குறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
no
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 1 edit by 2401:4900:1732:7964:1:2:42E8:47B2 (talk) to last revision by Gowtham Sampath. (மின்)
வரிசை 10:
== வாழ்க்கை முறை ==
வேட்டையாடிய மான் இறைச்சி, தேன், தினை மாவு, மூங்கில் கூடை, மருத்துவ குணம் கொண்ட வேர்கள், பச்சிலைகள், போன்ற பொருட்களை மலையில் இருந்து எடுத்து வந்து மலையை சுற்றி உள்ள நகரங்களில் விற்பனை செய்வார்கள்.அதற்கு பதிலாக நகரத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற உணவு பொருட்களை வாங்கி செல்வார்கள். மலையில் இருந்து வரும் பொழுது ஆண்களும், பெண்களும் சேர்ந்து வருவார்கள். நகரத்திற்குள் வந்தவுடன் ஒரு பகுதியில் கூடாரம் அமைத்து, சிறு, சிறு குழுக்களாக வியாபாரத்திற்கு செல்வார்கள். பெண்கள் கைரேகை பார்க்கலியோ.!!! என்று கூவி, கூவி வீதிகளில் சுற்றுவர். நகரத்தில் உள்ள பெண்மணிகள் இவ்ர்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்ப்பர்.ஏனெனில் இவர்கள் கூறும் பலன்கள் அப்படியே பலிக்கும் என முழு நம்பிக்கை வைத்திருப்பார்கள். கைரேகை பார்க்கும் பொழுது இந்த சமுதாய பெண்கள் தான் வாழும் மலைகளின் சிறப்புகளையும்,அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் பாட்டாக பாடி பலன் சொல்வார்கள்.குறிப்பிட்ட நாட்களில் தங்களுடைய வியாபாரத்தை முடித்து கொண்டு மீண்டும் மலையை நோக்கி சென்று விடுவர்.
 
== மொழி ==
குறவர்கள் ஆதி மொழியான தமிழை அறிந்திருந்தாலும், இவர்களுக்கென்று சங்கேத சொற்கள் உண்டு. இந்த பாசைகளை வெறும் பேச்சளவில் தான் பயன் படுத்தி வந்திருக்கிறார்கள்.
 
:காவலர் என்றால் "வாளான்" என்றும்,"வாளான்டி" என்றும்
:மனிதரை குறிப்பிட்டு சொல்லும் போது " பூத்தை" என்றும்,
:அந்த என்ற சொல்லுக்கு " அச்சு" என்றும்,
:அந்த மனிதன் என்ற சொல்லுக்கு "அச்சு பூத்தை" என்றும்,
:சோறு என்ற சொல்லுக்கு " மருக்கம் " என்றும்,
:பெரிய மனிதர்கள் என்ற சொல்லுக்கு " பெருமாச்சி பூத்தை" என்றும்,
:பெண்கள் என்ற சொல்லுக்கு " பொம்பூத்தை" என்றும்,
:ஆண்கள் என்ற சொல்லுக்கு " ஆம்பூத்தை" என்றும்,
:இரு என்ற சொல்லுக்கு " இருசு" என்றும்,
:போ என்ற சொல்லுக்கு " பிச்சு" என்றும்,
:கறி என்ற சொல்லுக்கு " பச்சம்பு" என்றும்,
 
:பணம் என்ற சொல்லுக்கு "கவயம்" என்றும்,
:காசு என்ற சொல்லுக்கு " சொனியம்' என்றும்,
:சாப்பிடு என்ற சொல்லுக்கு " மோச்சு" என்றும்,
:வீடு என்ற சொல்லுக்கு "பெரடு" என்றும்,
:தண்ணீர் என்ற சொல்லுக்கு " உமுண்டி" என்றும்,
:சாராயம், கள் என்ற சொல்லுக்கு "வேண்டி" என்றும்,
:நாய் என்ற சொல்லுக்கு " காவா" என்றும்,
:கோழி என்ற சொல்லுக்கு " பொருப்பத்தான்" என்றும்,
:பன்றி என்ற சொல்லுக்கு " மூசுவான்" என்றும்,
:பூனை என்ற சொல்லுக்கு " காஞ்சுவான்" என்றும்,
அவர்களுக்குள் பேசி கொள்ளும் பாசைகளில் இதுவும் சில சொற்கள் ஆகும்.
 
== உறவுமுறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குறவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது