"உயிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''உயிர் ({{audio|Ta-உயிர்.ogg|ஒலிப்பு}}) (''Life'')''' என்பது உயிரியல் நிகழ்வுகள் அமைந்த புறநிலையான உருப்படிகளின் சிறப்பாகப் பிரித்துணர முடிந்த பான்மையாகும். இந்த உயிரியல் நிகழ்வுகளில் குறிகைபரப்பலும் தன்நிலைப்புறுதியும் அடங்கும். இறப்பாலோ அல்லது அவற்றுக்கு அப்பான்மைகள் இயல்பாகவே இல்லாததாலோ இந்நிகழ்வுகள் அமையாத புறநிலையான உருப்படிகள் உயிரற்றன அல்லது உறழ்பொருள்கள் எனப்படும். பல்வேறு உயிர்வாழ்தல் வடிவங்கள் நிலவுகின்றன. அவை [[தாவரங்கள்]], [[விலங்கு]]கள், [[fungus|காளான்]]கள், [[முகிழுயிரி]]கள், [[தொல்லுயிரிகள்]], [[குச்சுயிரிகள்]] என்பனவாகும். இந்த வரன்முறை நச்சுயிரிகளையும் நச்சுயிரகங்களையும் வாய்ப்புள்ள தொகுப்புயிரிகளையும் உயிர் வாழ்வனவாக வரையறுக்க முடிந்ததாகவோ அல்லது வரையறுக்க இயலாததாகவோ அமையலாம். [[உயிரியல்]] உயிர்வாழ்தலைப் பற்றிய முதன்மை அறிவியலாகும். என்றாலும் மற்ற அறிவியல் புலங்களும் இப்புல விளக்கத்துக்கு உதவுகின்றன.
 
உயிர் பற்றிய வரையறை முரண்பாடானதாகும். நடப்பு வரையறை உயிரிகள் தன்நிலைப்புள்ளவை; உயிர்க்கலன்களால் ஆனவை; வளர்சிதைமாற்றமுள்ளவை; தொடர்ந்து வளர்பவை; சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்பவை:தூண்டலுக்கு ஏற்ப துலங்குபவை; இனப்பெருக்கம் செய்பவை என வரன்படுத்துகிறது. என்றாலும் வேறுபல வரையறைகளும் முன்மொழியப்படுகின்றன. நச்சுயிரிகள் போன்றவை விளிம்பு நிலையில் உள்ளனவாகும். வரலாறு முழுவதும் உயிர் பற்றி வரையறுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. உயிரின் இயல்புகள் பற்றியும் உயிரின் தோற்றம் பற்றியும் பொருள்முதலியம் போன்ற பல கோட்பாடுகள் உருவாகியுள்ளன. பொருள்முதலியம் உயிர் பொருண்மத்தில் இருந்தே தோன்றியது எனவும் உயிர் பொருண்மத்தின் சிக்கலான வடிவமே எனவும் கூறுகிறது; பொருள்வடிவியம் (''hylomorphism'') அனைத்து உருப்படிகளும் பொருண்மமும் வடிவமும் கொண்டவை எனக் கூறுகிறது. உயிர்வகையின் வடிவம் உயிர் அல்லது ஆன்மா என்கிறது; தன்னியல்புத் தோற்றம் உயிரற்றதில் இருந்தே உயிரும் உயிரியல்பும் தொடர்ந்து எழுகிறது எனக் கூறுகிறது. என்றாலும், உயிரிகள் உயிர்விசை அல்லது உயிர்ப்பொறியைக் கொண்டுள்ளன என்ற கருதுகோள் இப்போது வழக்கிறந்துவிட்டது. பல அறிவியல் புலங்களின் வளர்ச்சிகளை உள்ளீடாகக் கொண்ட நிகழ்கால வரையறை மிகவும் சிக்கலானதாகும். உயிரியற்பியலாளர்கள் வேதி அமைப்புகளைச் சார்ந்து பல வரையறைகளை முன்மொழிந்துள்ளனர்; கையா கருதுகோள் போன்ற உயிர்வாழ் அமைப்புகள் சார்ந்த சில வரையறைகளும் நிலவுகின்றன. கையா கருதுகோள் புவியை உயிருள்ளதாகக் கருதுகிறது. மற்றொரு கோட்பாடு உயிர் என்பது சூழல் அமைப்புகளினியல்பாக்க் கருதுகிறது. மேலும் ஒன்று, கோட்பாடு, கணிதவியல் உயிரியலின் கிளையான அருஞ்சிக்கல் அமைப்பு உயிரியலில் விரிவாக விளக்கப்படுகிறது. [[உயிரிலித் தோற்றம்]] எளிய கரிமச் சேர்மத்தில் இருந்து அதாவது உயிரற்ற பொருண்மத்தில் இருந்து உயிர் இயல்நிகழ்வாகத் தோன்றியதென விவரிக்கிறது.அனைத்து உயிரிகளின் பொதுவான இயல்புகள் உயிர்வேதியியல் நிகழ்வுகள் நிலைகொள்ள, சில அடிப்படை வேதித் தனிமங்களின் தேவையைச் சுட்டுகின்றன.
 
இயற்பியலாளர்களான, [[ஜான் பர்னல்]], [[எர்வின் சுரோடிங்கர்]], [[இயூஜீன் விக்னர்]], [[ஜான் அவெரி]] ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, சூழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்துக்கொண்டு தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை ஈடுகட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான நிகழ்முறைமையாகும். உயிரானது பின்னர் தான் உள்வாங்கிக்கொண்டவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிடுகிறது.
 
புவியில் உயிர் 4.28 பில்லியன் ஆண்டுகள் அளவிலேயே தோன்றிவிட்டது. புவியில் நீர் தோன்றி, 4.41 பில்லியன் ஆனுகளுக்கு முன்பு கடல்கள் உருவானதும் உயிர் தோன்றியுள்ளது. அதாவது 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி தோன்றியதும் நெடுங்காலம் எடுத்துகொள்ளாமல், சிறிய காலத்துக்குப் பிறகே உயிர் முகிழ்த்துவிட்டது. புவியில் அண்மையில் நிலவும் உயிர் ஆர் என் ஏ உலகில் இருந்து மரபாக வந்ததாகும். ஆர் என் ஏ உயிர்வகைதான் முதலில் தோன்றியதா என்பதும் இன்னமும் உறுதியாகவில்லை. புவியில் உயிரிலிவழியாக உயிர் எந்நிகழ்வு அல்லது இயங்கமைப்பு உருவாகியது என்பது இன்னமும் அறியப்படவில்லை. என்றாலும் பல கருதுகோள்கள் உருவாகியுள்ளன. இவை பெரும்பாலும் மில்லர்-யூரே செய்முறையைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பழைய அறியப்பட்ட உயிர் வடிவங்களாகக் குச்சுயிரிகளின் புதைபடிவங்களே கிடைத்துள்ளன. அறிவியலாளர்கள் 2016 ஜூலையில் இன்று நிலவும் அனைத்துயிரிகளுக்கான மிக அனைத்துப் பொதுவான மூதாதையில் (LUCA) 355 மரபன் கணங்கள் உள்ளனவாக இனங்கண்டுள்ளனர்.<ref name="NYT-20160725">{{cite news |last=Wade |first=Nicholas |authorlink=Nicholas Wade |title=Meet Luca, the Ancestor of All Living Things |url=https://www.nytimes.com/2016/07/26/science/last-universal-ancestor.html |date=25 July 2016 |work=New York Times |accessdate=25 July 2016 }}</ref>
 
முதல் தொடக்கத்தில் இருந்தே, புவிவாழ் உயிர் புவியியல் கால கட்டந்தோறும் தான் வாழும் சூழலைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது. பெரும்பாலான சூழல் அமைப்புகளில் உயிர்தரிக்க உயிர் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைந்திருக்க வேண்டும். சில அருஞ்சூழல் நுண்ணுயிரிகள், புறநிலையாகவும் புவி வேதியியலாகவும் புவிவாழ் உயிருக்குப் புறம்பான அவை வாழ்வதற்கே இயலாத அருஞ்சூழல்களில் உயிர்தரிக்க வல்லனவாக அமைகின்றன. உயிரினத்தை முதலில் வகைபடுத்தியவர் அரிசுடாட்டில் தான். பின்னர் இலின்னேயசு உயிரினங்களுக்கான (சிறப்பினங்களுக்கான) ஈருறுப்பு பெயரீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நாளடைவில், உயிரின் புதிய குழுக்களும் வகையினங்களும் கண்டறியப்பட்டன. .உயிர்க்கலனின் கண்டுபிடிப்பும் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பும் வாழும் உயிரிகளின் இடையே நிலவும் உறவுக் கட்டமைப்பைப் பேரளவில் மாற்றவைத்தன. உயிர்க்கலங்கள், உயிரின் மிகச் சிறிய அலகுகளும் கட்டுமான உறுப்புகளும் ஆகும். இவற்றில் முற்கருவன் உயிர்க்கலன், முழுக் கருவன் உயிர்க்கலன் என இருவகைகள் உண்டு. இருவகையிலும் மென்படலத்தால் உறையிடப்பட்ட கலக்கணிகம் அமைந்துள்ளது. இதில் உட்கரு அமிலம், புரதம் போன்ற பல உயிர்மூலக்கூறுகள் அமைந்துள்ளன. உயிர்க்கலப் பிளவு வழி உயிர்க்கலங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிகழ்வில் ஒரு தாய் உயிர்க்கலன் இரு சேய்க்கலன்களாகின்றன.
 
உயிர் புவியில் மட்டுமே உள்ளதாக இப்போது அறியப்பட்டாலும், புவிக்கப்பாலும் புடவியில் உயிர் நிலவ வாய்ப்புள்ளதாக பல அறிவியலாளர்கள் கூறுகின்றனர். [[செயற்கை உயிர்]] என்பது மாந்தனால் உருவாக்கப்பட்ட, அல்லது கணினிவழி மீளாக்கம் செய்யப்பட்ட உயிரின் கூறுபாடு ஆகும். இது இயற்கை உயிர் சார்ந்த அமைப்புகளை ஆய்வு செய்ய உதவுகிறது. [[இறப்பு]]என்பது உய்ரி நிலைத்துவாழ உதவும் உயிரியல் நிகழ்வுகளும் செயல்பாடுகளும் முடிவுக்கு வருதலாகும்.எனவே உயிர்வாழ்தலின் முடிவும் ஆகும். [[மறைதல்]] அல்லது அழிதல் என்பது முழு குழு அல்லது வகையன், வழக்கமாக உயிரினம் (சிறப்பினம்) இறத்தல் அல்லது அழிதலாகும். உயிரிகளின் தடயங்களை இன்றும் சுட்டும் எச்சங்களாக தொல்லுயிர் புதைபடிவங்கள் அமைகின்றன.
 
உலகிலுள்ள பொருள்களைக் உறழ்திணை, உயிர்த்திணை என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் உயிர்த்திணை அல்லது உயிரி என வரையறுக்கிறது. உயிரி தூண்டினால் துலங்கும். இனப்பெருக்கம் செய்யும். வளர்ந்து புதிதாக உருவாகும். தன்நிலைப்பு உறும்.
# '''[[உயிர்க்கலன் வளர்ச்சி|வளர்தல்]]''': வளர் மாற்றம் சிதைமாற்றத்தை விட ஓங்கியிருத்தல் வலர்ச்சியைத் தருகிறது. வளரும் உயிரி, வெறுமனே பொருண்மத்தை திரட்டாமல், அதன் அனைத்துப் பகுதிகளிலும் தன் உருவளவைக் கூட்டுகிறது.
# '''[[தகவமைதல்]]''': சூழலுக்கு ஏற்ப துலங்கி கால அளவில் தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை. இது படிமலர்தலூக்கு அடிப்படையானதாகும். இது உயிரியின் மரபுபேற்றாலும் உணவாலும் புறக்காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.
# ''' [[தூண்டல் (உடலியங்கியல்)|தூண்டலுக்குத்]]''' துலங்குதல்: தூண்டலுக்கான துலங்கல், புற வேதிமங்களுக்கு ஆற்றும் ஒற்றைக்கல உயிரியின் சுருங்கலில் இருந்து பலகல உயிரியின் அனைத்து புலன்களும் உள்ளிட்ட சிக்கலான எதிர்வினைகள் வரை எதுவாகவும் அமையலாம். இந்தத் துலங்கல் இயக்கமாக வெளிப்படுகிறது; எடுத்துகாட்டாக, ஒளியீர்ப்பாலும் வேதிமத் தூண்டலாலும் சூரியனை நோக்கித் திரும்பும் தாவர இலைகளைக் கூறலாம்.
# '''[[இனப்பெருக்கம்]]''': இது பாலுறவிலாமல் தனி முதலுயிரியில் இருந்தோ பாலுறவால் தனி இருபெற்றோரில் இருந்தோ புதிய தனித்தனி உயிரிகளை உருவாக்கும் திறமையாகும்.
 
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2615583" இருந்து மீள்விக்கப்பட்டது