"ஜவகர்லால் நேரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

569 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
ஞா. ஸ்ரீதர்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (ஞா. ஸ்ரீதர்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
== திருமணம் ==
[[கமலா நேரு|கமலா கவுல்]] என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 பிப்ரவரி 7 இல் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் [[இந்திரா காந்தி]] என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால் 1936 இல் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இருந்தாலும் பின்னாளில் 1946 இன் வைசிராயான [[மவுண்ட்பேட்டன் பிரபு|இலூயி மவுன்ட்பேட்டனின்]] மனைவி [[எட்வினா மவுண்ட்பேட்டன்]] உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கருத்துகள் உண்டு<ref>{{cite news|url= http://www.expressindia.com/news/fullstory.php?newsid=89537|title= Nehru-Edwina were in love: Edwina's daughter|date= 15 July 2007|publisher=''[[இந்தியன் எக்சுபிரசு]]''|accessdate= 21 May 2010}}</ref>. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் உடன்பிறந்தாள் [[விஜயலட்சுமி பண்டிட்|விசயலட்சுமி பண்டிதையருடனும்]] வாழ்ந்தார்.
 
== அரசியல் ==
 
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் [[ஜாலியன்வாலா பாக் படுகொலை|ஜாலியன்வால்லாபாக்கில்ஜாலியன்வாலாபாக்கில்]] ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது<ref name=history>http://www.history.com/topics/jawaharlal-nehru</ref>. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.
=== சிறை வாழ்க்கை ===
1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு ''உலக வரலாற்றின் காட்சிகள்'' (1934), ''சுயசரிதை'' (1936) மற்றும் ''இந்தியாவின் கண்டுபிடிப்பு'' ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2622283" இருந்து மீள்விக்கப்பட்டது