பேரரசரின் புதிய ஆடைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Constantin_Hansen_1836_-_HC_Andersen.jpg with File:C.A._Jensen_1836_-_HC_Andersen.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error) · wrong artist).
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
}}
 
'''பேரரசரின் புதிய ஆடைகள்''' (''The Emperor's New Clothes'', [[டேனிய மொழி]]: ''Kejserens nye Klæder'') [[ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்]] எழுதிய ஒரு குட்டிக் கதை ஆகும். இரு நெசவாளர்கள் பேரரசர் ஒருவருக்குஒருவருக்குப் புதிய ஆடைகள் செய்து தருவதாக வாக்களிக்கின்றனர். அவ்வாடைகளை முட்டாள்களாலும் தகுதியற்றவர்களாலும் காண முடியாது என்று கூறுகின்றனர். புதிய ஆடைகள் தயாரானதாகப் பாசாங்கு செய்கின்றனர். பேரரசர் உட்பட அனைவரும் தங்கள் கண்களுக்கு ஆடைகள் புலனாகவில்லை என்பதை ஒப்புக்கொள்ளக் கூசி ஆடைகள் இருப்பது போல நடிக்கின்றனர். ”புதிய ஆடைகளை” அணிந்த பேரரசர் தனது குடிமக்கள் முன் ஊர்வலமாகச் செல்கிறார். அப்போது மக்களும் அவர் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதைஇருப்பதைச் சுட்டிக்காட்டாது விடுகின்றனர். ஆனால் ஒரு குழந்தை மட்டும் பெரியவர்களைப் போன்று பாசாங்கு செய்யாமல் ”பேரரசர் அம்மணமாகப் போகிறார்” என்று கத்திவிடுகிறது. [[டேனிய மொழி]]யில் எழுதப்பட்ட இக்கதை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref name="AndP4">Andersen 2005a 4</ref>
 
இது முதன்முதலில் 1837 ஆம் ஆண்டு சி. ஏ. ரெய்ட்சல் என்பவரால் [[கோபனாவன்|கோபனாவனில்]] வெளியிடப்பட்டது. இத்துடன் சிறிய மச்சக்கன்னி (''The little mermaid'') சிறுகதையும் வெளியானது. ஆன்டர்சனின் குழந்தைகளுக்கான விசித்திரச் சிறுகதைத் தொகுப்பின் மூன்றாவதும் இறுதியானதுமான தொகுதியில் இக்கதைகள் இடம்பெற்றிருந்தன. இது பலமுறை பாட்டு நாடகமாகவும், மேடை நாடகமாகவும், [[இயங்குபடம்|இயங்குபடமாகவும்]] தயாரிக்கப்பட்டுள்ளது.
வரிசை 25:
சுயமோகம் மிக்க பேரரசர் ஒருவர் புது விதமான ஆடைகளை அணிவதிலும் அவற்றைப் பிறருக்குக் காட்டி மகிழ்வதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். அவரை ஏமாற்ற நினைத்த இரு பித்தலாட்டக்காரர்கள் அவருக்குப் புது வித ஆடை ஒன்றைத் தைத்துத் தருவதாகக் கூறினார்கள். அந்த ஆடையைப் புதிய வகைத் துணி ஒன்றினால் செய்யப் போவதாகக் கூறினார்கள். அந்தத் துணி தகுதியற்றவர்கள் மற்றும் முட்டாள்களின் கண்களுக்குத் தெரியாது என்று பேரரசரிடம் சொன்னார்கள்.
 
அதனை நம்பிய பேரரசருக்குப் புதிய “ஆடைகளை” அணிவிப்பது போலப் பாசாங்கு செய்தார்கள். பேரரசருக்கும் அவரது அவையோருக்கும் ஆடைகள் புலனாகவில்லை. ஆனால் அதனை ஒத்துக்கொண்டால் தம்மைத் தாமே முட்டாள்களென ஒத்துக் கொள்வது போலபோலாகும் என்று அஞ்சிய அவர்கள் ஆடைகள் தங்கள் கண்களுக்குத் தெரிவது போல நடித்தனர்.
 
அந்த ”ஆடைகளை” அணிந்து கொண்டு பேரரசர் தனது குடிமக்கள் முன் ஊர்வலமாகச் சென்றார். அவரது குடிமக்களும் அவர் நிர்வாணமாகச் செல்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டவில்லை; புதிய ஆடைகள் தங்கள் கண்களுக்குத் தெரிவது போல நடித்தனர். அவற்றை வெகுவாகப் புகழ்ந்தனர். ஆனால் கூட்டத்திலிருந்த அறியாச் சிறு குழந்தை ஒன்று மட்டும் “ஐயையோ, அரசர் அம்மணமாகப் போகிறார்” என்று கத்திவிட்டது. வேறு சிலரும் அப்படிஅப்படிக் கத்தத் தொடங்கினர். அதைக் கேட்ட அரசர் தான் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார். ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் ஊர்வலத்தைத் தொடர்ந்தார்.
 
==மூலம்==
டான் யுவான் மனுவேல் என்ற [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்கால]] [[எசுப்பானியம்|எசுப்பானிய]] எழுத்தாளர் கி.பி. 1335 ஆம் ஆண்டு எழுதிய ”லூக்கனார் பிரபுவின் கதைகள்” (''Tales of Count Lucanor'', எசுப்பானியம்: ''El Conde Lucanor'') என்ற நூலில் இடம் பெற்றிருந்த ஒரு அறிவுரைக் கதையே ஆன்டர்சனின் பேரரசரின் புதிய ஆடைகள் கதையின் மூலமாகும்.<ref>In Spanish:''[[wikisource:es:Conde Lucanor:Ejemplo 32|Exemplo XXXIIº]]&nbsp;– De lo que contesció a un rey con los burladores que fizieron el paño''. In English: [http://www.elfinspell.com/CountLucanor3.html#ch7 Of that which happened to a King and three Impostors] from ''Count Lucanor; of the Fifty Pleasant Stories of Patronio'', written by the Prince Don Juan Manuel and first translated into English by James York, M. D., 1868, Gibbings & Company, Limited; London; 1899; pp. xiii–xvi. Accessed 2010-03-06. This version of the tale is one of those collected by [[Idries Shah]] in ''[[World Tales]]''.</ref> ஆன்டர்சர்னுக்கு எசுப்பானியம் தெரியாது. ஆனால் அவர் அக்கதையின் [[இடாய்ச்சு]] மொழிபெயர்ப்பைப் படித்திருந்தார்.<ref>Bredsdorff 312–3</ref> இம்மூலக்கதையில் இரு நெசவாளர்கள் ஒரு அரசருக்குச் சிறப்பு ஆடைகள் தைத்துத் தருவதாக ஏமாற்றுகின்றனர். அவ்வாடைகள் தனது மனைவியின் மகனுக்கு உண்மையில் தகப்பனாக இருப்பவருக்கு மட்டுமே தென்படும் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஆன்டர்சன், தன் கதையில் இதனை அறிவாளிகளுக்கும் தகுதியுள்ளவர்களுக்குதகுதியுள்ளவர்களுக்கும் மட்டும் தெரியும் ஆடைகள் என மாற்றிவிட்டார்.<ref>Wullschlager 2000, p. 176</ref>
 
==உருவாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/பேரரசரின்_புதிய_ஆடைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது