"விலங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*திருத்தம்*)
*** ''[[Tullimonstrum]]''[[அற்றுவிட்ட இனம்|†]]
}}
 
 
'''விலங்குகள்''' (''Animals''), '''அனிமாலியா''' (''Animalia'') அல்லது '''மீடாசொவா''' (''Metazoa'') [[திணை (உயிரியல்)|இராச்சிய]]த்தின் பெரும்பாலும் பலசெல் கொண்ட, [[மெய்க்கருவுயிரி]] [[உயிரினம்|உயிரினங்களின்]] ஒரு மிகப் பெரும் பிரிவாகும். அவை வளர்ச்சியுறுகையில் அவற்றின் உடல் திட்டம் இறுதியில் நிலைபெறுகிறது. சில தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில் [[உருமாற்றம் (உயிரியல்)|உருமாற்ற]] நிகழ்முறைக்குள் செல்கின்றன. அநேக விலங்குகள் [[இடம்பெயர்பவை|இடம்பெயரும்]] தன்மையுடையவை. அவற்றால் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் நகர முடியும். பல விலங்குகள் [[கொன்றுண்ணி பழக்கமுடையவை|கொன்றுண்ணிப் பழக்க]] முடையவையாகவும் உள்ளன. அதாவது தங்கள் [[வாழ்வாதாரம்|வாழ்க்கைக்கு]] அவை பிற உயிரினங்களை சாப்பிட்டாக வேண்டும்.
 
== பெயர்வரலாறு ==
"அனிமல்" என்ற ஆங்கில வார்த்தை ''அனிமலே'' என்கிற [[இலத்தீன்]] வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இது ''அனிமா'' என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்குப் பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக [[மனிதன்|மனித]]ரல்லாத விலங்குகளைக்{{Fact|date=May 2009}} குறிக்கிறது. விலங்கு ராச்சியம் (''Kingdom Animalia'') என்னும் இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை மனிதன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் குறிக்கிறது.
 
== பண்புகள் ==
 
=== உடலமைப்பு ===
விலங்குகள் தனித்தனி [[உயிரியல் திசு|திசுக்களாகப்]] பிரிக்கப்பட்ட உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும் கடற்பாசிகள் (துளையுடலிகள் (''Porifera'') தொகுதி) மற்றும் [[பிளாகோசோவா|பிளகோசோவா]] ஆகிய மிகக் குறிப்பிடத்தக்க சில விதிவிலக்குகளும் உண்டு. சுருங்கக் கூடியதும் நகர்வை கட்டுப்படுத்தத்தக்கதுமான [[தசை]]கள், மற்றும் சமிக்ஞைகளை அனுப்புகிறதும் பரிசீலிப்புக்குட்படுத்துவதுமான [[நரம்பு மண்டலம்|நரம்பு மண்டலத் திசு]] ஆகியவை இந்த உடலமைப்பில் அடங்கும். பொதுவாக ஒரு உள்ளமைந்த [[செரிமானம்|செரிமான]] அறையும் ஒன்று அல்லது இரண்டு திறப்புகளுடன் அமைந்திருக்கும். இந்த வகை ஒழுங்கமைப்புடன் கூடிய விலங்குகள் மெடாசோவான்கள் (பலசெல் உயிரினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அல்லது முந்தையது பொதுவாக விலங்குகளைக் குறிப்பிடப் பயன்படும் இடங்களில் இமெடாசோவான்கள் (''eumetazoans'') என்று அழைக்கப்படுகின்றன.
 
=== இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி ===
ஏறக்குறைய எல்லா விலங்குகளுமே ஒரு வகை பால்முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அவை ஒரு சில சிறப்பியல்பான இனப்பெருக்க செல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சிறிய நகரும் [[ஸ்பெர்மடோசூன்|விந்தணுக்கள்]] அல்லது பெரிய நகரா சினை முட்டைகளை உருவாக்க [[மியாசிஸ்|குன்றல் பிரிவு(meiosis)]] நடக்கிறது. இவை ஒன்றிணைந்து [[கருமுட்டை]]களை (''zygotes'') உருவாக்கி, அவை புதிய தனிஉயிர்களாய் வளர்ச்சியுறுகின்றன.
 
[[பாலிலா இனப்பெருக்கம்|பாலில்லா இனப்பெருக்க]]த் திறனையும் பல விலங்குகள் கொண்டிருக்கின்றன. (பார்தெனோஜெனிசிஸ் மூலம்) இனப்பெருக்க திறனுடைய முட்டைகள் கலவியின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன, அல்லது சில சந்தர்ப்பங்களில் [[சிறுகூறாகல் (இனப்பெருக்கம்)|சிறுகூறாகல்]] (''fragmentation'') மூலமாகவும் இது நடைபெறுகின்றது.
 
ஒரு [[கருமுட்டை]]யானது கருக்கோளம் (''blastula'') என்னும் ஒரு உள்ளீடற்ற கோளத்திற்குள் ஆரம்பத்தில் வளர்கிறது. இது மறுஒழுங்கமைவுக்கும் வேறுபாட்டிற்கும் (''differentiation'') உள்ளாகிறது. கடற்பாசிகளில், கருக்கோள லார்வாக்கள் ஒரு புதிய இடத்திற்கு நீந்திச் சென்று ஒரு புதிய கடற்பாசி இனமாக உருவாகிறது. பல பிற குழுக்களில், கருக்கோளமானது இன்னும் சிக்கலான மறுஒழுங்கமைவுக்குள் உட்செல்கிறது. இது முதலில் [[உள்மடிவு|உள்மடிந்து]] ஒரு செரிமான அறை, மற்றும் இரண்டு தனியான நுண்ணுயிர் அடுக்குகள் - ஒரு வெளிப்புற [[புற அடுக்கு (ectoderm)|எக்டோதெர்ம் (புற அடுக்கு)]] மற்றும் ஒரு உள்முக [[அகஅடுக்கு (endoderm)|என்டோதெர்ம் (அக அடுக்கு)]] - கொண்ட ஒரு [[ஈரடுக்கு கருக்கோளம்|ஈரடுக்கு கருக்கோள]]த்தை (gastrula) உருவாக்குகிறது. இந்த திசு அடுக்குகள் பின் வேறுபாட்டிற்கு உள்ளாகி, திசுக்கள் மற்றும் உறுப்புகளாக உருவாகின்றன.
 
=== உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம் ===
மிருகவேட்டை என்பது வேட்டையாடும் விலங்கு (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு) தனது இரையை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்ளும் ஒரு உயிரியல் [[உயிரியல் பரிமாற்றநிகழ்வு|பரிமாற்ற நிகழ்வாகும்]]. வேட்டை விலங்குகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம். ஆனால் மிருகவேட்டை எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு பிணந்திண்ணி (''detritivory'') வகை ஆகும். அதாவது இறந்த [[உயிர்மப் பொருள்|உறுப்பாக்கமுடைய உணவை]] நுகர்வது. சமயங்களில் இரண்டு [[உண்ணும் நடத்தை|உண்ணும் பழக்க]]த்திற்கும் இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும். உதாரணமாக [[ஒட்டுண்ணி|ஒட்டுண்ணி உயிர்வகைகள்]] ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன. பின் சிதைவுறும் அந்த உடலை தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான ஆயுதப் போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு [[மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகள்|மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவு]]களுக்கு வழிவகுத்துள்ளது.
 
அநேக விலங்குகள் சூரிய ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் இந்த [[ஆற்றல்|சக்தி]]யை [[ஒளிச்சேர்க்கை]] எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை எளிய [[சர்க்கரைகள்|சர்க்கரை]]களாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. கரியமில வாயு (CO<sub>2</sub>) மற்றும் [[நீர்]] (H<sub>2</sub>O) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளி சக்தியை குளுகோஸ் (C<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub>) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் வேதியியல் சக்தியாக மாற்றி [[பிராணவாயு|பிராண வாயு]]வை (O<sub>2</sub>) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம். இந்த நிகழ்முறை [[கிளைகோலைசிஸ்]] என்று அழைக்கப்படும்.
 
== மூல ஆதாரங்கள் மற்றும் புதைபடிவ பதிவு ==
விலங்குகள் பொதுவாக ஒரு சவுக்குயிர் யூகார்யோட்டில் இருந்து [[பரிணாமம்|பரிணாமமுற்றிருக்கலாம்]] என்று கருதப்படுகிறது. அவற்றின் மிக நெருங்கிய வாழும் உறவினர்களாகக் கருதப்படுவது [[சோவனோஃபிளாகெல்லேட்டு|சோவனொஃபிளாகெல்லேட்டு]]கள் என்கிற, சில கடற்பாசிகளின் சோவனொசைட்டுகளை ஒத்த உருவமைப்பியல் கொண்ட கழுத்துப்பட்டியுடனான சவுக்குயிர்களாகும் (''flagellates''). [[செல்கூறு]] ஆய்வுகள் விலங்குகளை [[ஒபிஸ்தோகோன்ட்|ஒபிஸ்தோகோன்ட்ஸ்]] என்னும் சிறப்புகுழுவில் வகைப்படுத்துகின்றன. இதில் சோவனொஃபிளாகெல்லேட்டுகள், [[பூஞ்சை]]கள் மற்றும் கொஞ்சம் சிறிய ஒட்டுண்ணி வகை [[அதிநுண்ணுயிரி|ஒருசெல் உயிரின]]ங்கள் ஆகியவை அடங்கும். அநேக விலங்குகளின் முதிர்ந்த விந்தணுவில் இருப்பது போன்று நகரும் செல்களில் கசையிழைகள் (flagellum) பிற்பக்க அமைவு கொண்டிருப்பதில் இருந்து இந்த பெயர் வருகிறது. பிற யூகார்யோட்டுகள் முற்பக்க கசையிழைகள் கொண்டிருக்க விழைகின்றன.
 
விலங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முதல் புதைவுகள் [[கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய|கேம்ப்ரியன் காலத்துக்கு முந்தைய]] காலத்தினதாய் தோன்றுகின்றன. இவை சுமார் 610 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த புதைவுகளாகும். ஆயினும், இவை பிற்கால புதைவுகளுடன் தொடர்புபடுத்த கடினமானவையாக உள்ளன. சில நவீன விலங்கு தொகுதிகளுக்கு முன்னறிவிப்பினை குறித்ததாய் இருந்தாலும் கூட அவை தனித்தனியான குழுக்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்; அவை விலங்குகளே அல்ல என்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது. அவை தவிர, அநேக அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்ப்ரியன் காலத்தில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோற்றம் செய்கின்றன. கேம்ப்ரியன் வெடிப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது, வெவ்வேறு குழுக்கள் இடையிலான ஒரு துரித விலகுபாதையைக் குறிக்கிறதா அல்லது புதைவடிவத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளிலான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்பது இன்னமும் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. ஆயினும் புதைபடிவங்கள் மூலம் ஆதிகாலத்து வாழ்க்கை வடிவங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களும் (''paleontologists'') மற்றும் நிலநூல் வல்லுநர்களும் முன்னர் கருதப்பட்டதை விட வெகு முன்னதாகவே, சாத்தியமான அளவில் ஏறக்குறைய 1 பில்லியன் வருடங்களுக்கும் முன்னதாக, விலங்குகள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். தோனியன் சகாப்தத்தில் காணப்பட்ட தடங்கள் மற்றும் பொந்துகள் போன்ற புதைவு சுவடுகள், மெடோசோவான்கள் போன்ற டிரிப்ளோபிளாஸ்டிக் புழுக்கள் ஏறக்குறைய மண்புழுக்கள் அளவுக்கு பெரியதாகவும் (சுமார் 5 மிமீ அகலம்) சிக்கலானதாகவும் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.<ref name="Seilacher1998">{{cite journal
| title=Animals More Than 1 Billion Years Ago: Trace Fossil Evidence from India
| journal=Science
 
== விலங்குத் தொகுதிகள் ==
=== துளையுடலிகள் (''Porifera'') ===
[[படிமம்:Elephant-ear-sponge.jpg|thumb|left|ஆரஞ்சு யானைக் காது கடற்பாசி. முன்புலத்தில். இரண்டு பவளப்பூச்சிகள். பின்புலத்தில்: ஒரு கடல் விசிறி மற்றும் ஒரு கடல் கம்பி.]]
கடற்பாசிகள் (துளையுடலிகள்) ஆரம்பத்தில் பிற விலங்குகளிடம் இருந்து பிரிந்து தோன்றியதாகத் தான் வெகு காலம் கருதப்பட்டு வந்தது. மேலே குறிப்பிட்டதைப் போல, அவற்றில் பிற பல விலங்கு தொகுதிகளில் காணப்படும் சிக்கலான உடலமைப்பு இல்லாதிருக்கிறது. அவற்றின் செல்கள் வகையீடுற்றவை. ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் தனித்தனி திசுக்களாக ஒழுங்கமைக்கப்படாததாய் இருக்கிறது. கடற்பாசிகள் [[ஒட்டிவாழும்தன்மை (உயிரியல்)|ஒட்டிவாழ்பவை]]. பொதுவாக நீரை துளைகள் வழியே இழுப்பதின் மூலம் உணவு உட்கொள்கின்றன. ஆயினும் 2008 ஆம் ஆண்டில் 21 இனங்களில்<ref name="class">Dunn ''et al.'' 2008)."Broad phylogenomic sampling improves resolution of the animal tree of life". ''Nature'' 06614.</ref> 150 மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சிகை ஜெல்லிக்கள் தான் விலங்குகளின், குறைந்தபட்சம் அவற்றின் 21 தொகுதிகளின், அடிப்படையான வழிமரபாய் இருக்கலாம் என்று வெளிப்படுத்துகிறது.
 
இரண்டுக்கும் தனித்தனி திசுக்கள் உண்டு, ஆனால் அவை [[உறுப்பு (உடற்கூறியல்)|உறுப்பு]]களாக ஒழுங்கமைக்கப்படவில்லை. புற அடுக்கு (''ectoderm'') மற்றும் அகஅடுக்கு (''endoderm'') ஆகிய இரண்டு முக்கிய நுண்ணியிர் அடுக்குகள் மட்டுமே உண்டு. அவற்றுக்கு இடையில் செல்கள் மட்டும் சிதறிக் காணப்படும். உள்ளபடியே, இந்த விலங்குகள் சில சமயங்களில் [[டிப்ளோபிளாஸ்டிக்|ஈரடுக்கு]] (''diploblastic'') விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. சின்னஞ்சிறு [[பிளாகோசோவா|பிளாகோசோவான்கள்]] ஒத்தவையாக இருக்கும். ஆனால் அவற்றுக்கு நிரந்தரமான செரிமான அறை ஒன்று இருக்காது.
 
எஞ்சிய விலங்குகள் பைலேடரியா என்னும் ஒற்றைத்தொகுதி குழுவை உருவாக்குகின்றன. அநேக பாகத்திற்கு, அவை இருசமபக்க ஒத்தமைவுடையவையாக இருக்கின்றன. பெரும்பாலும் உணவு உட்கொள்ளும் மற்றும் புலனுணர்வு உறுப்புகளுடனான சிறப்பியல்பான தலையைக் கொண்டுள்ளன. உடம்பு [[டிரிப்ளோபிளாஸ்டிக்|மூவடுக்கு]] கொண்டதாக இருக்கிறது. அனைத்து மூன்று நுண்ணுயிர் அடுக்குகளும் நன்கு-வளர்ச்சியடைந்தவையாக இருக்கின்றன. திசுக்கள் நல்ல வகைப்பட்ட உறுப்புகளை உருவாக்குகின்றன. செரிமான அறை இரண்டு திறப்புகளைக் கொண்டுள்ளது. ஒரு வாய் மற்றும் ஒரு மலத்துவாரம், கொயலம் (''coelom'') அல்லது சூடோகொயலம் (''pseudocoelom'') என்னும் இன்னொரு உள்முக உடல் துவாரமும் உள்ளது. ஆயினும் இந்த பண்புகளில் ஒவ்வொன்றுக்கும் விதிவிலக்குகள் உண்டு - உதாரணமாக முதிர்ந்த [[முட்தோலி|முட்தோலிகள் (''echinoderm'')]] ஆரவகையில் இருசமபக்கம் ஒத்தவையாக இருக்கும். சில ஒட்டுண்ணி புழுக்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உடல் அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
 
பைலேடரியாவுக்கு உள்ளான உறவுகள் மீதான நமது புரிதலில் மரபணு ஆய்வுகள் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. அநேகமானவை டியூடெரோஸ்டோம்கள் மற்றும் புரோடோஸ்டோம்கள் என்னும் இரண்டு முக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவையாகத் தோன்றுகின்றன.
டியூடெரோஸ்டோம்கள் புரோடோஸ்டோம்கள் என்று அழைக்கப்படும் பிற பைலேடரியாக்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. இரண்டிலுமே ஒரு முழுமையான செரிமான பாதை உண்டு. ஆயினும், புரோடோஸ்டோம்களில் ஆரம்ப துவாரம் (ஆர்சென்டெரான்) வாயாக வளர்ச்சியுறுகிறது, மலத்துவாரம் தனியாக உருவாகிறது. டியூடெரோஸ்டோம்களில் இது தலைகீழாய் நடக்கிறது. டியூடெரோஸ்டோம்கள் ஒரு வயிற்றுப்பக்கத்தை விட, முதுகுப்பக்க நரம்பு நாணை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் முளைக்கருக்கள் ஒரு வேறுபட்ட பிளவுக்குள் உட்செல்கின்றன.
 
இவையெல்லாம் டியூடெரோஸ்டோம்களும் புரோடோஸ்டோம்களும் தனித்தனியான, ஒற்றைத்தொகுதி வம்சாவளிகள் என்பதைக் காட்டுகின்றன. டியூடெரோஸ்டோம்களின் முக்கிய தொகுதி முட்தோலிகள் (''Echinodermata'') மற்றும் முதுகெலும்புள்ளவை (Chordate)ஆகியவை. முந்தையது ஆரவடிவில் இருசமபக்கம் ஒத்தவை, நட்சத்திர மீன், கடல் முள்ளெலி, மற்றும் கடல் வெள்ளரிகள் போன்ற கடல்நீரில் மட்டும் வாழ்கின்றவை. பிந்தையவை முதுகெலும்பு கொண்ட விலங்குகளான [[முதுகெலும்பு பெற்றவை (vertebrate)|வெர்டிப்ரேட்]]டுகள் வகையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவையாகும். இவற்றில் [[மீன்]], நீர்நில வாழ்விகள், [[ஊர்வன]], [[பறவை]]கள், மற்றும் [[பாலூட்டி]]கள் ஆகியவை அடங்கும்.
 
