"ஹிப்போவின் அகஸ்டீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
(spelling mistake)
|prayer_attrib=
}}
'''ஹிப்போவின் அகஸ்டீன்''' அல்லது ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் (ஆங்கிலம்:Augustine of Hippo) எனப்படும் புனித அகுஸ்தீன் (நவம்பர் 13, 354 – ஆகஸ்ட் 28, 430) கத்தோலிக்க திருச்சபையாலும் பிற பல கிறித்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்ஜீரியாவில் அமைந்திருந்த ஹிப்போ ரீஜியஸ் என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் ஹிப்போ நகர் அகுஸ்தீன் என அழைக்கப்படுகின்றார்[1].
 
இலத்தீன் மொழி பேசிய மெய்யியலாளரும் இறையியலாளருமான அகுஸ்தீன் உரோமைப் பேரரசின் பகுதியாக இருந்த வட ஆப்பிரிக்க மாகாணத்தில் வாழ்ந்தார். திருச்சபைத் தந்தையருள் ஒருவராகப் போற்றப்படும் இவர் மேலை நாட்டுக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தார். இளமைப் பருவத்தில் இவர் மானி (கி.பி. சுமார் 216-276) என்பவரால் தொடங்கப்பட்ட "மனிக்கேயிச" (Manichaeism) கொள்கையால்[2] பெரிதும் கவரப்பட்டார். பின்னர் புளோட்டினஸ் என்னும் மெய்யியலாரின் கொள்கையிலிருந்து பிறந்த "புது-பிளேட்டனிசம்" (Neo-Platonism) என்னும் கொள்கையைத்[3] தழுவினார்.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618244" இருந்து மீள்விக்கப்பட்டது