்கும்பங்கெடுக்கின்றன.
 
== உருவவியல் ==
[[படிமம்:Scheme ant worker anatomy-en.svg|thumb|left|வேலைக்கார எறும்பு (''Pachycondyla verenae'')|190px]]
[[படிமம்:Lasius niger casent0005404 head 1.jpg|thumb|150px|<small>சிவப்பெறும்பின் தலை</small>]]
ஏனைய பூச்சிகளைப் போலவே எறும்புகளும், உடலுக்கு வெளியான எலும்புக்கூட்டையும் (external skeleton), மூன்று சோடிசோடிக் கால்களையும், துண்டங்களாலான உடலையும் (segmented body), தலைப் பகுதியில் எண்ணற்ற நுண்ணிய வில்லைகளால் ஆக்கப்பட்ட இரு கூட்டுக் கண்களையும் (compound eyes), தலையின் முன்பகுதியில் இரு உணர்விழை அல்லது உணருறுப்பு / உணர்கொம்புகளையும் (antennae) கொண்டிருக்கும்கொண்டிருக்கின்றன. வளைந்த உணர்கொம்பைக் கொண்டிருப்பதாலும், இவற்றின் இரண்டாவது வயிற்றுத் துண்டமானது மிகவும் ஒடுங்கி, கணுப் போன்ற இடுப்புப் பகுதியைக் கொண்டிருப்பதாலும் இவை ஏனைய பூச்சிகளிலிருந்து தனித்துதனித்துப் பிரித்தறியக் கூடியவாககூடியனவாக உள்ளன. சில எறும்பினங்களில் இரண்டாவது, மூன்றாவது வயிற்றுத் துண்டங்கள் இணைந்தே இந்த இடுப்புப் பகுதியை உருவாக்கும்<ref name="Borror, Triplehorn 1989 p. 737">Borror, Triplehorn & Delong (1989), p. 737</ref>.
 
கூட்டுக்கண்கள் விரைவான அசைவுகளை இலகுவாக இனம்காண உதவினாலும், பார்வையின் நுணுக்கம் குறைவாகவே இருக்கும். அத்துடன் இவை ஒளியின் அடர்த்தியையும், ஒளியலைகளின் [[முனைவாக்கம்|முனைவாக்கத்தையும்]] (polarization) அறியவல்ல, மூன்று தனிக் கண்களையும் தலையின் முன்புறத்தில் கொண்டிருக்கும்<ref>{{cite journal
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2613605" இருந்து மீள்விக்கப்பட்டது