சடோநாதா அல்லது அம்பு புழுக்களும் டியூடெரோஸ்டோம்களாக இருக்கலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அவற்றின் புரோடோஸ்டோம் தொடர்புகளை கூறுகின்றன.
=== எக்டிசாசோவா ===
[[படிமம்:Sympetrum flaveolum - side (aka).jpg|thumb|மஞ்சள்-சிறகு தட்டாம்பூச்சி]]
எக்டிசாசோவாக்கள் புரோடோஸ்டோம்கள் ஆகும். இவை சிறகுதிர்ப்பது அல்லது [[தோலுரிதல்|தோலுரிவதன்]] (''ecdysis'') மூலம் வளரும் பொதுவான பழக்கத்தால் இந்த பெயரிடப்பட்டன. மிகப்பெரும் விலங்கு தொகுதியான கணுக்காலிகள் (''Arthropoda'') இதற்கு சொந்தமானதே. இதில் [[பூச்சி]]கள், [[சிலந்தி]]கள், [[நண்டு]]கள் மற்றும் அவற்றின் உறவினங்கள் அடக்கம். இந்த அனைத்து உயிரினங்களும் பொதுவாக இணை ஒட்டுறுப்புகளுடன் உடல் தொடர்ச்சியான பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு கொண்டுள்ளன. ஓனிகோபோரா மற்றும் டார்டிகிராடா ஆகிய இரண்டு சிறு தொகுதிகளும் கணுக்காலிகளின் (''Arthropoda'') நெருங்கிய உறவினங்கள். இவை இதே பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
 
எக்டிசாசோவாக்கள் நெமடோடா அல்லது உருளைப்புழுக்களையும் அடக்கியிருக்கின்றது. இவை இரண்டாவது மிகப்பெரிய விலங்கு தொகுதியாகும். உருளைப்புழுக்கள் பொதுவாக நுண்ணுயிர்களாக இருப்பதோடு, ஏறக்குறைய நீர் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் காணப்படக்கூடியவை. ஏராளமானவை முக்கியமான ஒட்டுண்ணிகள். நெமடோமார்பா அல்லது குதிரைமுடி புழுக்கள், மற்றும் கினோரின்ஜா, பிரியபுலிடா, மற்றும் [[லோர்சிஃபெரா|லோரிசிஃபெரா]] ஆகியவை அவற்றுக்குத் தொடர்புடைய சிறு தொகுதிகள் ஆகும். இந்த பிரிவுகள் சூடோகொயலம் (''pseudocoelom'') என்று அழைக்கப்படுகிற ஒரு குறைந்துபட்ட கொயலமைக் கொண்டுள்ளன.
 
புரோடோஸ்டோம்களின் எஞ்சிய இரண்டு பிரிவுகளும் சில சமயங்களில் ஒன்றாக ஸ்பைரலியா என்று ஒரே பிரிவாக பகுக்கப்படுகின்றது. காரணம் இரண்டிலுமே முளைக்கருக்கள் சுருள் பிளவுடன் உருவாகின்றன.
=== பிளாட்டிசோவா ===
[[படிமம்:Bedford's Flatworm.jpg|thumb|பெட்ஃபோர்டின் தட்டைப்புழு]]
பிளாட்டிசோவாவில் தட்டைப்புழுவினம் (''Platyhelminthes''), தட்டைப்புழுக்கள் ஆகிய தொகுதிகள் அடக்கம். இவை ஆரம்பத்தில் மிக ஆதி காலத்து பைலேட்டரியா வகைகளில் சிலவாகக் கருதப்பட்டன. ஆனால் அவை அதனை விட சிக்கலான மூதாதையரிடம் இருந்து வளர்ச்சியுற்றிருக்கலாம் என்பதாக இப்போது கருதப்படுகிறது.<ref>{{cite journal |coauthors=Ruiz-Trillo, Iñaki; Riutort, Marta; Littlewood, D. Timothy J.; Herniou, Elisabeth A.; Baguñà, Jaume |year= 1999 |month= March |title=Acoel Flatworms: Earliest Extant Bilaterian Metazoans, Not Members of Platyhelminthes |journal=Science |volume=283 |issue=5409 |pages=1919–1923 |doi=10.1126/science.283.5409.1919 |accessdate= 2007-12-19 |author=Ruiz-Trillo, I. |pmid=10082465 }}</ref>
 
[[தட்டைப்புழு|ஒட்டுயிர் தட்டைப் புழு]]க்கள் (''flukes'') மற்றும் நாடாப்புழுக்கள் போன்ற ஏராளமான ஒட்டுண்ணிகள் இந்த குழுவில் அடங்கியுள்ளன. தட்டைப் புழுக்கள் [[உடற்குழியற்றவை (அகோலோமேட்)|உடற்குழியற்றவை]].<ref name="umodena">{{cite web |url=http://www.gastrotricha.unimore.it/overview.htm |title=Gastrotricha: Overview |accessdate=2008-01-26 |last=Todaro |first=Antonio |work=Gastrotricha: World Portal |publisher=University of Modena & Reggio Emilia}}</ref>
 
பிற பிளாட்டிசோவா தொகுதிகள் பெரும்பாலும் நுண்ணுயிரி வகைகளாக [[உடல் குழி உடையவை#(pseudocoelomate)|உடற்குழி உள்ளவை (''pseudocoelomate'') ]]களாக இருக்கின்றன. இவற்றில் மிகப் பிரதானமானவை ரோடிஃபெரா உயிரினங்கள் ஆகும். இவை நீர்ப்புற சூழ்நிலைகளில் மிகச் சாதாரணமாய் காணப்படும். இவற்றில் அகான்தோசெபாலா அல்லது ஊசிமுனைத்-தலை புழுக்கள், நதோஸ்டோமுலிதா, மைக்ரோநதோசோவா, மற்றும் சாத்தியமான அளவில் சைக்ளிஃபோரா ஆகியவையும் அடங்கும்.<ref name="IntroCyclio">{{cite journal |last=Kristensen |first= Reinhardt Møbjerg |year=2002 |month=July |title=An Introduction to Loricifera, Cycliophora, and Micrognathozoa |journal=Integrative and Comparative Biology |volume=42 |issue=3 |pages=641–651 |doi =10.1093/icb/42.3.641 |url=http://icb.oxfordjournals.org/cgi/content/full/42/3/641 |accessdate= 2008-01-26 |publisher = Oxford Journals }}</ref> இந்த பிரிவுகள் எல்லாம் சிக்கலான தாடைகள் கொண்டிருப்பதைப் பகிர்ந்து கொள்கின்றன. இதிலிருந்து இவை நாதிஃபெரா (''Gnathifera'') என்று அழைக்கப்படுகின்றன.
 
=== லோபோட்ரோசாசோவா ===
[[படிமம்:Grapevinesnail 01.jpg|thumb|ரோமன் நத்தை, ஹெலிக்ஸ் போமாசியா]]
லோபோட்ரோசாசோவா மெல்லுடலிகள் (''Mollusca'') மற்றும் வத்தசைப்புழுக்கள் (''Annelida'') ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான விலங்கு தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.<ref>{{cite web |url=http://www.lophelia.org/lophelia/biodiv_6.htm |title=Biodiversity: Mollusca|accessdate=2007-11-19 |publisher=The Scottish Association for Marine Science}}</ref><ref>{{cite video | people = Russell, Bruce J. (Writer), Denning, David (Writer) | title = Branches on the Tree of Life: Annelids| medium = VHS | publisher = BioMEDIA ASSOCIATES | year = 2000 }}</ref> விலங்கு தொகுதியில் இரண்டாவது மிகப்பெரியதான முன்னையதில், நத்தைகள், கிளிஞ்சல்கள், மற்றும் கடற்கணைகள் ஆகியவை அடக்கம். பிந்தையதில் மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் போன்ற கூறுபிரிந்த புழுக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் அவற்றில் பொதுவாக இருக்கும் ட்ராகோபோர் லார்வாக்களின் காரணமாக நெடுங்காலமாக நெருங்கிய உறவினங்களாக கருதப்படுகின்றன. ஆனால் வத்தசைப்புழுவினம் (''Annelida'') கணுக்காலிகளுக்கு (''Arthropoda'') நெருங்கியவையாகக் கருதப்படுகின்றன.<ref>{{cite journal| coauthors=Eernisse, Douglas J.; Albert, James S.; Anderson , Frank E. | title=Annelida and Arthropoda are not sister taxa: A phylogenetic analysis of spiralean metazoan morphology | journal=Systematic Biology | volume=41 | issue=3 | pages = 305–330 | year = 1992 | accessdate = 2007-11-19 | doi=10.2307/2992569 | author=Eernisse, Douglas J. }}</ref> ஏனென்றால் இரண்டும் கூறுபட்ட உடல் கொண்டவை.<ref>{{cite journal| coauthors=Kim, Chang Bae; Moon, Seung Yeo; Gelder, Stuart R.; Kim, Won | title=Phylogenetic Relationships of Annelids, Molluscs, and Arthropods Evidenced from Molecules and Morphology | journal=Journal of Molecular Evolution | volume=43 | issue=3 | pages = 207–215 | publisher = Springer | location = New York | month = September | year = 1996 | url = http://www.springerlink.com/content/xptr6ga3ettxnmb9/ | doi = 10.1007/PL00006079 | accessdate = 2007-11-19 | author=Eernisse, Douglas J.| format={{dead link|date=January 2009}}–<sup>[http://scholar.google.co.uk/scholar?hl=en&lr=&q=intitle%3APhylogenetic+Relationships+of+Annelids%2C+Molluscs%2C+and+Arthropods+Evidenced+from+Molecules+and+Morphology&as_publication=Journal+of+Molecular+Evolution&as_ylo=1996&as_yhi=1996&btnG=Search Scholar search]</sup> }}</ref>
 
லோபோட்ரோசாசோவா நெமர்டியா அல்லது ரிப்பன் புழுக்கள், சிபுன்குலா, மற்றும் லோபோபோர் என்று அழைக்கப்படும் வாயைச் சுற்றி அமைந்த ஒரு பிசிர் உரோம அமைப்பு விசிறியைக் கொண்டிருக்கும் பல தொகுதிகள் ஆகியவற்றையும் அடக்கியிருக்கிறது.<ref>{{citation | url = http://www.ucmp.berkeley.edu/glossary/gloss7/lophophore.html | title= The Lophophore| author =Collins, Allen G. | author-link = http://www.paleobio.org/agc/ | year = 1995 | publisher = University of California Museum of Paleontology}}</ref> அவை மரபுவழியாக லோபோபோரேட்டுகள் என்று ஒன்றாக பிரிக்கப்பட்டு வந்தன.<ref>{{cite journal| coauthors=Adoutte, André; Balavoine, Guillaume; Lartillot, Nicolas; Lespinet, Olivier; Prud'homme, Benjamin; de Rosa, Renaud | title=The new animal phylogeny: Reliability and implications | journal=Proceedings of the National Academy of Sciences | volume=97 | issue=9 | pages = 4453–4456 | date = April, 25 2000 | url = http://www.pnas.org/cgi/content/full/97/9/4453 | pmid=10781043 | accessdate = 2007-11-19 | doi=10.1073/pnas.97.9.4453 | author=Adoutte, A. }}</ref> ஆனால் இப்போது அவை பாராபைலெடிக் என்றும்,<ref>{{Citation | first = Yale J. | last = Passamaneck | contribution = Woods Hole Oceanographic Institution | title = Molecular Phylogenetics of the Metazoan Clade Lophotrochozoa | year = 2003 | pages = 124 | url = http://handle.dtic.mil/100.2/ADA417356 | format = PDF }}</ref> சில நெமர்டியாவுக்கு நெருக்கமானவை என்றும், சில மெல்லுடலிகள் (''Mollusca'') மற்றும் வத்தசைப்புழுக்களுக்கு (''Annelida'') நெருக்கமானவை என்றும் கருதப்படுகிறது.<ref>{{cite journal| coauthors=Sundberg, Per; Turbevilleb, J. M.; Lindha, Susanne | title=Phylogenetic relationships among higher nemertean (Nemertea) taxa inferred from 18S rDNA sequences | journal=Molecular Phylogenetics and Evolution | volume=20 | issue=3 | pages = 327–334 | month = September | year = 2001 | doi = 10.1006/mpev.2001.0982 | accessdate = 2007-11-19 | author=Adoutte, A. }}</ref><ref>{{cite journal| coauthors=Boore, Jeffrey L.; Staton, Joseph L | title=The mitochondrial genome of the Sipunculid Phascolopsis gouldii supports its association with Annelida rather than Mollusca | journal=Molecular Biology and Evolution | volume=19 | issue=2 | pages = 127–137 | month = February | year = 2002 | issn = 0022-2844 | url = http://mbe.oxfordjournals.org/cgi/reprint/19/2/127.pdf | format=PDF | pmid=11801741 | accessdate = 2007-11-19 }}</ref> புதைபடிவ பதிவுகளில் பிரதானமாகக் காணப்படும் பிராசியோபோடா அல்லது விளக்கு கூடுகள், என்டோபிராக்டா, போரோனிடா, மற்றும் சாத்தியமான அளவில் பிரையோசோவா அல்லது பாசி விலங்குகளும் இவற்றில் அடங்குகின்றன.<ref>{{cite journal | last = Nielsen | first = Claus | year = 2001 | month = April | title = Bryozoa (Ectoprocta: ‘Moss’ Animals) | journal = Encyclopedia of Life Sciences | publisher = John Wiley & Sons, Ltd | doi = 10.1038/npg.els.0001613 | url = http://mrw.interscience.wiley.com/emrw/9780470015902/els/article/a0001613/current/abstract | accessdate = 2008-01-19 }}</ref>
 
== மாதிரி உயிரினங்கள் ==
விலங்குகளில் காணப்படும் பெரும் பன்முகத்தன்மை காரணமாக, தேர்ந்தெடுத்த ஒரு சிறு எண்ணிக்கையிலான உயிரின வகைகளை ஆய்வு செய்து, பல்வேறு விஞ்ஞானிகளது வேலைகளுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்தி, பொதுவாக விலங்குகள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த முடிவுகளுக்கு அதிலிருந்து தேற்றம் செய்து கொள்வது தான் விஞ்ஞானிகளுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் உகந்ததாக இருக்கிறது. வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது என்பதால், பழப் பூச்சியான ''ட்ராசோபிலா மெலனோகாஸ்டர்'' மற்றும் நெமடோடெ ''கெனோஹப்டிடிஸ் எலிகான்ஸ்'' ஆகியவை தான் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பலசெல் விலங்கு (''metazoan'') [[மாதிரி உயிரினம்|மாதிரி உயிரின]]ங்களாக இருக்கின்றன. இவை தான் மரபணு ரீதியாக குறியீடு பிரிக்கப்பட்ட முதல் வாழ்க்கை வடிவங்களாகவும் இருக்கின்றன. அவற்றின் மரபணுத் தொகுதியின் நிலை இதற்கு வசதி செய்தது. ஆனால் அதன் மறுபக்க பிரச்சினை என்னவென்றால் பல மரபணுக்கள், இன்ட்ரான்கள் மற்றும் மரபணு இணைப்புகள் காணாதிருக்கும். இந்த எக்டிஸோசோவாக்கள் பொதுவாக விலங்குகளின் மூலம் குறித்து கொஞ்சம் தான் கற்றுத்தர முடியும். சூப்பர்ஃபைலத்திற்குள்ளாக இந்த வகை பரிணாமத்தின் நீட்சியானது தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் கிரஸ்டசீன், வத்தசைபுழுவினம், மற்றும் மெல்லுடலிகள் [[மரபணுத்தொகுதித் திட்டம்|மரபணுத் திட்ட]]ங்களின் மூலம் தெரிய வரும். ஸ்டார்லெட் கடல் அனிமோன் மரபணுத்தொகுதியின் ஆய்வானது, இமெடாசோவாவுக்கென பிரத்யேகமான 1500 பழமைப்பட்ட மரபணுக்களின் வருகையை விளக்குவதில் கடற்பாசிகள், பிளாகோசோவாக்கள், மற்றும் சோவனோஃபிளாகெல்லேட்டுகள் இவையும் குறியீட்டு வரிசைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன.<ref>
{{cite journal
|author=N.H. Putnam, ''et al.''
| pmid = 17090697 }}</ref>
 
விலங்குகள் ராச்சியத்திற்கு சொந்தமான பிற மாதிரி உயிரினங்களில் எலி (''[[மஸ் மஸ்குலஸ்|Mus musculus]]'' ) மற்றும் வரிக்குதிரைமீன் (''[[டேனியோ ரெரிரோ|Danio rerio]]'' ) ஆகியவை அடக்கம்.
 
[[படிமம்:Carolus Linnaeus (cleaned up version).jpg|thumb|நவீன பாகுபாட்டியலின் தந்தை என அறியப்படும் கரோலஸ் லினீயஸ்]]
 
== வகைப்பாட்டு வரலாறு ==
வாழும் உலகத்தை [[அரிஸ்டாட்டில்]] விலங்குகள் மற்றும் [[தாவரம்|தாவர]]ங்கள் எனப் பிரித்தார். இதனைத் தொடர்ந்து காலக்கிரம வகைப்படுத்தலில் கரோலஸ் லினீயஸ் (''Carl von Linné'') வகைப்படுத்தல் வந்தது. அப்போது முதல் உயிரியல் நிபுணர்கள் பரிணாம உறவுகளில் அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த குழுக்கள் ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, நுண்ணியிர் [[புரோடோசோவா|ஒரு செல் விலங்குகள் (''protozoa'')]], அவை நகர்பவை என்பதால், ஆரம்பத்தில் விலங்குகள் எனக் கருதப்பட்டன. ஆனால் இப்போது அவை தனி வகையாகக் கருதப்படுகின்றன.
 
[[கரோலஸ் லினீயஸ்|லினீயஸின்]] ஆரம்ப வகைப்பாட்டில், விலங்குகள் மூன்று ராச்சியங்களில் ஒன்றாக, வெர்மெஸ் (''Vermes''), [[பூச்சி|இன்செக்டா]] (''Insecta''), [[மீன்|மீன்கள்]] (''Pisces''), [[நிலம் நீர் வாழ்விகள்|நீர் நில வாழுயிர்]] (''Amphibia''), [[பறவை|பறவையினம்]] (''Aves''), மற்றும் [[பாலூட்டி|மம்மாலியா]] (Mammalia) ஆகிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அது முதல் கடைசி நான்கும் [[கோர்டேட்|கார்டேடா]] (''Chordata'') என்னும் ஒற்றை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டன. பல பிற வடிவங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. மேற்கண்ட பட்டியல்கள் இந்த பிரிவு குறித்த நமது தற்போதைய புரிதலைக் குறிப்பிடுகிறது. ஆயினும் மூலத்திற்கு மூலம் சில வேறுபாடுகள் உள்ளது.
 
== கூடுதல் பார்வைக்கு ==
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2619042" இருந்து மீள்விக்கப்பட்டது